சோப்பு சீப்பு கண்ணாடி

சோப்பு சீப்பு கண்ணாடி
இயக்கம்திருமலை மகாலிங்கம்
தயாரிப்புநாஞ்சிமுத்து
கார்த்திகேயா பிலிம்ஸ்
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புநாகேஷ்
விஜய நிர்மலா
வெளியீடுமார்ச்சு 15, 1968
நீளம்3793 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சோப்பு சீப்பு கண்ணாடி (Soappu Seeppu Kannadi) என்பது 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். கார்த்திகேயா பிலிம்ஸ் தயாரித்தத இப்படத்தை திருமலை மகாலிங்கம் இயக்கினார். இத்திரைப்படத்தில் நாகேஷ், விஜய நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

கதை

பணக்கார குடும்பத்தின் மூத்த மகனான மதுசூதனனை (நாகேஷ்), அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகின்றனர். வேலை கிடத்து சொந்தக் காலில் நிற்கும்போது திருமண் செய்து கொள்ளலாம் என்று மதுசூதனன் இருக்கிறான். பெரிய குடும்பம் என்பதால் வெளியில் வேலை தர மறுக்கின்றனர். குடுப்பத்தினரின் வற்புருத்தலில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறுகிறார். சென்னைக்கு செலும் தொடருந்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்து பயணச் சீட்டுப் பரிசோதகரிடம் சிக்கிக் கொள்கிறார். அவருடன் சேர்ந்து, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞனான சதாவும் (ஏ. வீரப்பன்) அதே காரணத்திற்காக பிடிபடுகிறான். இருவரும் தொடருந்தில் இருந்து இறக்கி விடப்படுகின்றனர். இருவரும் அலைந்து திரிகின்றனர். மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தொழிலதிபர் ஆற்றில் தவறி விழுந்துவிடுகிறார். அவரை இருவரும் காப்பாற்றுகின்றனர்.

அவர் குரங்கு மார்க் டாய்லெட் என்ற நிறுவனத்தின் உரிமையாளராவார். அவர் தனது அழகுசாதன நிறுவனத்தில் சதாவுக்கு ஓட்டுநர் வேலையும், மதுவுக்கு விற்பனையாளர் வேலையும் போட்டுத் தருகிறார். முதல் நாளை் தனக்கு தரப்பட்ட இலக்கான ரூ 5,000 (2023 இல் ₹260,000 அல்லது US$3,000க்கு சமம்) விற்பனையை முடிக்க மது தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். அவர்களை ஒருவர் ஷெனாய் நகரில் உள்ள ஒரு வீட்டிற்குச் செல்ல பரிந்துரைக்கிறார், அங்கு சென்றால் விற்பனைக்கான நல்ல வணிக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

லதா ஒரு கல்லூரி மாணவி மற்றும் ஷெனாய் நகரில் உள்ள ஒரு தொழிலதிபரின் மகள். லதாவின் தாய் தன மகளின் திருமணம் சம்பந்தமாக தன் உறவினர்களின் வீட்டிற்குச் செல்கிறார். லதா, அவரது தந்தை, அவர்களது சமையல்காரர் தங்கள் வசதிக்காக வீட்டின் திறவுகோல்களை தனித்தனியாக வைத்திருக்கின்றனர். மது வணிக நோக்கத்துக்காக லதாவின் வீடு உள்ள ஷெனாய் நகருக்குச் செல்கிறான். மது வீட்டிற்குள் இருப்பதை அறியாத லதாவின் தந்தை, வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறுகிறார். இதனால் ஷெனாய் நகரில் உள்ள அந்த வீட்டிற்குள் மது சிக்கிக் கொள்கிறான். சதா ஷெனாய் நகரிலும் அதைச் சுற்றியும் அவரைத் தேடுகிறான். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. லதா வீடு திரும்புகிறாள், வீட்டில் ஒரு அந்நியனைக் கண்டு மயக்கமடைகிறாள். மது தனது நிலைமையை விளக்கி அவளை சமாதானப்படுத்துகிறான். மெதுவாக, இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு கொள்கின்றனர். லதாவின் தந்தை பம்பாக்குச் செல்ல வேண்டும் என்பதால், லதாவை அவளுடைய அத்தை வீட்டில் விட்டுச்செல்ல அழைத்துச் செல்கிறார். லதா மதுவிடம் யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் திரும்பி வருவதாக உறுதியளிக்கிறாள். தன் நண்பனைத் தேடும் சதா, ஒரு கொள்ளைக் கும்பலிடம் அவனைப் பற்றி விசாரிக்கிறான். தன் நண்பரிடம் நிறுவனத்தின் பணம் இருப்பதாக அவன் அவர்களிடம் கூறுகிறான். கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர்.

லதாவும் கொள்ளையர்களும் நள்ளிரவில் வீட்டிற்கு வருகின்றனர். மதுவும் லதாவும் திருடர்களிடமிருந்து பணத்தைக் காப்பாற்ற போராடுகின்றனர். ஆனால் அது முடியவில்லை. மது கொள்ளையர்களைத் துரத்துகிறான். வழிப்போக்கர்கள் மதுவை திருடன் என்று தவறாக நினைத்து 100 க்கு பதிலாக 101 எண்ணுக்கு அதாவது தீயணைப்புத் துறையை அழைக்கின்றனர். தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் வந்து புகையைக் கண்டதும் தீயை அணைக்க விரைகின்றனர். அது உண்மையில் நெருப்புப் புகை அல்ல, மாவுத் தூள். கொள்ளையர்கள் ரோந்து காவலர்களால் பிடிக்கப்படுகிறார்கள், பணம் திரும்பக் கிடைக்கிறது. பல குழப்பங்களுக்குப் பிறகு, மது உண்மையில் தனது குடும்பத்தினர் தன் திருமணத்திற்கு பார்த்த பெண்ணின் வீட்டிற்கே வந்திருப்பதைப் புரிந்துகொள்கிறான். மது தனது விருப்பப்படி, தனக்கு ஒரு கிடைத்திருப்பதால் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறான்.

நடிப்பு

தயாரிப்பு

இந்தப் படம் கோபிசெட்டிபாளையத்தில் படமாக்கப்பட்டது.[4] படப்பிடிப்புக்காக ஒரு பசு கடன் வாங்கப்பட்டது.[5]

இசை

இப்படத்திற்கு டி. கே. ராமமூர்த்தி இசையமைத்தார்.[6]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "தூக்கம் கண்ணிலே"  பி. சுசீலா  
2. "யாதும் ஊரடா"  டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன்  
3. "நிச்சயம் நானே"  பி. சுசீலா  

வரவேற்பு

படத்தின் நகைச்சுவைக்காக கல்கி பாராட்டியது.[7]

மேற்கோள்கள்

  1. "Soaappu Seeppu Kannadi (1968)". Screen 4 Screen. Archived from the original on 16 January 2024. Retrieved 16 January 2024.
  2. Cowie, Peter, ed. (1968). World Filmography. Tantivy Press. p. 283. ISBN 978-0-904208-36-8.
  3. "Gobichettipalayam – a 'paradise' for cinema directors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 March 2018. Archived from the original on 14 July 2018. Retrieved 18 May 2019.
  4. "Gobichettipalayam – a 'paradise' for cinema directors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 March 2018. Archived from the original on 14 July 2018. Retrieved 18 May 2019.
  5. "A happy trip down Madras' memory lane". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 23 August 2016. Archived from the original on 12 July 2022. Retrieved 12 July 2022.
  6. "Soppu Seeppu Kannadi". Tamil Songs Lyrics. Archived from the original on 26 April 2022. Retrieved 12 July 2022.
  7. "சோப்பு சீப்பு கண்ணாடி". Kalki. 18 August 1968. pp. 12–13. Archived from the original on 16 January 2024. Retrieved 16 January 2024 – via இணைய ஆவணகம்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya