எம். கே. மேனன்
விலாசினி என்ற புனைபெயரில் நன்கு அறியப்பட்டவரான, மூர்க்கநாட்டு கிருஷ்ணன்குட்டி மேனன் (23 சூன் 1928 - 13 மே 1993), [1] என்பவர் கேரளத்தைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் இந்தியாவின் மிக நீளமான புதினமான அவகாசிகள் ( The Inheritors) எழுதியவர். அதற்காக இவர் 1981 இல் கேந்திர சாகித்ய அகாதமி விருதையும் 1983 இல் வயலார் விருதையும் பெற்றார். [2] [3] இவரது முதல் புதினமான நிறமுள்ள நிழல்கள் 1966 ஆம் ஆண்டு கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. வாழ்க்கை வரலாறுஎம். கே. மேனன் பிரித்தானிய இந்தியாவின் வடக்கஞ்சேரிக்கு அருகிலுள்ள கருமாத்திரத்தில் பிறந்தார். இவர் 1947 ஆம் ஆண்டு திருச்சூரில் உள்ள செயிண்ட் தாமஸ் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். 1953 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குப் புறப்பட்டு, அங்கு இந்தியன் மூவி நியூஸ் என்ற ஆங்கில மாத இதழின் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூரில் உள்ள பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ்சில் [1] துணை ஆசிரியரானார். இவர் கேரள சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார். சிங்கப்பூரில் இருந்து 1977 இல் கேரளத்திற்குத் திரும்பினார். இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரில் வாழ்ந்த மலையாளிகளின் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான விளக்கத்தை அளிக்கும் "நிறமுள்ள நிழலுகள்" (1965) என்ற புத்தகத்தின் மூலம் இவர் ஒரு புதின எழுத்தாளராக அறிமுகமானார். இவருக்கு நன ஓடை புதினத்தின் மீது ஒரு சிறப்பு விருப்பம் உண்டு. கதாபாத்திரங்களின் மனதில் என்ன நடக்கிறது என்பதன் மூலம் முழு கதையையும் விவரிக்கும் உத்தி கொண்ட புதினத்தில் ஊஞ்சல் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. [4] விலாசினி தனது புதினங்களில் ஜேம்ஸ் ஜோய்ஸ், வெர்ஜீனியா வூல்ஃப் ஆகியோரின் உதாரணங்களைப் பின்பற்றினார். இவரது மிகச்சிறந்த படைப்பு அவகாசிகள் ( வாரிசுகள் ) ஆகும். இது நான்கு தொகுதிகளாக 3958 பக்கங்களைக் கொண்டுள்ளது. இது இந்திய மொழியின் மிக நீளமான புதினமாகும். விலாசினி, ஜுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பரமோ மற்றும் சதேக் ஹெடாயத்தின் தி பிளைண்ட் ஆவ்ல் ( பூஃப்-இ கூர் ) உட்பட பல புதினங்களை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். வெளியிடப்பட்ட படைப்புகள்புதினங்கள்
மற்றவை
அங்கீகாரங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia