நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்
நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் (Federally Administered Tribal Areas), பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள 27,220 சகீமீ பரப்பளவில் அமைந்த மலைப்பகுதிகள் ஆகும். இங்கு இசுலாமிய மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். பாகிஸ்தானில் மிகவும் நாட்டுப்புறமான பகுதியாகும்; இப்பகுதியின் 3,341,070 மக்களில் 3.1% மட்டும் நகரங்களில் வசிக்கின்றனர். நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் தெற்கு வசீரிஸ்தான், வடக்கு வசீரிஸ்தான், கைபர் மாவட்டம், குர்ரம் மாவட்டம், பஜூர் மாவட்டம், மொகமந்து மாவட்டம் மற்றும் ஒராக்சாய் மாவட்டம் என 7 முகமைகள் உள்ளன. கூடுதலாக ஆறு எல்லைபுறப் பகுதிகள் உள்ளன. இந்த அரசியல் பிரிவின் நிர்வாக மையம் பெஷாவர் நகரில் அமைந்துள்ளது. இப்பழங்குடிப் பகுதிகளில் செயல்படும் தலிபான் மற்றும் பாகிஸ்தான் மத அடிப்படைவாத தீவிரவாதிகளால் பெண் குழந்தைகளுக்கு கல்வியும் மற்றும் மகளிர்க்கு ஆங்கில மருத்துவம் மறுக்கப்படுகிறது.[1] இப்பகுதி தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்ததால், 2018-இல் பாகிஸ்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இப்பகுதியை கைபர் பக்துன்வா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[2] [3] இதனையும் காண்ககுறிப்புகள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia