சேத்தன் ஆனந்த் (அரசியல்வாதி)
சேத்தன் ஆனந்த் (பிறப்பு: 20 நவம்பர் 1991) என்பவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். 2020 இல்பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளம் சார்பாக ஷியோஹர் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். ஆரம்பகால வாழ்க்கைவெல்ஹாம் மாணவர் பள்ளியின் முன்னாள் மாணவரான சேத்தன் ஆனந்த், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆனந்த் மோகன் சிங் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான லவ்லி ஆனந்த் ஆகியோரின் மகனும் ஆவார்.[1][2] அரசியல் வாழ்க்கை2015 ஆம் ஆண்டில் கட்சியின் மாணவர் பிரிவின் தேசியத் தலைவராக ஜித்தன் ராம் மாஞ்சி இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியுடன் ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தனது தாயார் லவ்லி ஆனந்துடன், 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2020 செப்டம்பர் பிற்பகுதியில் இராச்டிரிய ஜனதா தளத்தில் சேர்ந்தார்.[3] அவர் ஷியோஹர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார் . கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட தனது தந்தை ஆனந்த் மோகனை விடுவிக்க இவர் பிரச்சாரம் செய்தார. [4][5] 2019 இல் இந்தியாவில் கொரோனாவைரசால் ஏற்பட்ட நாடுதழுவிய ஊரடங்கின் போது, பொது உதவிக்காக இவர் தனது சம்பளத்தை அளித்ததாக செய்திகள் வெளியாயின .[6][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia