கோ. சூ. பிரகாஷ் ராவ்
கோவெலமுடி சூர்ய பிரகாஷ் ராவ் ( Kovelamudi Surya Prakash Rao ) (1914-1996) கே. எஸ். பிரகாஷ் ராவ் எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகரும் மற்றும் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பணிபுரிந்தார்.[1][2][3] 1977 இல் கன்னடத்தில் சிறந்த இயக்குனருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதை கந்தா ஹெந்தி என்ற படத்துக்காக வென்றார்.[4] 1995 ஆம் ஆண்டில், ராவ் தெலுங்குத் திரைப்படத்துறைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக ரகுபதி வெங்கையா விருதைப் பெற்றார்.[1][3][5] இவர் பிரபல தெலுங்கு இயக்குநர் கே. ராகவேந்திர ராவின் தந்தையும் மற்றொரு பிரபல இயக்குநர் கோ. பாப்பையாவின் மாமாவும் ஆவார். அவன் ஒரு சரித்திரம் (1976), மறுமலர்ச்சி (1956), பெற்ற தாய் (1953) போன்ற சில தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார். விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia