குர்ரம் மாவட்டம்
குர்ரம் மாவட்டம் (Kurram District) (பஷ்தூ: کرم ولسوالۍ, Urdu: ضلع کرم), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3][4][5] இதன் நிர்வாகத் தலைமையிடம் பராச்சிநர் நகரம் ஆகும். பராச்சிநர் நகரம், கைபர் பக்துன்வா மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு தென்மேற்கே 252 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தில் 98.6% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர். இம்மாவட்டத்தில் குர்ரம் ஆறு பாய்கிறது. இதன் பெரும்பான்மை மக்கள் பஷ்தூ மொழி பேசும் சியா இசுலாம் பிரிவினர் ஆவார். இம்மாவட்டத்தின் கிழக்கு, வடகிழக்கு பகுதி தவிர மற்ற பகுதிகள் ஆப்கானித்தான் நாட்டை எல்லைகளாக கொண்டுள்ளது. மக்கள் தொகை பரம்பல்2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 615,372 ஆகும். அதில் ஆண்கள் 3,06,935 மற்றும் பெண்கள் 3,08,393 உள்ளனர். எழுத்தறிவு 40.43% கொண்டுள்ளது. 93.82% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 904 பேர் மட்டுமே உள்ளனர்.[2] 98.6% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர். மாவட்ட நிர்வாகம்குர்ரம் மாவட்டம் 3 தாலுகாக்கள் கொண்டது.[6]அவைகள்:
சட்டமன்றப் பிரதிநிதிகள்கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு இம்மாவட்டம் இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia