திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில்
திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் (சிவானந்தேஸ்வரர் கோயில்) திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சிவாநந்தீஸ்வரர். தாயார் ஆனந்தவல்லி. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. இத்தலம் பிருகு முனிவர் வழிபட்ட திருத்தலம்.[1] இது பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[2] தல வரலாறுசிவபெருமான் தன்னுடைய திருமணத்தினால் வடநிலம் உயர்ந்து, தென்நிலம் தாழ்வதை தவிர்க்க அகத்தியரை தென்நிலப்பகுதிக்கு அனுப்பினார். அகத்தியர் சிவபெருமானின் திருமணத்தினைக் காண இயலாமல் போவது குறித்து வருந்தியமையால், விரும்பும் இடங்களிலெல்லாம் திருமணக் கோலத்தில் காட்சி தருவதற்கு சிவபெருமான் வரம் தந்தார். திருக்கண்டலம் பகுதியில் அகத்தியருக்கு திருமணக் கோலத்திலும், முருகப்பெருமான் மற்றும் உமையம்மையுடன் சோமாஸ்கந்தராகவும் காட்சியளித்தார். தல பெருமை
அமைவிடம்இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டலம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவற்றையும் பார்க்கஆதாரங்களும் மேற்கோள்களும்வெளி இணைப்புகள்அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்
|
Portal di Ensiklopedia Dunia