மொகமந்து மாவட்டம்
மொகமந்து மாவட்டம் (Mohmand District) (பஷ்தூ: مومندو ولسوالۍ, Urdu: ضلع مہمند), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் காலானை நகரம் ஆகும். இது மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடமேற்கே 46.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மேற்கில் ஆப்கானித்தான் உள்ளது. அமைவிடம்மொகமந்து மாவட்டத்தின் வடக்கில் பஜூர் மாவட்டம், மேற்கில் ஆப்கானித்தான், தெற்கில் கைபர் மாவட்டம், கிழக்கில் மாலகண்ட் மாவட்டம் மற்றும் சார்சத்தா மாவட்டம் தென்கிழக்கில் பெசாவர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் 7 தாலுகாக்கள் கொண்டுள்ளது.[2]அவைகள்:
மக்கள் பிரதிநிதிகள்இம்மாவட்டம் மாகாணச் சட்டமன்றத்திற்கு இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது. மக்கள் தொகை பரம்பல்2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 4,74,345 ஆகும். அதில் ஆண்கள் 241,549 மற்றும் பெண்கள் 232,755 உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 30.39% ஆகும். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் பேர் மட்டுமே உள்ளனர்.[1] பஷ்தூ மொழியை 98.83% மக்கள் பேசுகின்றனர். இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia