ஊருக்கு ஒரு பிள்ளை
ஊருக்கு ஒரு பிள்ளை (Oorukku Oru Pillai) என்பது 1982 ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தை கே. எஸ். குற்றாலிங்கம் தயாரித்தார். இதில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, எம். என். நம்பியார், வி. கே. ராமசாமி ஆகியோர் நடித்தனர். படம் 5 பிப்ரவரி 1982 அன்று வெளியானது.[1] கதைசிவாஜியின் முறைப்பெண்ணாக விஜயா உள்ளார். வழக்கறிஞரான மேஜர் சுந்தர்ராஜனிடம், சிவாஜி உதவி வழக்கறிஞராக உள்ளார். மேஜரின் மகளான ஸ்ரீப்ரியாவும் சிவாஜியும் காதலிக்கின்றனர். விஜயா சிவாஜியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்வார் என்பதும், நிச்சயதார்த்த நாளில் ஸ்ரீப்ரியாவிற்குத் தெரியவருகிறது. இதனால் நிச்சயதார்த்த நாளில், ஸ்ரீப்பிரியா ஒரு காரணமும் சொல்லாமல் சிவாஜியைத் தூக்கியெறிகிறார். சிவாஜி வழக்கறிஞர் தொழிலை விட்டு, தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறார். ஊரில் ஒரு பள்ளியைத் திறந்து, தங்கள் கிராமத்தின் படிக்காத மக்களைப் பயன்படுத்தி அட்டூழியம் செய்யும் ராமசாமி, நம்பியார், சீனிவாசன் மூவரின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சிவாஜியின் தந்தையின் கனவாக உள்ளது. அவர்கள் கொலையும் செய்கின்றனர், அதை தங்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளின் துணையுடன் பேய்கள் மீது பழிபோடுகின்றனர். தற்செயலாக, ஸ்ரீபிரியா ராமசாமியின் உறவினரை மணக்கிறார். ஒரு குழந்தை பிறக்கிறது. குடிப்பழக்கம் காரணமாக கணவன் இறந்துபோகிறான். இந்த அதிர்ச்சியில் மேஜர் சுந்தர்ராஜன் இறக்கிறார். இப்போது திருமணமாகி ராமசாமிக்கு எதிராக நின்று பள்ளி நடத்தும் சிவாஜி, விஜயாவிடம் தஞ்சம் அடைகிறார் ஸ்ரீபிரியா. நம்பியார் ஸ்ரீப்ரியா மீது மோகம் கொண்டுள்ளார். ஆனால் சிவாஜி அவரது கெட்ட முயற்சிகளை முறியடிக்கிறார். இந்நிலையில் இருவருக்கும் இடையிலான விவகாரம் பற்றிய வதந்திகள் உருவாகின்றன. பேய்கள் மீது பழிபோட்டு தப்பிவரும் நம்பியாரால் சிவாஜியின் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். இதனால் சிவாஜி மீண்டும் தனது வழக்கறிஞர் தொழிலை கையில் எடுத்து ராமசாமியை அம்பலப்படுத்தத் தொடங்குகிறார். விஜயாவையும் ஸ்ரீப்பிரியாவையும் சிவாஜியின் எதிரிகள் கடத்துகிறார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஸ்ரீபிரியா நம்பியாரை தற்காப்புக்காக கொல்கிறார். சிவாஜி ஸ்ரீபிரியாவை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறார். மேலும் மூவரின் அனைத்து கொடுமைகளையும் அம்பலப்படுத்தி, தனது கிராமத்திற்கு நீதியைப் பெற்றுத் தருகிறார். நடிகர்கள்
பாடல்கள்இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை முத்துலிங்கம் எழுதினார்.[2]
வரவேற்புகல்கியின் திரைஞானி படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தார்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia