ஒராக்சாய் மாவட்டம்ஒராக்சாய் மாவட்டம்
ஒராக்சாய் மாவட்டம் (Orakzai District) (பஷ்தூ: اورکزو ولسوالۍ, Urdu: ضلع اورکزئی), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கில்ஜோ பஜார் ஆகும். கில்ஜோ பஜார், மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடமேற்கொல் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அமைவிடம்இம்மாவட்டத்தின் மலைத்தொடர்கள் 6,000 மீட்டர் வரை உயரம் கொண்டுள்ளது. இதன் மேற்கில் குர்ரம் மாவட்டம், வடக்கில் கைபர் மாவட்டம், தெற்கில் கோஹாட் மாவட்டம், கிழக்கில் பெசாவர் நகரம் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 2,54,303ஆகும். அதில் ஆண்கள் 1,27,564 மற்றும் பெண்கள் 1,26,728 உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 37.43% ஆகும். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 176 பேர் மட்டுமே உள்ளனர். [3] மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் 4 தாலுகா]]க்கள் கொண்டது. அவைகள்:
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia