தாங் அரசமரபு
தாங் அரசமரபு (சூன் 18, 618 – சூன் 4, 907), சீனாவின் அரசமரபுகளில் ஒன்று. இது சுய் வம்சத்தைத் தொடர்ந்து முன்னணிக்கு வந்தது. தாங் அரசமரபுக் காலத்துக்குப் பின் வந்தது ஐந்து அரசமரபுகளும் பத்து அரசுகளும் காலம். தாங் அரசமரபு லீ குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. சுய் வம்சத்தின் அதிகாரம் இறங்குமுக நிலையை அடைந்து சீர்குலைந்தபோது, இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். 16 அக்டோபர் 690 க்கும் 3 மார்ச் 705 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சீனாவை ஆண்ட ஒரே பேரரசியான வூ செட்டியான் என்பவர் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்ட காலம் தாங் அரசமரப ஆட்சியில் ஏற்பட்ட சிறிய இடையீடு ஆகும். முன்னர் சாங்கான் என அழைக்கப்பட்ட இன்றைய சியான் நகரமே தாங் வம்சத்தினரின் தலை நகரமாக இருந்தது. அக்காலத்தில் உலகில் மக்கள்தொகை கூடிய நகரம் இதுவே. தாங் வம்சக் காலமே சீனப் பண்பாட்டில் மிக உயர்வான காலம் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இது முன்னர் இருந்த ஆன் அரசமரபு காலத்துக்கு ஈடானதாக அல்லது அதை விஞ்சியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றையும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia