கடோலினியம்(III) பெர்குளோரேட்டு
கடோலினியம்(III) பெர்குளோரேட்டு (Gadolinium(III) perchlorate) என்பது Gd(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். கடோலினியம்(III) ஆக்சைடுடன் பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து (70~72%) 80 ° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் கடோலினியம்(III) பெர்குளோரேட்டு உருவாகும்.[1] 1,4-ஈராக்சேனுடன் சேர்ந்து வினையில் ஈடுபட்டு Gd(ClO4)3·9H2O·4C4H8O2 என்ற ஒருங்கிணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது.[2] இனோசிட்டால், சோடியம் அசிட்டேட்டு மற்றும் சோடியம் ஐதராக்சைடு ஆகியவற்றுடன் வினைபுரிந்து ப்ரு மூலக்கூறுக் கொத்துகள் கொண்ட அணைவுச் சேற்மங்களைக் கொடுக்கிறது.[1] குரோமியம்(III) குளோரைடு மற்றும் 2,2'-பைபிரிடைனுடன் சேர்ந்து அமிலக்கார காடித்தன்மை எண் 5.1 என்ற அளவில் வினைபுரிந்து [GdCr(bipy)2(OH)2(H2O)6](ClO4)4·2H2O. என்ற வாய்பாடு கொண்ட அணைவுச்சேர்மத்தைக் கொடுக்கிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia