ஜெய்பூர் இராச்சியம்
![]() ![]() ![]() ஜெய்பூர் இராச்சியம் (Jaipur State) 1128ல் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியா ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஜெய்பூர் இராச்சியத்தை ஆம்பர் இராச்சியம், தூந்தர் இராச்சியம் மற்றும் கச்வாகா இராச்சியம் என்றும் அழைப்பர். வரலாறுஜெய்பூர் இராச்சியம், தூந்தர் பிரதேசத்தில் அமைந்த தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டம், தௌசா மாவட்டம், சவாய் மாதோபூர் மாவட்டம், டோங் மாவட்டம் மற்றும் வடக்கு கரௌலி மாவட்டப் பகுதிகளைக் கொண்டது. இதன் முந்திய இராச்சியமான தௌசா இராச்சியத்தை 1093ல் நிறுவியவர் மன்னர் துளே ராவ் ஆவார். கிபி 14ம் நூற்றாண்டு முதல் 1727 முடிய இந்த இராச்சியத்திற்கு ஆம்பர் இராச்சியம் என்று அழைத்தனர். 1727ல் ஜெய்ப்பூர் நகரம் நிறுவப்பட்டதால், அன்று முதல் இவ்விராச்சியத்தை ஜெய்பூர் இராச்சியம் என அழைக்கப்பட்டது. [1] ஆம்பர் இராச்சியம்1561ல் ஆம்பர் இராச்சிய மன்னர் பார்மல் கச்வாகா அக்பருடன் கூட்டுச் சேர்ந்து, தன் மகளை அக்பருக்கு திருமணம் செய்து கொடுத்தார். பார்மல் பிரதேசத்தின் நிலவரியின் ஒரு பகுதி ஆம்பர் இராச்சியத்திற்கு வழங்கப்பட்டது. [2][3]முகலாயப் பேரரசுக் காலத்தில் ஆம்பர் இராச்சியம் செழித்தோங்கியது. ஜெய்பூர் இராச்சியம்முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலத்தில் ஆம்பர் இராச்சிய மன்னர் இரண்டாம் மான் சிங் ஆட்சிக் காலத்தில், 1727ல் ஜெய்ப்பூர் நகரம் நிறுவப்பட்டது. 1790ல் பதான் போரில், மராத்தியப் பேரரசின் படைகள் ஜெய்பூர் இராச்சியத்தை வீழ்த்தியது.[4] 1818ல் ஜெய்பூர் இராச்சியம், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு, சுதேச சமஸ்தானமாக செயல்பட்டது. இந்தியப் பிரிவினைக்கு பின்னர், ஜெய்ப்பூர் இராச்சிய மன்னர், தனது இராச்சியத்தை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் ஏப்ரல், 1948ல் கையொப்பமிட்டார். ஆட்சியாளர்கள்ஜெய்ப்பூர் இராச்சிய மன்னரகள் இராசபுத்திர கச்வாகா குலத்தினர் ஆவார்.
கட்டிடங்கள்ஜெய்பூர் இராச்சிய மன்னர்கள் முதலில் ஆம்பர் கோட்டையைக் கட்டி இராச்சியத்தை நிர்வகித்தனர். இராச்சியத்தின் பாதுகாப்பிற்காக, பின்னர் தலைநகரத்தை செய்ப்பூர் நகரத்திற்கு மாற்றி ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெய்கர் கோட்டை மற்றும் நாகர்கர் கோட்டைகளை கட்டினர். மேலும் ஹவா மஹால், ஜல் மகால் மற்றும் ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) முதலிய அழகிய கட்டிடங்கள் நிறுவினர். இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia