மேற்கு வங்காளத் திரைப்படத்துறை
மேற்கு வங்காளத் திரைப்படத்துறை அல்லது டோலிவுட் (Cinema of West Bengal) என்பது இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்திய வங்காள மொழித் திரைப்படத்துறை ஆகும். 1932 ஆம் ஆண்டிலிருந்து டோலிகுஞ்ச் மற்றும் ஹாலிவுட் என்ற சொற்களில் இருந்து டோலிவுட் என்ற புனைப்பெயரில் அழைக்கப்படுகின்றது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்துறையாகவும் மற்றும் ஒரு காலத்தில் இந்தியத் திரைப்படத் தயாரிப்பின் மையமாக இருந்தது. இந்த திரைப்படத்துறை இந்தியத் திரைப்படத்துறையில் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் உலகளாவிய அளவில் திரைப்படங்கள் மற்றும் கலைத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்றது. பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்திய தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் சர்வதேச பாராட்டையும் பெற்றனர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து பெங்காலி திரையுலகம் சிறியதாகிவிட்டது, பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமா போன்ற பிற பிராந்திய திரைப்படத்துறை தொழில் ரீதியாக முந்தியுள்ளது. 1956 கான் திரைப்பட விழாவில் சத்யஜித் ராய் இயக்கிய பதேர் பாஞ்சாலி (1955) என்ற திரைப்படம் சிறந்த மனித ஆவண படமாக கௌரவிக்கப்பட்டது. அன்றிலிருந்து பெங்காலித் திரைப்படங்கள் அடுத்த பல தசாப்தங்களாக சர்வதேச அரங்குகள் மற்றும் திரைப்பட விழாக்களில் அடிக்கடி தோன்றின. இதனால் பெங்காலி திரைப்படத் தயாரிப்பாளர்கள் உலகளாவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்களில் மிகவும் செல்வாக்கு செலுத்தியவர் சத்யஜித் ராய் என்பவர் ஆவார். இவரின் திரைப்படங்கள் ஐரோப்பியர்கள், அமெரிக்காக்கள் மற்றும் ஆசிய பார்வையாளர்களிடையே வெற்றிகரமாக அமைந்தன.[4] சொற்பிறப்பியல்டோலிவுட் என்பது ஹாலிவுட் என்ற பெயரை சார்ந்து வைக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படத்துறையின் பெயர் ஆகும். இந்த பெயர் 1932 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒளிப்பதிவாளரான வில்ஃபோர்ட் ஈ. டெமிங் என்பர் எழுதிய ஒரு கட்டுரையில் வெளியிடத்தப்பட்டு. அமெரிக்க பொறியியலாளர் தயாரித்த முதல் இந்திய ஒலித் திரைப்படமும் வங்காள மொழி திரைப்படம் ஆகும்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia