ஜோதிரிந்திரநாத் தாகூர்
ஜோதிரிந்திரநாத் தாகூர் (Jyotirindranath Tagore) (1849 மே 4 - 1925 மார்ச் 4) இவர் ஓர் நாடக ஆசிரியரும், இசைக்கலைஞரும், ஆசிரியரும் மற்றும் ஓவியருமாவார். [1] முதல் ஐரோப்பியரல்லாத நோபல் பரிசு வென்ற இவரது தம்பியான, இரவீந்திரநாத் தாகூரின் திறமைகளை வளர்ப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். [2] படைப்புகள்வரலாற்று நாடங்கள் - இவர், புருபிக்ராம் (1874), சரோஜினி (1875), அஷ்ருமதி (கண்ணீரில் பெண், 1879), ஸ்வப்னமயி (கனவு பெண், 1882) போன்ற வரலாற்று நாடங்களை இயற்றியுள்ளார். நையாண்டி நாடகங்கள் - கிஞ்சித் ஜலாஜோக் (சில புத்துணர்ச்சி, 1873), ஈமான் கர்மா அர் கோர்போ நா (நான் இனிமேல் இதுபோன்ற ஒரு காரியத்தையும் செய்ய மாட்டேன் 1877), ஹதத் நபாப் (திடீரென்று ஒரு ஆட்சியாளர், 1884), அலிக் பாபு (விசித்திரமான மனிதன், 1900) போன்ற நையாண்டி நாடகங்களை எழுதியுள்ளார். மொழிபெயர்ப்புகள் - காளிதாசனின் அபிஞான சாகுந்தலம் மற்றும் மாலதி மாதவா; சுத்ரக்கின் மிருச்சதிகா ; மார்க்கஸ் அரேலியஸின் மெடிடேசன்ஸ், ஷேக்சுபியரின் ஜூலியஸ் சீசர் ; பால கங்காதர திலக்கின் கீதை இரகசியம் போன்றவற்றை மொழிபெயர்த்துள்ளார். குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia