காந்தாரா-அத்தியாயம் 1
காந்தாரா: அத்தியாயம் 1 (Kantara: Chapter 1) என்பது, கதம்பர் வம்ச [2] ஆட்சியின் போது நடந்த ஒரு கதையை ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி உருவாகி வரும் இந்திய கன்னட மொழி அதிரடித் திரைப்படம். இது 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படத்தின் முன்பகுதியாகும். இப்படத்தில் “காடுபெட்டு சிவன்” பாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார். 2023 நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கியது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் முன்னோட்டம் 27 நவம்பர் 2023 அன்று வெளியிடப்பட்டது [3] [4] விளம்பர பதாகையை கானி ஸ்டுடியோ வடிவமைத்துள்ளது. படத்திற்கு ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை பி. அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார். கதைஒலிப்பதிவுகாந்தாரா படத்திற்கு இசையமைத்த பி. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.[5] வெளியீடுதிரையரங்கில்காந்தாரா: அத்தியாயம் 1 கன்னடம், இந்தி, தெலுங்கு தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கில மொழிகளில் 2024 இறுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. [6] மேலதிக ஊடக சேவைமேலதிக ஊடக சேவை நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ படத்தின் உரிமையை வாங்கியுள்ளது. [7] [8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia