சைலோட்டம் நூடம்
சைலோட்டம் நூடம் ( Psilotum nudum ) என்பது ஒரு பன்னம் தாவரமாகும். இது வெப்ப மண்டல ஆப்பிரிக்கா, வெப்பமண்டல நடு அமெரிக்கா, வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல வட அமெரிக்கா, தென் அமெரிக்கா,[1] வெப்பமண்டல ஆசியா, ஆத்திரேலியா, ஹவாய், தெற்கு சப்பான், லோர்ட் ஹாவ் தீவு, நியூசிலாந்து, தென்மேற்கு ஐரோப்பாவின் ஒரு சில தனிப்பட்ட பகுதிகளில் ( "லாஸ் வெப்பமண்டலபகுதிகளான, ஸ்பெயின் , காடிஸ் மாகாணம்) காணப்படுகிறன.[2] [3] தாவரங்களின் பரிணாம வளர்ச்சியின்போது தாவரங்களுக்குச் சைலம், புளோயம் குழல்கள் உருவானது என்பது ஒரு முதன்மையான நிகழ்வு. அவ்வாறு முதன்முதலில் சைலம், புளோயம் குழல்கள் உருவான தாவரங்களில் 40 கோடி ஆண்டுகளுக்கும் முந்தைய சைலோட்டம் நூடம் தாவர வகையின் புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. நீரிலிருந்து நிலத்துக்கு வந்த தாவரங்களில் நிலத்தில் நிமிர்ந்து வளர்ந்த முதல் தாவரம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. இவ்வாறு 40 கோடி ஆண்டுகளுக்கும் முன்பே பூமியில் வேரூன்றிய தாவர இனங்களில் சில இன்னும் உள்ளன. அவற்றில் ஒன்றே பெரணி வகை தாவரத்தைச் சேர்ந்த இந்த சைலோட்டம் நூடம் ஆகும்.[4] விளக்கம்![]() இச்செடி 50 செ.மீ. உயரம் வளரக்கூடியது. இதில் பலக்கிளைகள் உள்ளன. இவற்றில் பல செதில் இலைகள் உள்ளன. இலைப்பக்கத்தில் உருண்டையான, மஞ்சள் நிறத்தில் ஸ்பொராஞ்சியம் உள்ளது. இதிலிருந்து விதைத் துகள்கள் வெளியேறுகிறது. இந்தத் தாவரங்கள் தரையில் தோன்றி 400 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. தாவரங்களுக்குத் தேவையான உணவு, நீர் தாது உப்புகள் ஆகியவை மிகவும் அவசியம். அவற்றை எடுத்துச் செல்ல நீர்குழாய் அல்லது சாற்றுக்குழாய் மிகவும் அவசியம். இந்தச் சாற்றுக்குழாய் முதன் முதலில் இந்தச் செடியில்தான் தோன்றியது. இதன் பிறகே மிக உயர்ந்த தாவர வகைகள் தோன்றின. இது வெப்பப் பகுதியில் நன்கு வளர்கிறது. இவைகள் மரத்தின் மீதும், தரையிலும் வளரக்கூடியது. இவற்றின் தண்டு தரையில் கிடைமட்டாக உள்ளது. இவற்றிற்கு வேர்கள் கிடையாது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia