கேத்திரி மன்னர் அஜித் சிங்
கேத்திரி மன்னர் அஜித் சிங் (Raja Ajit Singh) (16 அக்டோபர் 1861 – 18 சனவரி 1901) பிரித்தானிய இந்தியாவின் இராஜபுதனம் முகமையின் கீழிருந்த செகாவதி பிரதேசத்தின் கேத்திரி சமஸ்தானத்தை 1870 முதல் 1901 முடிய ஆட்சி செய்தவர். இவர் சுவாமி விவேகானந்தரின் நெருங்கிய நண்பரும், சீடரும் ஆவார். சுவாமி விவேகானந்தர் 1891, 1893 மற்றும் 1897 ஆண்டுகளில் கேத்திரி சென்று மன்னர் அஜித் சிங்கை சந்தித்துள்ளார். 1893ஆம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் பேச கேத்திரி மன்னர் அஜித் சிங் உற்சாகம் ஊட்டியதுடன்[1], 1891ஆம் ஆண்டு முதல் கொல்கத்தாவில் இருந்த சுவாமி விவேகானந்தரின் தாய்க்கு மாதம் ரூபாய் 100 அனுப்பி வைத்தார். மன்னர் அஜித் சிங்கிற்கு 1 டிசம்பர் 1898 அன்று விவேகானந்தர் எழுதிய கடிதத்தில், தன் தாய் புவனேஸ்வரி தேவியின் மறைவிற்குப் பிறகும் பேலூர் மடத்திற்கு நிரந்தரமாக நிதியுதவி செய்ய கேட்டுக் கொண்டார். வரலாறுகேத்திரி சமஸ்தான மன்னர் பதே சிங், அஜித் சிங்கை தத்தெடுத்து வளர்த்தார். 1870ல் பதே சிங்கின் மறைவிற்குப் பின்னர் அஜித் சிங் கேத்ரி சமஸ்தானத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார். மன்னர் அஜித் சிங் கலை மற்றும் இசையை ஆதரித்தவர்.[4] 1897ல் விக்டோரியா மகாராணியின் வைர விழாவிற்கு இங்கிலாந்து சென்றார். [5] சுவாமி விவேகானந்தருடன் நட்பு
22 நவம்பர் 1898ல் சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்[6] 1891ஆம் ஆண்டில் விவேகானந்தருடன் முதல் சந்திப்பிலிருந்து, அஜித் சிங் சனவரி 1901ல் இறக்கும் வரை விவேகானாந்தரின் நண்பராகவும், சீடராகவும் கேத்திரி மன்னர் அஜித் சிங் விளங்கினார். விவேகானந்தர் 22 நவம்பர் 1898 அன்று அஜித் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், தன் வாழ்வில் கிடைத்த ஒரே நண்பன் என அஜித் சிங் என குறிப்பிட்டிருந்தார்.[6] கேத்திரியில் இராமகிருஷ்ண இயக்கத்தின் கிளையை நிறுவுதல்அஜித் சிங்கின் பேரன் பகதூர் சர்தார் சிங் என்பவர் 1958ம் ஆண்டில் கேத்திரி நகரத்தில் இராமகிருஷ்ணா இயக்கத்தின் கிளையை நிறுவி, அக்கட்டிடத்திற்கு விவேகானந்தர் நினைவுக் கோயில் எனப்பெயரிட்டார்.[7] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia