ஆளுக்கொரு ஆசை (2003 திரைப்படம்)
ஆளுக்கொரு ஆசை (Aalukkoru Aasai) என்பது 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] எசு.ஏ. இராஜ்குமார் படத்திற்கு இசையமைத்தார்.[2] வகைநடிகர்கள்
கதைகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. நகரத்தில் வாழும் ஒரு இளைஞனுக்கு மூன்று கனவுகள், அவை முதல் கனவு நன்கு படித்து வேலைக்குச் செல்லும் பெண்ணை மணமுடித்து மனைவியாக்குவது, இரண்டாவது கனவு தனக்கென்று ஒரு சொந்த வீடு கட்டுவது, மற்றும் மூன்றாவது கனவு ஒரே ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொண்டு சிறப்பாக வளர்ப்பது என்பதே. ஆனால், அவனது தாத்தாவுக்கும் பாட்டிக்கும் இதில் விருப்பமில்லை. தங்களது விருப்பத்திற்குகேற்ப ஒரு பெண்ணை அவன் எதிர்பார்க்கும் தகுதிகள் இருப்பதாக பொய் சொல்லி ஏமாற்றி பேரனுக்குக் கட்டி வைக்கிறார்கள். அந்த பெண்ணின் விருப்பம் வீட்டிலேயே இருந்து கணவனுக்கு சேவை செய்வது, கோவில் குளம் செல்வது, நிறைய குழந்தைகள் பெற்றுகொள்வது என இருக்கிறது. மேலும் அவர் படிப்பறிவில்லாத பெண். மனைவியின் ஆசைகள் நிறைவேறுகின்றன, கணவனின் கனவுகள் சிதைகின்றன. வீட்டை வெறுத்து வெளியேறும் அந்த இளைஞனுக்கு வேறொரு பெண்ணின் சகவாசம் கிடைக்கிறது. அங்கேயே தங்குகிறான்.ஆளுக்கொரு ஆசை என்று இருந்தாலும் மனைவியின் முயற்சியால் திரும்பவும் குடும்பத்துடன் இளைஞன் இணைகிறான் என்பதைச் சொல்லும் கதை. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia