இந்திய மின்சாரத் துறை(Electricity sector in India), 2020 ஜனவரி 31 இன் நிலவரப்படி, 403.459 கிகாவாட் நிறுவனத் திறன் கொண்ட ஒற்றைத் தேசிய மின்கட்டமைப்பாகும். உலக மின்னாக்கத்தில் இந்திய மூன்றாம் இடம் வகிக்கிறது.[6]
நிதியாண்டு 2019–20 இன்படிடீந்தியாவின் மொத்த மின்னாக்கம் 1,598 டெவாம ஆகும். இதில் 1,383.5 டெவாம அளவு மின்னாக்கம் அரசு மின்நிலையங்களின் பங்களிப்பாகும்.[7][8]
தொகு தனியர் மின் நுகர்வு 2019 ஆம் நிதியாண்டில் 1,208 கிவாம ஆகும்.[7]
இந்தியா மின்னாக்கத்தில் உலகின் மூன்றாம் பெரிய நாடாக உள்ளதுபோலவே, மின் நுகர்விலும் உலகின் மூன்றாம் பெரிய நாடாகும்.[9][10] நிதியாண்டு 2015-16 இல் இந்தியாவின் வேளாண்மை மின் நுகர்வு உலக நாடுகள் அனைத்திலும் மிகவும் பேரளவாக (17.89%) அமைந்தது.[3]
இந்தியாவில் மின்கட்டணம் குறைவாக இருந்தாலும் தனியருக்கான மின் நுகர்வு உலகின் பல நாடுகளை விட மிகவும் குறைவாகவே உள்ளது.[11]
நிதியாண்டு 2015-16 இல் இந்தியாவின் வேளாண்மை மின் நுகர்வு உலக நாடுகள் அனைத்திலும் மிகவும் பேரளவாக (17.89%) அமைந்தது.[3] இந்தியாவில் மின்கட்டணம் குறைவாக இருந்தாலும் தனியருக்கான மின் நுகர்வு உலகின் பல நாடுகளை விட மிகவும் குறைவாகவே உள்ளது.[11]
இந்தியத் தேசிய மின்கட்டமைப்பின் நிறுவனத் திறன் 2022 செப்டம்பரில் 407.8 கிகாவா ஆகும்.[2]
பெரியபு னல்மின் நிலையங்கள் உட்பட்ட புதுப்பிக்கவல்ல ஆற்றல் நிலையங்களின் நிறுவனத் திறன், மொத்த நிறுவனத் திறனில் 40.4% ஆக அமைகிறது.
அனல்மின் நிலையங்களின் சராசரி நிறுவுதிறன் காரணி 85% இயல்பளவுக்கு மாறாக 60% ஆக அமைகிறது.[12]
புதைபடிவ எரிபொருள் சாராத மின்னாக்கப் பங்களிப்பு 2029-30 ஆம் ஆண்டுக்குள் 44.7% அளவாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.[13]
இந்தியாவில் மின்னாக்கம் உபரியாக இருந்த போதும் தேவப்படும் அனைத்து மக்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் அகக்கட்டமைப்பு ஏற்பாடு இல்லை. இந்திய மக்கள் அனைவருக்கும் போதுமான மின்சாரம் கிடைக்காத குறையை 2019 மார்ச்சுக்குள் போக்க இந்திய அரசு "அனைவருக்கும் மின்சாரம்" எனும் திட்டத்தைத் தொடங்கியது.[14] இந்தத் திட்டம் தேவையான அகக்கட்டமைப்பை உருவாக்கி தொடர்ந்த, தடங்கல் இல்லாத மின்சாரத்தை அனைத்து வீடுகளுக்கும் தொழிலகங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் கொன்டுசெல்லும். இது இந்திய அரசும் மாநில அரசுகளும் இந்திய ஒன்றிய பகுதிகளும் இணைந்து தேவையான நிதியைப் பகிர்ந்து ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை வளர்க்கும் திட்டமாகும்.[15][16]
எரிபொருட்களின்படி, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறனளவில், நிலக்கரியால் இயங்கும் மின்நிலையங்களின் பங்கு 75% ஆக உள்ளது.[17][18]
இந்திய 2016 ஆம் ஆண்டின் தேசிய மின்சாரத் திட்ட வரைவு, 2027 வரை இந்தியாவுக்குப் புதுபிக்கவியலாத மின் நிலையங்கள் தேவையில்லை எனக் கருதுகிறது. ஏனெனில், அப்போதைக்குள் தற்போது கட்டிவரும் 50,025 மெவா நிலக்கரிவழி அனல்மின் நிலையங்களும் 275,000 மெவா புதுபிக்கவல்ல மின் நிலையங்களும் இயக்கத்துக்கு வந்துவிடும் எனக் கூறுகிறது.[19][20]
இந்திய மின்கட்டமைப்பில் ஏற்படும் இழப்பு 2010இல் 32%ஆக இருந்தது. இது உலகின் சராசரியான 15%ஐ விட இருமடங்காகும். இந்த இழப்பிற்கு தொழிற்நுட்பக் காரணங்களன்றி பிற காரணங்களும் உள்ளன. இவற்றில் பிழையான மின்னோட்ட அளவுமானிகளும் மின்திருடலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசு இந்த இழப்பினை 2022ஆம் ஆண்டிற்குள் 14.1%ஆக கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. கேரளாவில் நடத்தப்பட்ட ஓர் சோதனையோட்டத்தில் பிழையான அளவுமானிகளை மாற்றுவது மூலம் மின்இழப்பை 34% இலிருந்து 29%ஆக குறைக்க முடிந்துள்ளது.[21]
வரலாறு
முதல் மின்விளக்கு செயல் விளக்கம் கல்கத்தாவில்(இன்றைய கொல்கொத்தாவில்) 1897, ஜூலை, 24 இல் பி..டபுள்யு. பியூரி அண்டு குழுமத்தால் நிகழ்த்தப்பட்டது. கில்பர்ன் அணடு குழுமம் 1897 ஜனவரி 7 இல், இலண்டனில் 1897, ஜனவரி, 15 இல் பதிவு செய்த இந்திய எலெக்ட்ரிக் குழுமத்திடம் இருந்தும் அதன் சார்பாக அதன் முகவராகவும் கல்கத்தா மின்விளக்கு உரிமத்தைப் பெற்றுக் கொண்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு, பின்னர் கூறிய குழுமம், கல்கத்தா மின்வழங்கல் குழுமம் எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டது. என்றாலும், அதன் கட்டுப்படுத்தல் இலண்டனில் இருந்து கல்கத்தாவுக்கு 1970 இல் தான் மாறியது. கல்கத்தாவில் மின்பயன்பாட்டு முயற்சி வெற்றி பெற்றதும், மின்வழங்கல் பம்பாய்க்கும்(இன்றைய மும்பைக்கும்) அறிமுகப் படுத்தப்பட்டது.[22] மும்பையில் மின்விளக்கு செயல்விளக்கம் முதன்முதலாக, 1882 இல் கிராபோர்டு சந்தையில் நிகழ்த்தப்பட்டது. மும்பை மின்வழங்கல், டிராம்வேக்கள் குழுமம்(BEST) 1905 இல் ஒரு மின்நிலையத்தை மும்பை நகர டிராம்வேவுக்கு மின்வழங்கல் தர அமைத்தது.[23]
இந்தியாவின் முதல் மின்நிலையம் 1897 இல் டார்ஜிலிங்கு நகராட்சிக்காக, சிதுராபோங்கு நீர்மின் நலையம் ஒரு தேயிலைத் தோட்டத்துக்கு அருகில் நிறுவப்பட்டது.[24] ஆசியாவில் முதல் தெரு மின்விளக்கு 1905 ஆகத்து 5 இல் பெங்களூருவில் ஏற்றி வைக்கப்பட்டது.[25] இந்தியாவில் முதல் மின் தொடருந்து மும்பை புறநகர் வழித்தடமான துறைமுக வழித்தடத்தில் ஓடியது. இது பம்பாயின் விக்டோரியா முனையத்தில் இருந்து குர்லா தொடருந்து நிலையம் வரை1925, பிப்ரவரி, 3 இல் ஓடியது.[26] இந்தியாவில் ம்தல் மின்னழுத்த ஆய்வகம், 1947 இல் ஜபல்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நிறுவப்பட்டது.[27] கொச்சின் பன்னாட்டு விமானத் தளம் 2015, ஆகத்து, 18 இல் உலகிலேயே முதலில் முழுமையாக சூரிய மின்திறனால் இயங்கும் விமானத்தளமானது. இதன் தொடக்க விழாவில் இது சூரிய மின்திறன் திட்டம் சார்ந்த மின்நிலையத்துக்குக் காணிக்கையாக்கப் பட்டது.[28][29]
இந்தியா வட்டார மின்கட்டமைப்பு மேலாண்மையை 1960 களில் தொடங்கியது. தனித்தனி மாநில மின்கட்டமைப்புகள் வட்டார அளவில் ஒருங்கிணைத்து இந்தியா ஐந்து வட்டார மின்கட்டமைப்புகளை உருவாக்கியது. அவை வடக்கு, கிழக்கு,மேற்கு, வடக்கிழக்கு, தெற்கு வட்டாரங்களாகப் பெயரிடப்பட்டன. வட்டாரத்துக்குள் அமையும் உள் மின்கட்டமைப்புக்களை இணைக்கவும் மாநில உபரி மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் வட்டார மின் செலுத்தத் தொடர்கள் உருவாக்கி இணைக்கப்பட்டன. இந்திய அரசு 1990 களில் தேசிய மின் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடலானது. முதலில் வட்டார மின் கட்டமைப்புகளை இணைக்க உயர் மின்னழுத்த நேர்மின் செலுத்தத் தொடர்களைக் கட்டுபடுத்தப்பட்ட குறைந்த நிறுவனத் திறன் உபரி மின்சாரத்தை இருபுறமும் கடத்தும்படி வடிவமைக்கப்பட்டன. பிறகு இவை ஒத்தியங்குநிலையில் உயர் மின் திறனோடு இயங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டன.[30]
வட்டார மின் கட்டமைப்புகளின் இணைப்பு முதலில் 1991 இல் தொடங்கியது. முதலில் வடக்கிழக்கும் கிழக்கும் இணைக்கபாட்டன. இந்த கூட்டு மின் கட்டமைப்போடு மேற்கு வட்டாரம் 2003 இல் இணைக்கப்பட்டது. வடக்கு மின் கட்டமைப்பும் 2006 ஆகத்தில் கூட்டு மின்கட்டமைப்போடு இணைக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த மின் கட்டமைப்பு ஒரே அலைவெண்ணில் இயங்கத் தொடங்கியது.[30] எஞ்சிய தென்வட்டார மின் கட்டமைப்பு ஒன்றிய மின்கட்டமைப்போடு 2013 திசம்பர், 31 இல் இணைக்கப்பட்டது. இந்த இணைப்புக்காக, 765 கிவோ இரெய்ச்சூர்- சோலாப்பூர் உயர்மின்னழுத்தச் செலுத்தத் தொடர் இயக்கி வைக்கப்பட்டது. எனவே 2013 இன் இறுதியில் இந்தியத் தேசிய மின்கட்டமைப்பு முழுமையாக இயங்கத் தொடங்கியது.[30][31]
2015 ஆம் ஆண்டின் இறுதியில் நீர்மின்னாக்கம் வறிதாக அமைந்தாலும், இந்தியா மாபெரும் மின்னாக்கத் திறனோடு மின்சாரத்தில் உபரி நாடாகியது. மின் தேவை வளர்ச்சி மிகவும் தேவையானது.[20][32][33] 2016 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஆற்றல் விலை, குறிப்பாக இந்தியாவில் மின்னாக்கத்தில் பயன்படும் நிலக்கரி, டீசல், நாப்தால், தேக்க எரிபொருள், நீர்ம இயல்வளிமம் ஆகியவற்றின் விலையானது மிகமிகச் சரிந்தவாறே தொடங்கியது.[34][35][36][37][38] இதற்கு முன்பு, நிலக்கரி தவிர, நீர்ம இயல்வளிமம், நாப்தால் போன்ற பாறைநெய் விளைபொருள்களைப் பயன்படுத்தும் மின்நிலையங்கள் அவற்றின் கடுமையான விலையேற்றத்தால் இயங்கமுடியாமல் திணறின. உலக அளவிலான இப்பொருட்களின் கடும் விலைச் சரிவு முந்தி இருந்த சூழலை மாற்றியது. இவ்வாறு, எரிபொருள் விலை சரிந்து மலிவானதால், இவற்றைப் பயன்படுத்தும் மின்நிலையங்கள், சுரங்கவடி நிலக்கரி மின்நிலையங்களோடு, நுகர்வு வீதம் குறைந்த சந்தை நிலைமையிலும் போட்டிபோட்டு மின்னாக்கம் செய்ய முடிந்தது.[39] நிலக்கரிக்கான மிந்தேவை குறைந்தமையால், மின்நிலையங்கலிலும் சுரங்கங்களிலும் நிக்கரி இருப்புகள் கூடலாயின.[40] இந்தியாவில் 2016-17 இல் முதன்முதலில், புதிய புதுபிக்க்கவல்ல ஆற்றல் நிலையங்களின் நிறுவல், புதைபடிவ எரிபொருள் நிலையங்களின் நிறுவலை விட முந்தலானது.[41]
மின்சாரத் துறையின் அனைத்துப் பிரிவுகளும், அதாவது எரிபொருள் வழங்குநர்கள், எரிபொருள் போக்குவரத்து அமைப்புகள் ( இரெயில்வே, துறைமுகம், குழாய்வழித் தடங்கள் போன்றன.), மின்னாக்கக் குழுமங்கள், மின்செலுத்தத் தொடர்க் குழுமங்கள், மின் வழங்கல் குழுமங்கள் ஆகிய அமைப்புகள் அனைத்தும் கடுமையான போட்டிக்கு உள்ளாகி, தத்தமது ஆட்சித் திறமையைக் கூட்டுவதிலும் விலையைக் குறைப்பதிலும் தள்ளப்படும். நுகர்வோர் சந்தை மின்துறையில் ஓங்கும் வாய்ப்பு உருவாகும்.[42]
மின் நுகர்வு வேகமாக வளர்ந்து வருவதால், மின்நிலையங்களிலும் நிலக்கரிச் சுரங்கங்களிலும் நிலக்கரி கையிருப்புகள் தொடர்ந்து கூடிகொண்டே வருகின்றன.[40][43]
நடுவண் மின்சார ஆணையம் 2017, மார்ச்சு, 29 இல் இந்திய முதலில் அயல் நாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் நாடாகியது. அன்று இந்தியாவின் இறக்குமதி of 5,585 கிகாவாட்மணிகள் ஆகவும் ஏற்றுமதி 5,798 கிகாவாட்மணிகள் ஆகவும் அமைந்தது.
இந்திய அரசு 2016 இல் " அனைவருக்கும் மின்சாரம்" எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.[44] அனைத்து வீடுகளுக்கும் தொழிலகங்களுக்கும் வணிக நிறுவனக்களுக்கும் உறுதிப்படுத்த தேவையான தடங்கலற்ற மின்வழங்கலைத் தரவல்ல அகக்கட்டமைப்பை உருவாக்கி 2018 இல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.[45] இதற்கான நிதிவளத்தை இந்திய அரசும் மாநில, ஒன்றியப்பகுதி அரசுகள்லும் ஏர்பாடு செய்தன.[16][46]
நிறுவனத்திறன்
2022 அக்தோபர் நிலவரப்படி, மின்வாயில் வாரி, அரசு மின்நிலையங்களின் நிறுவனத் திறன்[47]
நிலக்கரி: 2,04,079 மெவா (50.0%)
பழுப்பு நிலக்கரி: 6,620 மெவா (1.6%)
வளிமம்: 24,824 மெவா (6.1%)
டீசல்: 562 மெவா (0.1%)
புனல்மின்: 46,850 மெவா (11.5%)
காற்று, சூரிய & பிற புஆ: 1,18,080 மெவா (29.0%)
ஆணுமின்: 6,780 மெவா (1.7%)
மொத்த மின்னாக்க நிறுவனத்திறன் கொள்ளளவு அரசு மின்நிலையங்கள், தனியார் தொழிலக மின்னாக்கம், தனியார் மின்நிலையங்கள் ஆகியவற்றின் நிறுவனத்திறன் கொள்ளளவுகளின் கூட்டலாகும்
நிலக்கரி, இயல்வளிமம் சார்ந்த அனல்மின் திட்டங்கள் 32,285 மெவா அளவுக்கு அணுக்கமாக, 2021, ஏப்பிரல், 1 ஆம் நாளன்று வரை கட்டுமானத்தில் உள்ளன.[50]
துறைப்பிரிவு வாரியாகவும் வகைமை வாரியாகவும் 2022 செப்டம்பர் 30 ஆம் நாளது வரையில், மொத்த மின்நிலையங்களின் நிறுவனத்திறன் கீழே வருமாறு.[2]
நிறுவன மின்னாக்கத் திறன், 30/09/2022 இல்
மின்வாயில்
Iநிறுவனத் திறன் (மெவா)
% பங்கு, மொத்தத்தில்
புதைபடிவ எரிபொருள்கல் (மொத்தம்)
236,086
57.9%
நிலக்கரி
204,079
50%
பழுப்பு நிலக்கரி
6,620
1.6%
இயல் வளிமம்
24,824
6.1%
டீசல்
562
0.1%
புதைபடிவம் சாரா எரிபொருள்கள் (மொத்தம்)
171,710
42.1%
புனல்மின்
46,850
11.5%
காற்று
41,666
10.2%
சூரிய
60,814
14.9%
Bio Mass Power/Cogen
10,206
2.5%
கழிவுவழி ஆற்றல்
495
0.1%
சிறு புனல்மின்
4,899
1.2%
அணுமின்
6,780
1.7%
மொத்த நிறுவனத் திறன்
407,797
100%
25 மெவா அளவுக்குக் கூடுதலாகவும் சமமாகவும் உள்ள புனல்மின் நிலையங்களின் மின்னாக்கத் திறன் புதுப்பிக்கவல்ல்ல வகைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன (சிபுநி(SHP) – சிறு புனல்மின் நிலையம்)
தொழிலக மின்னாக்கம்
நாட்டின் தொழிலக உரிமை மின்நிலையங்களின் உள்ளக நிறுவனத் திறன் (1 மெவா அளவுக்கும் கூடுதலான மின்திறன்) 2021, மார்ச்சு, 31 ஆம் நாளன்று 70,000 மெவா ஆகும்.[51] நிதியாண்டு 2020–21 இல், தொழிலக மின் ஆற்றலின் ஆக்கம் 200,000 கிகாவாம ஆகும்.[51][52] நாட்டின் டீசல் மின்னாக்க அணிகளின் நிறுவனத் திறன் of 75,000 MW capacity (1 மெவா மின் திறனுக்கும் கூடுதலாகவும் 100 கிவோஆ அளவுக்கும் குறைந்ததாகவும் நிறுவனத் திறன் உள்ளவை நீங்கலாக) ஆகும்.[53][54] மேலும் கூடுதலாக, அனைத்துத் துறைகளிலும் மின்நிறுத்தங்களின்போது நெருக்கடிநிலை மின்தேவைகளுக்காக, 100 கிவோஆ அளவுக்கும் குறைவான நிறுவனத்திறன் கொண்ட டீசல் மின்னாக்க அணிகள் பெருவாரியாக உள்ளன.[55]
தொழிலக மின்திறன் துறை
எண்
மின்வாயில்
தொழிலக மின்னாக்கத் திறன் (மெவா)
பங்கு
தொழிலக மின்னாக்க ஆற்றல் (கிகாவாம்)
பங்கு
1
நிலக்கரி
52,057
64.05%
169,138
86.78%
2
புனல்மின்
132
0.14%
351
0.09%
3
புதுப்பிக்கவல்ல ஆற்றல்
4,520
4.08%
7,268
1.79%
4
இயல் வளிமம்
7,389
11.46%
21,241
9.06%
5
எண்ணெய்
12,902
20.27%
2,002
2.24%
மொத்தம்l
70,000.00
100.00%
200,000
100.00%
மாநில அல்லது ஒன்றியப்பகுதி வாரியாக நிறுவனத் திறன
இது மின்னாக்க நிறுவனத் திறன் வாரியான இந்திய மாநிலங்கள், இந்திய ஒன்றியப்பகுதிகள் பட்டியல்.
2021 நவம்பர் 30 ஆம் நாளைய, மாநிலவாரி அனைத்திஎதிய மின்னாக்க நிறுவனத் திறன் [56]
INCLUDING ALLOCATED SHARES IN JOINT & CENTRAL SECTOR UTILITIES
பிற புதுப்பிக்கவல்ல ஆற்றல் வாயில்களில் 25 மெவா அளவுக்குக் கூடுதலாகவும் சமமாகவும் உள்ள சிறு புனல்மின் நிலையங்கள், உயிரிப்பொருண்மை மின்திறன், நகர, தொழிலகக் கழிழிவுவழி மின் திறன், சூரிய, காற்று ஆற்றல் மின் திறன் ஆகியன உள்ளடங்கும்
மின் தேவை
மின் தேவை வளர்போக்குகள்
நிதி ஆண்டு 2019-20 இன் போது ஆற்றல் கிடைப்புதிறம் 1284.44 பில்லியன் கிவாம ஆகவும் தேவைப் பற்றாக்குறை 6.5 பில்லியன் கிவாம (-0.5%) ஆக அமைந்தது. ஆனால், இந்த ஆண்டு சந்தித்த உச்சச் சுமை 182,533 மெவா ஆகவும் தேவைப்பட்ட சுமையின் பற்றாக்குறை 2,608 மெவா (-0.6%) ஆகவும் அமைந்தது. ஆனால், 2020 ஆம் ஆண்டு மின்சுமை ஆக்க நிலுவை அறிக்கையின் ஆண்டறிக்கையில், இந்திய நடுவண் மின் ஆணையம் 2020-21 ஆம் நிதி ஆண்டுக்கு எதிர்பார்த்த ஆற்றல் உபரியும் உச்சச் சுமை உபரியும் முறையே 2.7% ஆகவும் 9.1% ஆகவும் அமைந்தன.[57] சில மாநிலங்கள் ஆற்றல் பற்றாக்குறையைச் சந்திக்க நேர்ந்தாலும், உபரி உள்ள வட்டாரங்களில் இருந்து ஆற்றலை வட்டார உயர்திறன் செலுத்தத் தொடரிணைப்புகள் வழியாக பெற முடிந்தது.[58] மிகக் குறைவான மின்கட்டணம் விதித்தபோதும், 2015 ஆம் நாட்காட்டி ஆண்டில் இந்தியா, மின்பகிர்வு சிக்க்லைத் தவிர, மற்றபடி மின் உபரி நாடாக ஆனது.[32][33][59][60]
மின்தேவை முடுக்கிகள்
உலக மக்களில் 1.4 பில்லியன் பேருக்கு மின்சாரம் கிடைக்கவில்லை; இதில் இந்தியாவில் மட்டும் 0.07% வீடுகளைச் சார்ந்த 0.2 மில்லியன் பேருக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. பன்னாட்டு ஆற்றல் முகமை, இந்தியா2050 ஆம் ஆண்டுக்குள் 600 கிகாவாட் முதல் 1,200 கிகாவாட் வரை கூடுதலான் மின்னாக்கத் திறனை உண்டாக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது.[21] இந்த கூடுதல் மின்னாக்கத் திறன், 2005 இல் ஐரோப்பிய ஒன்றியம் இணைத்த 740 கிகாவாட் மொத்த மின்னாக்கத் திறனுக்குச் சமமாகும். இந்தக் கூடுதல் மின்னாக்கத் திறனை இணைக்க இந்தியா பயன்படுத்தும் எரிபொருள் வாயில்களும் தொழில்நுட்பங்களும், உலக ஆற்றல் வாயில்களின் கணிசமான பயன்பாடு கடுமையான சுற்றுச்சூழல் தாக்கத்தை உண்டாக்கும்..[61]
இந்திய சுற்றுச்சூழல், காடு, காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தியக் குளிர்வூட்டல் செயல்திட்ட அறிக்கை, 8% அளவு இந்திய வீடுகள் மட்டுமே காற்றுப்பதனக் குளிர்வூட்டும் அணிகளைக் கொண்டுள்ளனமிந்தியாவில் இந்தக் குளிர்வூட்டல் தேவை, 2017-18 இல் இருந்து 15-20% வீதத்தில் ஆண்டுதோறும் உயர்வதாகக் கணக்கிட்டு, 2037-38 இல் எட்டு மடங்காக கூடும் எனவும் இது மொத்த இந்திய மின் தேவையில் 45% ஆக, 2050 இல் அமையும் எனவும் கூறுகிறது.[62]
136 மில்லியன் இந்தியர்கள்(11%) விறகையும் வேளாண்கழிவுகளையும் விறட்டியையும் மரபாக சமைக்கவும் வெந்நீர் வைக்கவும் பயன்படுத்துகின்றனர்.[63] இந்த மரபான் எரிபொருள்கள், இந்தியாவின் சில பகுதிகளில் சமையல் அடுப்பிலோ அல்லது சூளையிலோ இட்டு எரிக்கப்படுகின்றன..[64]
மரபு எரிபொருள்கள் திறமற்ற ஆற்றலாகும். இவை ஏராளமான புகையைக் கக்குகின்றன, PM10 வகை துகள்கள், காலக ஆக்சைடுகள்(NOX), கந்தக ஆக்சைடுகள்(SOX), PAHs, பாலியரோமேட்டிக் பொருள்கள், பார்மால்டிகைடு,,கரிம ஓராக்சைடு, பிற காற்று மாசுகளை வெளியிடுகின்றன.[65][66][67] உலக நலவாழ்வு நிறுவனம் உள்ளடங்கிய சில அறிக்கைகள், மரபு எரிபொருள் எரிப்பதால் இந்தியாவில் 300,000 முதல் 400,000 பேர் உள்ளகக் காற்று மாசாலும் கரிம ஓராக்சைடு மாசாலும் ஒவ்வோராண்டும் இறப்பதாகக் கூறுகின்றன.[68] தொழில நிலக்கரி எரிப்பைவிட 5 முதல் 15 மடங்கு மாசுகளை பழைய சமையல் அடுப்புகளில் எரிக்கும் மரபு எரிபொருட்கள் தேவையில்லாமல் வெளியிடுகின்றன. இது வெளிப்புறக் காற்றின் தரத்தை இழியச் செய்கிறது. தூசுப்பணி, புகைப்பணி மாசைக் கூட்டி, நாட்பட்ட நல்வாழ்வுச் சிக்கல்களை உண்டாக்குகிறது. புவிக் கால நிலையையும் சூழல் அமைப்புகளையும் காடுகளையும் தரந்தாழ்த்துகிறது. மின்சாரம் போன்ற தூய எரிப்பு முறைக்கான ஆற்றல் வளங்களும் எரிப்புத் தொழில்நுட்பங்களும் நம்பகமாகக் கிடைத்தால் ஒழிய, இந்தியாவில் பரவலாகப் புழக்கத்தில் உள்ள ஊரக, நகர்ப்புற மரக்கட்டை, உயிர்க்கூள எரிப்பு குறையவோ நிறுத்தவோ வாய்ப்பில்லை என இந்த அறிக்கைகள் முன்வைக்கின்றன. இந்திய மின்சாரத் துறை வளர்ச்சி இவ்வகை மரபு எரிப்பு முறைகலுக்கான நீடிப்புதிற மாற்றாக அமைய வாய்ப்புள்ளது.
இந்தக் காற்று மாசுச் சிக்கல்கள் மட்டுமன்றி, ஓர் 2007 ஆம் ஆண்டு ஆய்வு அறிக்கை, பதப்படுத்தாத கழிவு வெளியேற்றம் இந்திய தரைப்பரப்பையும் நிலத்தடி நீர்வளத்தையும் மாசுறுத்தும் ஒற்றைக் காரணியாக அமைதலைச் சுட்டிக் கட்டுகிறது. இந்தியாவில் வீட்டு கழிவுநீர் உருவாக்கத்துக்கும் பதப்படுத்தலுக்கும் இடையே பேரளவு இடைவெளி அமைகிறதுகீந்தியாவில் கழிவுநீர் பதப்படுத்த்ல் அமைப்புகள் போதுமானவையாக உள்ளதோடு, நிலவும் கழிவுநீர் பதப்படுத்தல் நிலையங்கள் இயங்கிட ஏற்றநிலையில் பேணப்படுவதும் இல்லை. இந்த நிலையங்களை இயக்க போதுமான நம்பகமுள்ள மின்சாரம் கிடைக்காததால் பெரும்பாலான அர்சு கழிவுநீர் பதப்படுத்தல் நிலையங்கள் பெரும்பாலான நேரம் மூடி வைக்கப்படுகின்றன. இப்பகுதிக் கழிவுநீர் மண்ணில் ஊறி நிலமாசை ஏற்படுத்துகிறது அல்லது ஆவியாகி, காற்றுமாசைக் கூட்டிவிடுகிறது. மேற்பரப்பில் தேங்கும் அகற்றப்படாத திண்மக் கழிவுகள் திரள்வதால், நகர்ப்புறம் துப்புரவற்று நல்வாழ்வுச் சிக்கல்களை உருவாக்குகிறது. அடர்மாழைக் கழிவும் பிற மாசுறுத்திகளும் நிலத்திலும் நிலத்தடி நீரிலும் கரைந்தூறுகின்றன.[69][70] இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளும் ஏரிகளும் குளங்களும் நீர்நிலைகளும் கடுமையாக மாசுற்றுள்ளன. இந்த நீர்மாசு ஆற்றிலும் சதுப்புநிலத்திலும் கடலிலும் வாழும் உயிரினங்களுக்கும் தீம்பு விளைவிக்கிறது. இந்திய நீர்மாசையும் பிற சூழல்கேட்டையும் நீக்கிட நமகத்தன்மை வாய்ந்த மின்னாக்கமும் மின்வழங்கலும் கட்டாயமாகின்றன.
இந்திய மின்சாரத் துறையின் பிற முடுக்கிகளாக, விரைந்து முன்னேறும் பொருளியல், உயரும் ஏற்றுமதிகள், அகக்கட்டமைப்பு மேம்பாடு, உயரும் வீட்டு வருமானம் ஆகியன அமைகின்றன.
இதோடுகூட, நிலக்கரி சார்ந்து இந்தியாவின்60% மின்னாக்கம் அனல்மின் நிலையங்களால் அமைவதால் அண்மையில் நிலக்கரி நெருக்கடி எழுந்துள்ளது.[71]
* ஒவ்வோராண்டும் மார்ச்சு 31 இல் முடியும் நிதியாண்டு சார்ந்த தரவுகள். .
குறிப்பு: தனியர் மின்நுகர்வுனனைத்து வாயில்களின் தொகு மின்னாக்கமும் நிகர இறக்குமதியும்)மாண்டு நடு மக்கள்தொகை. 'மின்நுகர்வு' என்பது மின்செலுத்த இழப்புகளையும் மின்நிலைய அக மின்நுகர்வையும் கழித்த பிறகான அனைத்து வாயில்களின் தொகு மின்னாக்கமும் நிகர இறக்குமதியும்.
இந்தியாவில் 2009 இல் வீட்டு மின்சாரத் தனியர் நுகர்வு ஊரகத்தில் 96 கிவாம ஆகவும் நகரத்தில் 288 கிவாம ஆகவும் அமைந்தது ஆனால், உலகளாவிய நிலையில் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் வீட்டுத் தனியர் மின் நுகர்வு 2,600 கிவாம ஆகவும் நகரத்தில் 6,200 கிவாம ஆகவும் அமைகிறது.[73]
2017 திசம்பர், 31 ஆம் நாளைய நிலவரப்படி இந்தியாவில் 99.73% ஊரகங்களுக்கு, அதாவது, 597,464 ஊர்களுக்கு மின்வழங்கல் இணைக்கபட்டுள்ளது.[74] ஊரக இந்தியாவில் மின்வழங்கள் நிலவும் பகுதிகளிலும் அடிக்கடித் தடங்கல் ஏர்படுவதால் நம்பகத்தண்மை அற்றதாகவே அமைகிறது.[16]
மிசோரம் (98.58%, 10), ஜம்மு அண்டு காசுமீர் (98.52%, 99)
98% வீதத்துக்கும் குறைவு
அருணாச்சலப் பிரதேசம் (80.92%, 1,003)
இந்திய மின் ஆற்றல் அமைச்சகம் ஊரகப் பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், தீன் தயாள் உபாத்தியாயா கிராம் சோதி யோசனா திட்டத்தைத்(DDUGJY) 2015, ஜூலையில் தொடங்கியது . இது ஊரக வீடுகளுக்கும் வேளாண்மைக்கு தனித்தனி மிந்தொடரைப் பிரித்து ஊரக மின் வழங்கலைச் சீர்திருத்தி மின்செலுத்தமும் வலிவாக்க கவனம் குவித்தது. பகிர்வையும் இதில் முந்தையஊரக மின்மயமாக்கம்த்துக்கான இராசீவ் காந்தி கிராமீன் வித்யுக்திகாரன் யோசனா (RGGVY) உள்ளடக்கப்பட்டது.[76]
இந்தத் திட்டத்தின்படி, 2018 ஜனவரி, 31 வரையில், 142 மில்லியன் ஊரக வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இது மொத்த ஊரக வீடுகள் 181 மில்லியனில் 79% ஆகும்.[77]
இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் அடர் தூசுப் பனி, கரும்கரிமப் புகை கவிந்துள்ளதைக் காட்டும் செயற்கைக்கோள் புடங்கள். இச்சிக்கல் வடக்கிந்தியக் கங்கைப் படுகை நெடுகவே கடுமையாக உள்ளது. இந்திய ஊரகப் பகுதிகளில் எரிக்கப்படும் உயிர்ப்பொருண்மை அல்லது உயிர்க்கூள ம் வெளியேற்றும் புகைமாசுகளே துகள்களுக்கும் காற்ருத் தூசுகளுக்கும் தோற்றுவாய்களாக அமைகின்றன. வட இந்திய பெருநகரங்களும் நகரங்களும் இதில் பெரும்பங்காற்றி சுற்றுசூழல் சிக்கல்களை உருவாக்குகின்றன.இரவில் ஒளிரும் இந்தியா. இந்த காட்சி ஊடகக் காட்சி 2011, அக்தோபர், 21 இல் சூழல்தேட்டக்குழு- 29 நாசா முயற்சியால் எடுத்ததாகும். நாசா ஒப்புதலுடன் இங்கே காட்டப்படுகிறது. இக்காட்சி துருக்கிமேனித்தானில் தொடங்கிக் கிழக்காக நகர்கிறது; முதலில் இந்தியத் தலைநகர் தொடங்கி நீண்டவஆரஞ்சு கோடுவழியாகச் சென்று இந்தியப் பாக்கித்தான் எல்லைக்கோட்டைக் கடக்கிறது.ந்தவரம்பெல்லையில் ஒளியூட்டத்தைக் காணலாம்; புது தில்லியிலும் கத்தியவார் தீவகத்திலும் ஒளியூட்டம் அமைகிறது. இதேபோல மும்பை, ஐதராபாத், சென்னை, பெங்களூரு, மேலும்பல் மத்திய, தென்னிந்தியச் சிறுநகங்களிலும் ஒளி சுடர்தலைக் காணலாம். பிறகு, இந்த பன்னாட்டு விண்வெளி நிலையக் காணொலி தென்கிழக்காக நகர்ந்து, தென்னிந்தியாவையும் வங்காள விரிகுடாவையும் கடக்கிறது. இப்போது அமையும் ஒளிவீச்சுகளில் இடிமின்னற் புயல்களும் உள்ளன. இந்நகர்வு இறுதியாக, மேற்கு இந்தோனேசியாவில் முடிகிறது.
குறிப்பு: தனியர் நுகர்வு = (தொகு மின்னாக்கம் + நிகர இறக்குமதி) / ஆண்டு நடு மக்கள்தொகை.
அனல்மின் நிலைய அக மின்நுகர்வாலும் மின்செலுத்த, பகிர்வு தொடர்களின் இழப்புகளாலும் தொகு மின்னாக்கத்துக்கும் விற்பனைக்கும் இடையில் 24% வேறுபாடு அமைகிறது.
மின்னாக்கம்
வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, 1950 முதல் 1985 வரையிலான மின்னாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. பிறகு, 1990 இல் இருந்து மின்னாக்க வளர்ச்சி வேகமெடுத்தது. இந்திய மின்னாக்கம் 179 டெவா-மணி அளவுக்கு 1985 இலும் 1,057 டெவா-மணி அளவுக்கு 2012 இலும் வளர்ந்தது.[9] மொத்த மின்னாக்க வளர்ச்சியில் நிலக்கரி எரிப்பு நிலையங்களும் மரபுசாரா புதுப்பிக்கவல்ல ஆற்றல் வாயில்களும் முதன்மையான பங்களிப்பைச் செலுத்தின. அன்னல், இயல்வளிமம், எண்ணெய், புனல்மின் வாயிகளின்மின்னாக்கம் கடைசி ஐந்தாண்டுகளில் (2012-2017) குறையலானது. பூட்டான் மின் இறக்குமதி நீங்கலான நிலைய மொத்த மின்னாக்கம், 2019-20 ஆம் ஆண்டின் மொத்த மின்னாக்கம் 1,384 பில்லியன் கிவாமணி ஆகும். இது 2018-19 ஆண்டின்மொத்த மின்னாக்கத்தோடு ஒப்பிடும் போது ஓர்ஆண்டில் 1% அளவு மின்னாக்க வளர்ச்சியாகும். ஏறக்குறைய, இதில் புதுப்பிக்கவல்ல ஆற்றல் வாயில்களின் பங்களிப்பு மொத்தத்தில் 20% ஆகும். புதைபடிவ எரிபொருள்வழி மின்னாக்கம் குறைந்துவிட்டதால், 2019–20 ஆண்டின் அனைத்து மின்னாக்க ஆண்டு வளர்ச்சியும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் வாயில்களின் அழியாகவே பெறப்பட்டது.[81] புதைபடிவ எரிபொருள்வழி மின்னாக்கம் 1% அளவுக்கு குறைந்துவிட்டதால், புதைபடிவ எரிபொருள்சாரா மின்னாக்கம் முந்தைய ஆண்டளவுக்கு ஏறக்குறைய அமைந்தபோதும், 2020-21 ஆம் ஆண்டின் மின்நிலைய மொத்த மின்னாக்க வீதம் 0.8% (11.3 billion kWh) ஆனது . இந்தியா 2020–21 ஆம் ஆண்டில் பிற அருகில் உள்ள நாடுகளில் இருந்து பெற்ற இறக்குமதியை விட கூடுத்லாக ஏர்றுமதி செய்தது.[82] சூரிய மின் திறன் 2020–21 ஆம் ஆண்டில் நிலக்கரி, புனல்மின் திறனுக்கு அடுத்ததாக, காற்று, அணுமின் திறன் அளவுகளையும் விஞ்சி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
இந்தியா 2013 இல் நாடு முழுவதையும் உள்ளடக்கிய, தொலைவில் அமைந்த தீவுகளைத் தவிர்த்த, ஒற்றை ஒத்தியங்கும் மின்கட்டமைப்பைப் பெற்றிருந்தது.[95][96][97]
இந்தியாவில் 416 கி.மீ. 2 சதுரச் சட்டகப் பரப்பில் அமையும் வகையில் அனைத்து உயர் மின்னழுத்தச் செலுத்தத் தொடர்களும் பரவியிருந்தன. அதாவது, 10.2 கி.மீ. தொலைவுக்கு ஒரு உயர் மின்னழுத்தத் தொடராவது அமையும் வகையில் நாடு முழுவதும் உள்ள பரப்பில் பரவியிருந்தன. 266 கி.மீ.2 சதுரச் சட்டகப் பரப்பில் அமையும் வகையில், 230 கிவோ மற்றும் அதற்கும் மேலான உயர் மின்னழுத்தச் செலுத்தத் தொடர்களின் நீளம், நாடு முழுவதும் குறைந்தது 8.15கி.மீ. அளவில் ஒரு தொடராவது உள்ளபடி பரவியிருந்தது. இந்திய 230கிவோ மற்றும் அதற்கும் மேலான உயர் மின்செலுத்தத் தொடர்களின் நீளம், அமெரிக்க ஐக்கிய நாட்டை விட 20% அளவுக்குக் கூடுதலான, அதாவது, 322000|கி.மீ. அளவுக்குப் பரவியிருந்தது. ஆனால், அதைவிட குறைந்த அளவு மின்சாரத்தையே செலுத்த முடிந்தது.[98] இந்தியா நாடு முழுவதும் 132கிவோ அளவும் அதற்கு மேலான மின்னழுத்தமும் உள்ள உயர் மின்னழுத்தமுடைய செலுத்தத் தொடர்கள் நீளம் 700000|கி.மீ. அளவுக்கு, சராசரியாக, 4.5 கி.மீ. தொலைவுக்கு ஒரு மின் செலுத்தத் தொடராவது அமையும் வகையில், பரவியிருந்தது.[99].[3] இந்திய நாடு முழுவதும் 400கிவோ அளவும் அதற்கு மேலான உயர் மின்னழுத்தமுடைய செலுத்தத் தொடர்களும் 36.8 கி.மீ.km2 சதுரச் சட்டகப் பரப்பில் அமையும் வகையிலும் சராசரியாக, 3 கி.மீ. தொலைவுக்கு குறைந்தது ஒரு மின் செலுத்தத் தொடராவது உள்ளபடி, பரவியிருந்தன. இந்திய நாடு முழுவதும் 66 கிவோ மற்றும் அதற்கு மேலான உயர் மின்னழுத்தச் செலுத்தத் தொடர்களின் நீளம் 649833கி.மீ. அளவு, சராசரியாக 4.95 கி.மீ. தொலைவுக்கு ஒரு தொடராவது உள்ளபடி, பரவியிருந்தது.[3]
ஒருங்கிணைந்த இந்தியத் தேசிய மின்கட்டமைப்பின் அனைத்து நேரப் பெரும உச்சச் சுமை 2019 மே, 30 இல் 182,610 மெவா ஆக அமைந்தது.[100] 200கிவோ துணைமின்நிலையங்களின் பெரும மின்தேவைக் காரணி 60% அளவை மிஞ்சவில்லை. மாபெரும் நிறுவனத் திறன் கொண்ட துணைமின்நிலையங்களும் அகன்ற பெரும்பரப்பில அமைந்த உயர்மின்னழுத்தச் செலுத்தத் தொடர்களும் இணைந்த மின்கட்டமைப்பின் மிகக் குறைந்த இந்த இயக்கச் செயல்திறமை உச்ச மின்சுமையைச் சந்திக்க நிறைவளிப்பதாக அமையவில்லை.[101][102] எனவே, விரிவான குற்றத் தடயப் பொறியியல் ஆய்வுகளை மேர்கொண்டு, இந்த அமைப்புச் செயல்திறப் போதாமையைத் திருத்தி துடியான மின்கட்டமைப்பாக உகந்த எதிர்கால முதலீட்டால் நிலவும் மின்செலுத்த அகக்கட்டமைப்பைப் பெருமப் பயனீட்டுவதாக மாற்றிடவேண்டும்.[54]
இந்தியாவின் வடக்குப் பகுதியில் பெருவீத மக்களைத் தாக்கிய 2012 ஜூலை இந்திய இருட்டடிப்பே வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய மின்கட்டமைப்புப் பழுதுறல் நிகழ்வாகும். இந்நிலையில், கிடைப்புசார் மின்கட்டணத்தின் அறிமுகமே இந்திய மின்செலுத்தத் தொடர்க் கட்டமைப்பின் நிலைப்பைப் பேரளவில் உறுதிபடுத்தியது. என்றாலும் இன்றைய மீதரவான ஆற்றல் அமைந்த மின்கட்டமைப்பில் இந்நிலை வழக்கிழந்து விட்டது.
இந்தியாவின் தொகு மின்செலுத்த, வணிக இழப்புகள், 2017-18 இல் 21.35% ஆக அமைந்தது.[3][103][104] ஆனால், 2018 இல் 4,404 பில்லியன் கிவாம மின் ஆற்றல் செலுத்திய ஐக்கிய அமெரிக்காவின் மொத்த கிடைப்புசார் மின்கட்டண வீத இழப்புகள் 6.6% அளவிலேயே இருந்துள்ளது. ஒன்றிய அரசு மொத்தத் தேசியக் கிடைப்புசார் மின்கட்டண வீத இழப்புகளை 2017 ஆம் ஆண்டில் 17.1% அளவாகக் குறைக்கவும் 2022 ஆம் ஆண்டில் 14.1% அளவாகக் குறைக்கவும் முயன்றது. இதில் தொழில்நுட்பம் சாராத மின்திருட்டும் சட்டமீறிய மின்மடுப்பும் குறைவாக மின்நுகர்வை அறவிடும் மின்னளவிப் பழுதுமே உயர்விகிதத்தில் அமைகிறது. பழுற்ற மின்னளவிகளைப் பதிலீடு செய்த கேரளாவின் ஆய்வு மின்னிழப்புகளை 34% இலிருந்து 29% ஆகக் குறைத்துள்ளது.[21]
ஒழுங்குபடுத்தலும் ஆட்சிமுறையும்
இந்திய மின்சாரத்துறையின் சிக்கல்கள்
இந்திய மின்சாரத்துறை கீழ்வரும் பல சிக்கல்களைச் சந்திக்கிறது:
மின்சாரம் செலுத்தம், பகிர்வு, நுகர்வு மட்ட இழப்புகள். இவ்வகை இழப்புகள் அனல்மின்நிலையங்களின் துணைமின் திறன் நுகர்வாலும் சூரிய மின்நிலையங்கள், தனியார் மின்நிலையங்கள், காற்றாக்கிகளின் கூடுதலான கிவோஆ மின்னாக்கத்தாலும் 30% அளவுக்கும் மேல் கூடிவிடுகின்றன.
வீட்டுக் கட்டிடத்துறையில் ஆற்றல் திறமைக்கு எதிர்ப்பு. தொர்ந்த நகர்மயமாக்கத்தாலும் மக்கல்தொகை உயர்வாலும் நகரகக் கட்டிடங்கலின் ஆற்றல் நுகர்வு வேகமாகப் பெருகி வருகிறது.றைன்னமும் ஆற்றல் திறமையான கட்டிட விலை மிகவும் குடுதலானது என கட்டிட வாங்குவோரிடையே நிலவுகிறது. இதனால், கட்டிடப் பசுமையாக்கத் திட்டம் பெரிதும் தாக்குதல் உறுகிறது.[105]
புனல் மின்னாக்கத்துக்கத் திட்டங்களுக்கான எதிர்ப்பு. சூழலியல், சுஅடல், மீள்குடியேற்றம் போன்ற முரண்பாடுகள் வடக்கிலும் வடக்கிழக்கிலும் எழுந்தமையாலும் பொதுநலன் அக்கறை வழக்குகள் மிகுந்தமையாலும் புனல் மின்னஆக்கத் திட்டங்களை மிக மெதுவாகவே நிறைவேற்ற முடிகிறது.
அணு மின்னாக்கத்துக்கு எதிர்ப்பு. புகுழ்சிமா பேரிடருக்குப் பிறகு, அணுமின் துறை முன்னேற்றத்தைக் அணுமின்னாக்கத்துக்கு எதிராக உருவாகிய முனைவான செயல்பாடு குறைத்துவிட்டது. மேலும், அணுமின் திட்டங்களை நிறைவேற்ரும் வேகமும் இந்தியாவில் அண்மையில் மிகமிகத் தாழ்வாகவே அமைந்துள்ளது.[106][107]
மின்திருட்டு. மின்தின்ட்டால் ஒவ்வோராண்டும் 16 பில்லியன் டாலர் நிதியிழப்பு ஏற்படுகிறது.[சான்று தேவை]
மின்சாரத்துறையின் முதன்மை நடைமுறைப்படுத்தும் அறைகூவல்களாக, புதிய திட்ட மேலாண்மை, நிறைவேற்றல் செயல்திறம், தகுந்த தரமான எரிபொருள் கிடைத்தலை உறுதிபடுத்தல், இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும் நிலக்கரி, இயல்வளிம வாயில்களின் பெருநிலைக் கட்டமைப்புகளை உருவாக்கல், நிலம் கையகப்படுத்தல், வேகமாக ஒன்றிய, மாநில சுற்றுச்சூழல் ஒப்புதல்களைப் பெறல், மனிதவள மேம்பாட்டுப் ப்யிற்சி ஆகியன அமைகின்றன.[108]
இறக்குமதியாகும் நீர்ம பெட்ரோல் வளிம, மண்ணெண்ணெய்க்கு மாற்றாக மின்சாரம்
இந்தியாவில் பெட்ரோலும் டீசலும் சில்லறையில் உயர் விலையில் விற்பதால் மின்சார உந்துகள் (ஊர்திகள்) சிக்கனமாக அமைகின்றனl.[109] டீசலின் சில்லறைவிலை 2021-22 இல் ரூ101.00 /லிட்டர்;பெட்ரோலின் சில்லறை விலை ரூ110.00 /லிட்டர். டீசலுக்குப் பதிலாக மின்சாரம் அமைய, மின்சாரக் கட்டணம் ரூ19/கிவாம ஆக அமையவேண்டும்( 75% உள்ளீட்டுமின்சார-அச்சுத்தண்டு திறன் திறமையில் அமையும் 860 கிகலோரிகள்/கிவாம 40 % உள்ளீட்டு எரிபொருள் ஆற்றல்-அச்சுத்தண்டு திறன் திறமையில் அமையும் டீசலின் 8572 கிகலோரிகள்/லிட்டர் தொகு கலோரி மதிப்புக்குச் சமம் ஆகும்). அதேபோல, பெட்ரோலுக்குப் பதிலாக மின்சாரம் அமைய, மின்கட்டணம் ரூ28/கிவாம ஆக அமையவேண்டும் ( 75% உள்ளீட்டுமின்சார-அச்சுத்தண்டு திறன் திறமையில் அமையும் 860 கிகலோரிகள்/கிவாம 33% உள்ளீட்டு எரிபொருள் ஆற்றல்-அச்சுத்தண்டு திறன் திறமையில் அமையும் பெட்ரோலின் 7693 கிகலோரிகள்/லிட்டர் தொகு கலோரி மதிப்புக்குச் சமம் ஆகும்). இந்தியா 2012–1ஈல் 15.744 மில்லியன் டன் பெட்ரோலும் 69.179 மில்லியன் டன் டீசலும் நிகர்ந்தது. இவை இரண்டுமே கரட்டு பாறைநெய்யில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன.[110]
மின்தேக்கமும்/மின்கல அடுக்கில் இயங்கும் ஊர்தித் தொழில்நுட்பமும் மேம்பாட்டுடனும் நீண்ட வாழ்நாளுடனும் குறைந்த பேணுதல் செலவுடனும் கிடைந்தால் இந்தியாவில் மினார உந்துகள் பரலாக பயன்பாட்டில் வந்துவிடும்.[111][112]
மின்கட்டமைப்பின் உச்சச் சுமைகளைத் தவிர்க்க மின்சார உந்துகள் உதவும் வாய்ப்பு கூடுவதால் மின்சார உந்துவழி மின்கட்டமைப்புகளும் பெருக வாய்ப்புள்ளது. கம்பியில்லா மி திறனால் மின் உந்துகளுக்கு மின்னேற்றும் தொழில்நுட்பமும் இந்தியக் குழுமங்களின் ஆய்வில் உள்ளது..[113][114][115]
இந்தியா சூரிய, காற்று, இறைத்து தேக்கும் நீர்வளம் உட்பட்ட புனல்தேக்கம், உயிர்க்கூளம் சார்ந்த ஏராளமான ஆற்றல் வளத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் பெரும்பகுதி வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளதால், கிடைக்கும் செறிந்த சூரிய ஆற்றல் வளவாய்ப்பும் காற்று, புனல், உயிரிப்பொருண்மை, வழி மின்திறன் வளப்பொதிவும் அதன் அனைத்து ஆற்றல் தேவைகளையும் புதைபடிவ எரிபொருள்களைச் சாராமல் சந்திக்க முடியும்.[116] புதுப்பிக்கவல்ல சூரிய, காற்று மின் திறன் வளங்கள் இந்தியாவுக்கு உணவு, ஆற்றல் பாதுகாப்புகளை நல்கவல்லன. மின்சாரத்தைக்கொண்டு நீரில் இருந்தும் காற்றில் இருந்தும் உயர்புரத மீன்களையும் கோழிகளையும் கால்நடைகளையும், மின் திறன்வழி வளிமம், மின் திறன் வழி மீத்தேன், மின் திறன்வழி உணவு எனப்பல முறைகளால் வென்றெடுக்கலாம்,[117][117][118]
இதோடு கூட, 2011 ஜனவரி மதிப்பீட்டின்படி இந்தியா தோராயமாக 38 டிரில்லியன் பருமனடி (Tcf) இயல்வளிம வளத்தையும் பெற்றுள்ளது என நிறுவப்பட்டுள்ளது. இது உலகில் 26 ஆம்நிலை பெரிய இருப்பாகும் .[119] ஐக்கிய அமெரிக்க ஆற்றல் தகவல் ஆட்சியகம், இந்தியா 2010 இல் தோராயமாக 1.8 டிரில்லியன் பருமனடி இயல்வளிம வளத்தை எடுத்துள்ளதோடு 2.3 டிரில்லியன்பருமனடி இயல்வளிமத்தைப் பயன்படுத்தியும் உள்ளது. இந்தியா ஏற்கெனவே நிலக்கரிப் படுகை மீத்தேனையும் எடுத்துள்ளது. இந்தியாவில் மின்சாரத்துறையும் உரத்துறையும் நான்கில் மூன்று பங்கு இயல்வளிமத்தை நுகரவல்லன ஆகும். இந்தியா ஆற்றல் வளங்களைப் பன்முகப்படுத்தி, ஒட்டுமொத்த ஆற்றல் பாதுகாப்பை உருவாக்குவதில் இயல்வளிம ஆற்றல் நுகர்வின் முதன்மையான உறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.[120][121] இந்தியாவின் பெரும்பகுதி இயல்வளிமம் 2008 வரை அதன் வடமேற்கில் அமைந்த மும்பை வளிம வளாகத்தில் இருந்தே பெறப்பட்டது. அண்மைய வங்காள விரிகுடா வளக் கன்டுபிடிப்புகள் இந்திய இயல்வளிம எடுப்பு சார்ந்த ஈர்ப்பு மையத்தை இடமாற்றிவிட்டது.
இந்தியா ஏற்கெனவே நிலக்கரிப் படுகையின் மீத்தேனை அகழ்ந்தெடுக்கத் தொடங்கி விட்டது. இவ்வக வளிம வளவாய்ப்பு இந்தியாவில் பேரளவில் அமைகிறது. எண்ணெய், இயல்வளிம 2011 ஆம் அறிக்கையின்படி, இந்தியாவில் 600 முதல் 2000 டிரில்லியன் பருமனடி வளிம வளம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது ( இது உலகிலேயே மிகப் பாரிய வளமாகும்). இந்தியாவில் பேரளவு வள இருப்புகளுக்கான வாய்ப்புகள் இருந்தாலும் ஆற்றல் துறையில் ஏராளமான வேலைகளை உருவாக்க வேண்டிய வல்லமை கிட்டினாலும், மாப்பாறை வளிமப் பகுதிகளுக்கான உரிமம் வழங்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய நடுவண் அரசின் ஆற்றல் அகக்கட்டமைப்பு, அல்லது 2025 ரையிலான மின்னாக்கத் திட்ட ஆவணங்களில் கூட மறைக்கப்பட்டுள்ளது. ஒழுங்குபடுத்த்ல் சுமைகளாலாலும் அரசு எந்திர இயக்க மெத்தனப் போக்காலும் மர்புவழி இயல்வளிம இருப்புகளைப் பயன்படுத்தலில் கூட மிகமிக மெதுவாகவே நடவடிக்கைகள் எடுக்கமுடிகிறது.[122][123]
↑Tim Buckley; Kashish Shah (21 November 2017). "India's Electricity Sector Transformation"(PDF). Institute for Energy Economics and Financial Analysis. p. 2. Retrieved 5 May 2018.
↑the ratio to be multiplied with transmission line capacity (MVA) to give average installed length of transmission line per one MVA of installed substation capacity at each voltage level.