கரிகோல் ராஜு (Karikol Raju) என்பவர் தமிழ்த் திரைப்பட மூத்த நடிகர் ஆவார். இவர் தமிழ் மொழி படங்களில் தோன்றியுள்ளார். இவர் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக 500 இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், குணச்சித்திர நடிகராகவும், எதிர்மறை வேடங்களிலும் நடித்து வந்தார். ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், இரசினிகாந்து, கமல்ஹாசன், விசயகாந்து, மோகன், கே. பாக்யராஜ், அர்ஜுன், கார்த்திக், பிரபு என நான்கு தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தொழில்
கிராமிய பாத்திரத்துக்கு கரிகோல் ராஜு பொருத்தமாக இருந்தார். இவர் பெரும்பாலும் கிராம பஞ்சாயத்து தலைவர் வேடங்களில் நடித்துள்ளார். பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் ஆகியோரின் பெரும்பாலான கிராமத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். காதலிக்க நேரமில்லை, மதராஸ் டு பாண்டிச்சேரி, குமரிக்கோட்டம், ரிக்சாக்காரன், தூறல் நின்னு போச்சு, கோழி கூவுது போன்றவை இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.[1]
திரைப்படவியல்
இது ஒரு பகுதி படத்தொகுப்பு. நீங்கள் இதை விரிவாக்கலாம்.
1950கள்
1960கள்
1970கள்
1980கள்
1990கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்