கானல் நீர் (திரைப்படம்)
கானல் நீர் என்பது 1961 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பி. ராமகிருஷ்ணா தயாரித்து இயக்கினார். இது ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கபட்டது. தெலுங்கில் பாடசாரி (பாதசாரி) என்ற பெயரில் வெளியானது. வங்க எழுத்தாளரான சரத்சந்திர சட்டோபாத்யாயாவின் பரோதீதி என்ற வங்க மொழி புதினத்தின் திரைவடிவமே இப்படமாகும். இதில் ஏ. நாகேஸ்வர ராவ், தேவிகா, பி. பானுமதி ஆகியோர் நடித்தனர். பாடசாரி 1961 சூன் 30 அன்றும், கானல்நீர் 1961 யூலை 22 அன்றும் வெளியானது. இரு பதிப்புகளும் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. கதைசுரேந்திரநாத் / சுரேன், தாராபுரம் ஜமீன்தாரின் தாய்வழி பேரனும் வாரிசும் ஆவான். அவன் தன் தந்தை ராகவையா மற்றும் சித்தி சுந்தரம்மாவுடன் வசிக்கிறான். உயர்கல்விக்காக இங்கிலாந்து செல்லும் விருப்பதுடன் சுரேந்திரன் உள்ளான். ஆனால் சுந்தரம்மா அதை நிராகரிக்கிறார். இதனால் கோபமடைந்த சுரேன் வீட்டைவிட்டு வெளியேறி மெட்ராசுக்குச் சென்று தன் அடையாளத்தை மறைத்து வாழ்ந்துவருகிறான். பணக்காரரான அப்பா ராவ், தன் மகன் சிவசந்திரன் மற்றும் இரண்டு மகள்களான மாதவி, பிரமீலா ஆகியோருடன் வசித்துவருகிறார். மாதவி ஒரு இளம் விதவையாவாள். சுரேன் ஒரு வேலை வேண்டி அப்பாராவை அணுகுகிறான். அவர் அவனை தன் மூத்தமகள் பிரமீலாவுக்கு கல்வி கற்றுக்கொடுக்க ஆசிரியராக நியமிக்கிறார். நேரில் பார்க்கவில்லை என்றாலும் மாதவியும் சுரேனும் காதலிக்கின்றனர். உறவினர்கள் சிலரின் விளையாட்டுத் தனத்தால் சரேனை மாதவி வெறுக்கும் நிலைக்கு வருகிறாள். இதனால் சுரேன் அங்கிருந்து வெளியேறி, ஒரு அபாயகரமான விபத்தில் சிக்கி மருத்துமனையில் இருக்கிறார். சுரேன் இருக்கும் இடம் அறிந்த அவரனது தந்தை தன் ஜமீனுக்கு அழைத்துச் செல்கிறார். மாதவியை மறக்க முடியாத சுரேன் தன் பெற்றோருக்காக சாந்தியை மணக்கிறார். இருப்பினும், அவனது இதயம் மாதவியை மறக்கவில்லை. ஒரு கட்டத்தில் சுரேன் ஒரு ஜமீன்தார் என்பதை மாதவி அறிகிறாள். பிறகு என்ன நடக்கிறது என்பதே கதையாகும். நடிப்புதெலுங்குப் பதிப்பு
தமிழ்ப் பதிப்புமேலே காண்ட நடிகர்கள் பட்டியல் தெலுங்கு பதிப்பின் நடிகர்களைக் கொண்டது. தமிழ் பதிப்பில் அதில் உள்ள சில நடிகர்கள் மட்டும் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக "கல்கத்தா" விஸ்வநாதன், "ஜாவர்" சீதாராமன், எம். ஆர். சந்தானம், பி. எஸ். ஞானம், ஜெயராமன், "அப்பா" கே. துரைசாமி, "பேபி" காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.[1] தயாரிப்புகானல் நீர் திரைப்படம் சரத்சந்திர சட்டோபாத்யாயா எழுதிய "பரோதீதி" என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. இது தெலுங்கில் "பாடசாரி" என்ற பெயரில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.[2] தெலுங்கு பதிப்பு முதலில் "யெண்டமாவுலு" என்று பெயரிடப்பட்டது. படப்பிடிப்பிற்கு முன்னும் பின்னும், உத்வேகத்திற்காக, 1959 ஆம் ஆண்டு "பர்திடி" திரைப்படப் பதிப்பில் உத்தம் குமாரின் நடிப்பைப் பார்க்கும்படி ராமகிருஷ்ணா அக்கினேனி நாகேஸ்வர ராவிடம் கேட்டார். நாகேஸ்வர ராவ் அதற்கு இணங்கினார், மேலும் குமாரைப் போலவே தோற்றமளித்தார், ஆனால் தனது சொந்த இயல்பிலேயே நடித்தார்.[3] இசைஇப்படத்திற்கு மாஸ்டர் வேணு இசையமைத்தார். தெலுங்குப் பதிப்பில் பாடல் வரிகளை சமுத்ராலா சீனியர் எழுதியுள்ளார்.[4] தமிழ்ப் பதிப்பானன கானல் நீருக்கான பாடல் வரிகளை கண்ணதாசன், கு. மா. பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாடல் வரிகளை எழுதினர்.[5]
வெளியீடுஇதன் தெலுங்கு பதிப்பான படாசரி 1961 சூன் 30 அன்று வெளியானது. தமிழ்ப் பதிப்பான கானல் நீர் 1961 சூலை 21 அன்று வெளியானது.[3][6] இதன் இரண்டு மொழிப் பதிப்புகளும் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை; வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, கதை மிகவும் உயர்ந்ததாக பார்வையாளர்கள் நினைத்ததே இதற்குக் காரணம்.[2][3] வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia