பகுப்பு பேச்சு:இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள்இந்தப் பகுப்பில் உள்ள பல கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை குறித்து எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. பொதுவாக, பல கட்டுரைகளில் காணப்படும் தன்மை:
கட்டுரையில் காணப்படும் பிற குறைகள்:
கிட்டத்தட்ட அனைத்துக் கட்டுரைகளும் இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011 என்ற ஒரே ஒரு நூலை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளமையால் நூலில் வேறு கூடுதல் தகவல் உள்ளதா, இப்படி ஒட்டு மொத்தமாக ஒரு நூலை அடிப்படையாக வைத்து எழுதுவது காப்புரிமைச் சிக்கல் ஆகுமா என்று அறிய விரும்புகிறேன். நீக்கல் பரிந்துரை ஏ. கே. முஹம்மது யாசீன் என்னும் ஒரு கட்டுரையில் உள்ள தரவுகளை மட்டும் ஆய்ந்தோம் என்றால்,
இதில் எங்குமே எழுத்துப் பணி இல்லை. ஒருவரை விளையாட்டு வீரர் என்று அறிமுகப்படுத்தினால், அவரது விளையாட்டு வாழ்க்கையைப் பற்றிய தகவல், தரவுகளை அந்தக் கட்டுரை கொண்டிருக்க வேண்டும். அதே போலவே எழுத்தாளர்களின் கட்டுரையும். இத்தரவுகளின் அடிப்படையிலேயே அவர் குறிப்பிட்டத்தக்கவரா இல்லையா என்று முடிவெடுக்க முடியும். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானால் நூல் அச்சடித்து என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எனவே, ஒரே ஒரு நூலை ஆதாரமாக வைத்து இது போன்ற தரவற்ற கட்டுரைகளை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, எழுத்துப் பணி பற்றிய தரவு இல்லாத கட்டுரைகளை நீக்கக் கோருகிறேன்--இரவி 13:30, 25 சனவரி 2012 (UTC)
//இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011// 1. இந்நூல் நீங்கள் குறிப்பிடும் print encyclopedia/reference work என்ற அடிப்படையில் கீழ் வருமா? ஒரு நூல் இப்படி கருதப்படுவதற்கான வரையறை என்ன? 2. ஒருவர் என்ன எழுதினார் என்றே குறிப்பு இல்லாத நிலையில் அவரை எப்படி குறிப்பிடத்தக்க எழுத்தாளர் என்று ஏற்றுக் கொள்வது? இதே போன்று அறிவியலாளர், அரசியலாளர் பற்றிய கட்டுரை இருந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? முதன்மைத் தரவுக்குப் புறம்பான மற்ற தகவல்களை இக்கட்டுரையில் இருந்து நீக்கினால், கட்டுரையில் ஒன்றுமே இருக்காது. 3. தரவுக்குப் பதிப்புரிமைச் சிக்கல் இல்லை தான். ஆனால், இந்தத் தரவுகளைத் தவிர அந்நூலில் எழுத்தாளர்களைப் பற்றிய கூடுதல் தகவல் உள்ளதா? இல்லை என்றால், நூலைப் பல துணுக்குகளாக மாற்றி இடுவதற்குச் சமமே.--இரவி 14:12, 25 சனவரி 2012 (UTC) என்ன எழுதினார்கள் என்றே குறிப்பிடப்படாத அனைத்துக் கட்டுரைகளையும் நீக்குவதற்குப் பரிந்துரைத்துள்ளேன். மறுப்புள்ளவர்கள் தெரிவிக்கவும். நன்றி --இரவி 20:18, 25 சனவரி 2012 (UTC)
பதிப்புரிமைச் சிக்கல் பற்றி தெளிவுபடுத்தியமைக்கு நன்றி--இரவி 20:31, 25 சனவரி 2012 (UTC)
inclusionismல் எனக்கும் இணக்கமுண்டு. ஆனால், ஒருவர் எதற்காக குறிப்பிடப்படுகிறாரோ அதற்கான அடிப்படை தரவாவது இருக்க வேண்டும். abc என்னும் ஒருவர் இந்த ஆண்டு பிறந்தார், இந்தத் தெருவில் வாழ்கிறார், அவருக்கு இன்னின்ன பணிகளில் ஆர்வம் உண்டு என்று சொல்லி விட்டு அவரை வடபழனி அறிவியலாளர்கள் பகுப்பில் இட்டால் ஏற்றுக் கொள்வீர்களா? அதே போல் தாம் இந்தக் கட்டுரைகள் எழுப்பட்டுள்ளன. ஒருவர் இந்திய இசுலாமிய எழுத்தாளர் என்ற பகுப்புக்குள் வருவதற்கு முன் இந்தியர், இசுலாமியர் என்ற அடையாளத்தையும் தாண்டி எழுத்தாளர் என்ற அளவில் குறிப்பிடத்தக்கமை இருக்க வேண்டும். ஒருவர் எழுத்தாளரா இல்லையா குறிப்பிடத்தக்கவரா என்பதை அவரது எழுத்தாக்கப் பணியை வைத்துத் தான் அறிய முடியும். இந்த ஆண்டு பிறந்து இந்தத் தெருவில் வாழ்பவர் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரா என்று எப்படி ஆய்வது?அவரைப் பற்றி ஒரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் ஒப்புக் கொள்ள முடியாது. //இதுவரை தமிழ் விக்கிப்பீடியா பேணி வந்திருக்கும் தரவுகள்/குறிப்பிடத்தக்கமை வழக்கங்களைப் பார்க்கையில் இந்நூல் கண்டிப்பாக "reference work" தான். // இந்த அடிப்படையில் இது போன்ற கட்டுரைகளை ஏற்றுக் கொள்வது ஆபத்தான போக்காக முடியும். தமிழ்நாட்டில் எத்தனைப் பதிப்பகங்கள் உள்ளன, அவற்றின் தரம் என்ன, ஊருக்கு எத்தனைக் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்... --இரவி 20:49, 25 சனவரி 2012 (UTC)
சோடாபாட்டில், இந்நூல் காயல்பட்டினம் அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகாநாட்டில் வெளியிடப்பட்டது. தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்படிருந்தால் எழுத்தாளர் என்பதற்கு நம்பகத்தன்மை கூடும். இசுலாமியத் தமிழிலக்கியம் என்னும் போது பொதுவான குறிப்பிடத்தக்கமையில் சாய்வு இருக்க வாய்ப்புண்டு. எழுத்தாளர்களில் யார் இசுலாமியர் என்று பார்த்துப் பகுப்பு இடுவது வேறு. இசுலாமியர் என்பதற்காகவே ஒருவரை எழுத்தாளராக முன்வைப்பது வேறு. //இதே நூலை உசாத்துணையாகக் கொண்டு எழுதப்பட்ட பிற எழுத்தாளர்களில் நம்பகத்தன்மை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கும் போது (எழுத்துப்பணி பற்றிய குறிப்புகள் இடம் பெறுவதால்),// inclusionism, இணக்க முடிவுக்கு உடன்பட்டு எழுத்தாக்கம் பற்றிய குறிப்புகள் உள்ள கட்டுரைகளை மட்டுமாவது இப்போது ஏற்றுக் கொள்ளலாம். ஏன் என்றால், அவர்கள் எழுத்தாக்கங்களின் அடிப்படையில் அவர்களின் குறிப்பிடத்தக்கமையை உறுதி செய்ய முடியும். எனவே, இக்கட்டுரைகளை ஏற்றுக் கொள்வதற்கு எழுத்தாக்கமே காரணமே அன்றி, உசாத்துணை நூல் காரணம் அன்று. எனவே, அதே உசாத்துணை நூலில் உள்ள மற்ற கட்டுரைகளை ஏன் ஏற்கக் கூடாது என்று வாதம் எழாது. பி.கு: அருள் கூர்ந்து, இதை இசுலாம், இசுலாமிய எழுத்தாளர்களுக்கு எதிரான செயற்பாடாக யாரும் கருதி விட வேண்டாம். எந்த நாடு, சமயமாக இருந்தாலும் இங்குள்ள கருத்துகள் பொருந்தும்--இரவி 21:25, 25 சனவரி 2012 (UTC) தகவல் குறிப்பிடத்தக்கதா, போதுமான அடிப்படைத் தரவுகள் உள்ளனவா என்பதே இப்போது பிரச்சினை. எல்லா கட்டுரைகளையும் தனி ஒரு பட்டியல் பக்கத்துக்கு நகர்த்தினாலும் இது பொருந்தும். ஆசிரியர் பெயர், நூல் பெயர் மட்டும் ஒரு கட்டுரையில் இருந்தால் தனி ஒரு கட்டுரை தேவை இல்லை என்று பட்டியல் பக்கத்துக்கு நகர்த்துவது பொருந்தும்.--இரவி 21:46, 25 சனவரி 2012 (UTC)
//என்னைப் பொறுத்தவரை இது தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட ஒரு முஸ்லிம் எழுத்தாளர் who's who என்பதில் ஐயமில்லை.// //இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்/எழுத்தாளர்கள் பற்றி பல நூலகளை எழுதியவராகவும், இஸ்லாமிய தமிழிலக்கியச் சூழலில் ஒரு துறை வல்லுனராகவும் தெரிகிறார்.// கட்டுரைகள் அனைத்தும் இவர்களை எழுத்தாளர், கவிஞர் என்று அறிமுகப்படுத்துகின்றனவே ஒழிய முசுலிம் எழுத்தாளர், முசுலிம் கவிஞர் என்று அறிமுகப்படுத்தவில்லை. எனவே, பொதுவாகவே எழுத்தாளர், கவிஞர் என்பதற்கான குறிப்பிடத்தக்கமை இருக்க வேண்டும். பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள் என்பதன் கீழ் புதுமைப்பித்தனும் இருக்கிறார். என்ன எழுதினார் என்றே தெரியாத 100+ ஆட்களும் இருக்கிறார்கள் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? இவர்கள் எழுத்தாளர்கள் தான் என்று தமிழ்நாடு அரசே சான்றிதழ் அளித்தாலும், என்ன எழுதினார்கள் என்று தெரியாமல் ஒருவரை எழுத்தாளராக ஏற்றுக் கொள்வது அறிவுடமையா? பகுப்பு மட்டுமே இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் எனக் கூறுகிறது. ஆனால், பகுப்பை நீக்கினாலும் கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை நிலைக்க வேண்டும். குறிப்பிடத்தக்க கட்டுரைகளை எழுதி விட்டு தகுந்த பகுப்பு இடலாம். பகுப்பை முடிவு செய்து விட்டு, அதன் அடிப்படையில் கட்டுரையின் குறிப்பிடத்தக்கமையை நியாயப்படுத்தக்கூடாது. இதே அடிப்படையில் ஒவ்வொரு சமயத்துக்கும் ஒவ்வொரு சாதிக்கும் கூட எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள் பட்டியல் இட்டு நியாயப்படுத்த முடியும். இதுவே ஆபத்தான போக்கு. ஒரு கலைக்களஞ்சியத்தின் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும். எழுத்தாளர்கள் என்ற அளவிலேயே குறிப்பிடத்தக்கவர்களாக உள்ள சில இந்திய / தமிழ்நாட்டு இசுலாமியர் கீழே காணலாம்: http://en.wikipedia.org/wiki/Inkulab ஆகியோரின் கட்டுரைகளில் இந்தப் பகுப்பினையும் இட்டால் அதற்கு ஒரு பொருள் உண்டு. //இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பது தமிழ் இலக்கியத்தின் ஒரு உட்பகுப்பே. ஒரு உட்பிரிவு மாநாட்டில் நூல் வெளியிடப்பட்டது என்பதாலேயே அதில் சார்பு இருக்கும் என்று எப்படி முடிவு செய்ய இயலும். பெண்கள் இலக்கிய மாநாட்டில் வெளியானால், பெண்களுக்கான சார்பு இருக்கிறது என்று சோல்லி விடலாமா. // நூலின் பெயர் இலக்கிய இணையம். ஆனால், அதில் உள்ளவர்கள் அனைவரும் இசுலாமியர்கள். இது இசுலாமியர்கள் தொடர்பான சாய்வா இல்லையா? அதாவது, இசுலாமியர் என்ற காரணத்தாலேயே இவர் எழுத்தாளர் என்ற முறையில் இந்நூலில் அறிமுகப்படுத்தப்படுகிறார். இத்தகைய ஒரு niche நூலில் கூட குறிப்பிடும் அளவில் அவருடைய ஆக்கங்கள் இல்லை எனில், பொதுக்களத்தில் இவரின் குறிப்பிடத்தக்கமை என்ன? //அப்படிப் பார்த்தால், “தமிழ் இலக்கிய மாநாட்டில்” வெளியிடப்படும் நூலில் தமிழர்/தமிழ்நாட்டு சார்பு இருக்கும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது இந்திய சாகித்ய அகாதமி வெளியிடும் who's who இல் இடம்பெறும் தமிழ் எழுத்தாளர்களைத் தான் ஏற்க முடியும் என்று சொல்லலாமா.// தமிழக எழுத்தாளர்கள் என்று ஒரு தமிழ் நிறுவனம் வெளியிடும் ஒரே ஒரு நூலில் மட்டுமே வாழும் மாந்தர் ஒருவரின் பெயர் இருந்து, அவரின் ஆக்கங்கள் பற்றிய தகவல் வேறு எங்கும் இல்லை என்றால் அவர் குறிப்பிடத்தக்கவர் இல்லை தான். //இவர்களிடம் எழுத்தாக்கம் உள்ளதென்பதை நாமெப்படி அறிவோம்?. இந்த உசாத்துணை நூல் மூலமாகத் தானே?. சிலருக்கு எழுத்தாக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, சிலருக்குக் குறிப்பிடப்படவில்லை. இரு தரப்பினரும் உசாத்துணை நூலில் இடம் பெறுகின்றனர். எழுத்தாளர்களா இல்லையா என்ற வினவும் போது இருவரையும் சமமாகவே கொள்ள வேண்டும். “இந்த நூலில் அவர்கள் எழுத்தாக்கம் இடம் பெறவில்லை என்று தான் பொருள்”. ஆனால் அதே நூல் அவர்களை எழுத்தாளர்களாக மதித்து பிறருடன் சேர்த்துள்ளது. // இதே ஏரணத்தைத் தமிழ் விக்கிப்பீடியா சார்ந்தும் புரிந்து கொள்ள மாட்டார்களா? புதுமைப்பித்தனும் தமிழ் எழுத்தாள்கள் பகுப்பில் இருக்கிறார். இந்த 100+ பேர்களும் என்ன எழுதினார்கள் என்றே தெரியாமல் தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பில் இருக்கிறார்கள். தமிழ் விக்கிப்பீடியா இருவரையும் சமமாக வைத்துள்ளது என்று தமிழ் விக்கிப்பீடியா வாசகர்கள் இவர்களை கண்மூடித் தனமாக எழுத்தாளர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? இதைத் தான் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நேரக்கூடிய ஆபத்தான போக்குகளில் ஒன்று எனச் சொன்னேன். ஓரிரு கட்டுரை மட்டும் இந்நூலை அடிப்படையாக வைத்து இருந்தால் பரவாயில்லை. ஆனால், நூற்றுக் கணக்கான கட்டுரைகளை இவ்வாறு இடும் போது ஒரு நூலின் நம்பகத்தன்மையைத் தாண்டியும் ஒருவரின் குறிப்பிடத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது விக்கிப்பீடியாவின் கடமை. //இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்/எழுத்தாளர்கள் பற்றி பல நூலகளை எழுதியவராகவும், இஸ்லாமிய தமிழிலக்கியச் சூழலில் ஒரு துறை வல்லுனராகவும் தெரிகிறார்.// இவர்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்பு தகவல் புரட்சி இல்லாத காலத்திலோ சில நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருந்தாலோ மரைக்காயரை ஒரு துறை வல்லுனராக ஏற்று அவரது உசாத்துணை மட்டும் போதுமானது என நினைக்கலாம். ஆனால், Biography articles should only be for people with some sort of fame, achievement, or perhaps notoriety. One measure of these is whether someone has been featured in several external sources (on or off-line). Less well-known people may be mentioned within other articles என்ற அடிப்படையில் வாழும் மாந்தர்களான இவர்களின் இலக்கியப் பங்களிப்புக்கு இன்னும் கூடுதல் உசாத்துணை தேவை. //இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெரும் பிரிவுகளில் ஒன்று. ஏதோ சிறிய நான்கைந்து பேர் கொண்ட இலக்கியவட்டமல்ல. அதற்கு தனியாக நாம் கட்டுரையே எழுதி வைத்திருக்கிறோம். அதற்கு நடந்த ஒரு மாநாட்டில் வெளியிடப்பட்ட நூலில் சார்பிருக்கும், குறிப்பிடத்தக்கமை குலைந்திருக்கும் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. இசுலாமியத் தமிழ் இலக்கியத்தை நாம் தமிழ் இலக்கியத்தின் பிரிவுகளில் ஏற்போமெனில் அதை எழுதுவோரையும் தமிழ் எழுத்தாளர்களில் ஒரு பிரிவாகத் தான் ஏற்க வேண்டும்.// இசுலாமியத் தமிழ் இலக்கியம் குறித்த தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் இருந்து: "இசுலாமிய சமயம் தொடர்பான தமிழ் இலக்கியங்களே இவ்வாறு சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன." இசுலாமியத் தமிழ் இலக்கியம் என்பது வேறு. எழுதுபவர் இசுலாமியராக இருப்பது வேறு. இசுலாமியர் எழுதுவது எல்லாமே இசுலாமியத் தமிழ் இலக்கியம் கிடையாது. ஒரு நல்ல எழுத்தாளரை இசுலாமியர் என்ற அடிப்படையில் மட்டுமே அடையாளப்படுத்துவதும் அவருக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது. இசுலாமியத் தமிழ் இலக்கியத்தை இசுலாமியர் தான் எழுத வேண்டும் என்றில்லை. (மேலே உள்ள வாதத்தில் தலித், பெண்ணியம் என்று வேறு எடுத்துக்காட்டுகளையும் பொருத்திப் பார்க்கலாம்) சிறுகதையா புதினமா ஆய்வுக்கட்டுரையா சமயப் பாடல்களா என்று இங்கு இவர்கள் என்ன எழுதினார்கள் என்றே தெரியாத நிலையில் இசுலாமியத் தமிழ் இலக்கியம் எழுதினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அந்தக் காரணத்தினால், இவர்களை நான் ஏற்க மறுக்கிறேன் என்பதும் செல்லாது. மேற்கண்ட கட்டுரையில் இசுலாமியத் தமிழ் இலக்கியம் என்று குறிப்பிடப்படும் எந்த ஆக்கத்தின் எழுத்தாளரையும் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இல்லை. எதைப் பட்டியலில் சேர்ப்பது? //ஈரோடுவில் பிறந்து தற்போது ஈரோடு திருநக் காலனியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், ஆன்மீகத் துறையில் நாட்டமுள்ளவரும், பல்வேறு விருதுகளையும், பரிசில்களையும் வென்றவரும், பல அமைப்புகளின் பொறுப்பாளருமாவார்.// கட்டுரையில் உள்ள தகவலை நீக்காமல் ஒரு பட்டியலை உருவாக்கி வழி மாற்றி விட்டாலும், இது போன்ற பொத்தாம் பொதுவான தகவல் உடைய தகவலில் எதைச் சேமிப்பது? http://en.wikipedia.org/wiki/List_of_Indian_writers என்பதைப் போல இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் என்ற ஒரு பட்டியல் உருவாக்கி, அதில் இவர்களின் பெயர்களை மட்டும் பட்டியல் இட்டு உசாத்துணை நூலாகக் குறிப்பிடலாம். எழுத்தாக்கம் குறிப்பிடப்படாத நிலையில், பெயர், பிறந்த தேதி, ஊர் தவிர மற்ற பொதுப்படையான தகவல்கள் அனைத்தும் சேமித்து வைக்கத் தேவையற்றதாகவே உள்ளன. வாழும் மாந்தர்களின் குறிப்பிடத்தக்கமைக்கு நான் கோருவது பின்வரும் இரண்டில் ஒரு விசயம் தான்:
கட்டுரைகளை அப்படியே நீக்காமல், ஒரு மாதமோ இரு மாதமோ நீக்கல் அறிவிப்புக் காலம் கொடுக்கலாம். இதற்குள் கட்டுரைகளில் கூடுதல் தகவல் சேர்ந்தால் சரி. அல்லது, இவற்றில் எவை பெறுமதியான தகவல் என்பதை முடிவு செய்து பட்டியல் பக்கத்துக்கு நகர்த்தலாம். என்பது ஒரு பொதுக் கருத்தாக இருக்க முடியும். இதற்கு இணங்குகிறேன்.--இரவி 17:13, 26 சனவரி 2012 (UTC) நூலின் நம்பகத்தன்மை குறித்து
ஆகிய ஐயங்கள் எழுப்பப்பட்டுள்ளன என்பதால் ஆசிரியர் பற்றி சற்று தேடினே. நூலாசிரியர் மு. சாயபு மரைக்காயர் vanity publishing ல் ஈடுபடுபவரல்ல என்று தெளிவானது. அவரது நூல்கள் கன்னிமாரா நூலகம், சிங்கப்பூர் தேசிய நூலகம், மலேசிய தேசிய நூலகம் போன்றவற்றிலும் மேலும் பல நூலகங்களிலும் [1] [2] அவரது நூல்கள் இடம் பெற்றுள்ளன. மிகக்குறைவாக தமிழுக்கு இடமளிக்கும் ஆங்கில இதழ் இந்துவில் கூட விமர்சனம் செய்யப்ப்பட்டுள்ளன. தெற்காசிய மானுடவியலில் குறிப்பிடத்தக்க அறிஞராகக் கருதப்படும் சூசன் பெய்லியின் நூலில் மேற்கோளாகச் சுட்டப்பட்டுள்ளன. (சூசன் பெய்லியின் நூல்கள் பல மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்திய வரலாறு/மானுடவியல் துறைகளில் பாடநூலகளாகப் பயன்படுத்தப்படுபவை). தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடத்திலும் இவர் குறிப்பிடப்படுகிறார். புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது வாங்கியுள்ளார். இதிலிருந்து இவர்
இங்கு தேங்காய் மூடி போன்ற அடைமொழிகள் நகைச்சுவைக்காகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட எழுத்தாளருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:51, 26 சனவரி 2012 (UTC)
பொதுப்பட பேசாமல் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்இக்கட்டுரைகளில் பலவற்றை நீக்கத் தகுந்தவை என்று இரவி கூறியுள்ளார். கனகு சிறீதரனும் நானும் அதற்கு ஒப்புதல் இட்டுள்ளோம். என் கேள்வி என்னவென்றால், ஏன் இந்த 212 கட்டுரைகளும் தனித்தனி கட்டுரைகளாக இருக்க வேண்டும்? இதே தகவலை ஓரிண்டு அட்டவணைகளில் எளிதாக இடலாமே! கீழே எடுத்துக்ககட்டப்பட்டுள்ளவை இவற்றில் உள்ள உள்ளடக்கங்களுக்கு எடுத்துக்காட்டு. இவை போதுமானவை அல்ல. நீக்கல் விண்ணப்பத்துப் பக்கத்தில் வாழ்க்கை வரலாறுகள், அதுவும் வாழும் மாந்தர்களின் வரலாறுகள், குறிப்பிடுந்தன்மை முதலியவை பற்றி நான் சுட்டியுள்ள கொள்கைசார் கருத்துகளைப் பாருங்கள். குறிப்பாக w:en:WP:NOT என்னும் பகுதியில் "Wikipedia is not a directory" என்னும் பக்கத்தையும் பாருங்கள். ஒரே மாதிரியான மிகப் பொதுப்படையான கூற்றுகள் கொண்ட 2-4 வரி கட்டுரைகள், அதுவும் நூற்றுக்கணக்கில் ஒரே நூலில் இருந்து எடுத்து இடுதல் சரியாகுமா? "Biography articles should only be for people with some sort of fame, achievement, or perhaps notoriety. One measure of these is whether someone has been featured in several external sources (on or off-line). Less well-known people may be mentioned within other articles" என்னும் தொடரையும் கருத்தில் கொள்ளுங்கள். கீழே உள்ளவற்றைப் பாருங்கள் :
--செல்வா 14:35, 26 சனவரி 2012 (UTC)
விபரக்கொத்துசெல்வா, நீங்கள் "Wikipedia is not a directory" என்பதைக் குறிப்பிடுகிறீர்கள. அதேவேளை "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" என்று ஏராளமாகப் பட்டியலிட்டிருப்பவை அவ்வாறுதானே உள்ளன. அவற்றைத் தனித் தனிக் கட்டுரைகளாக இருக்க வைக்க வேண்டுமாயின், இலங்கையில் உள்ள பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை, மாகாண சபை, பாராளுமன்றம் போன்றவற்றுக்கான தேர்தல்கள், அவ்வாறே மலேசியா, இந்தோனேசியா ... தேர்தல் முடிவுகளை எல்லாம் எழுதித் தனித் தனிக் கட்டுரைகளாக ஆக்குவதற்கு இடமுண்டா?--பாஹிம் 18:13, 26 சனவரி 2012 (UTC)
இதைத்தான் நானும் சொல்கிறேன். எந்தக் கட்டுரையாக இருந்தாலும் அது போதிய அறிவு வளர்ச்சிக்குப் பங்களிக்கத் தக்கதாக இருக்க வேண்டும். வெறுமனே பெயர்களையோ பெறுபேறுகளையோ அடுக்கிக் கொண்டு செல்வதாயின் அது கலைக்களஞ்சியம் என்ற வரையறைக்கு உட்படாது என்றே கருதுகிறேன். நீங்களும் அதைத்தானே, "கலைக்களஞ்சியத்தின் அடிப்படைக் குறிக்கோளே, எவ்வாறு சுருக்கமாக, கருவான கருத்துகளை கற்றுக்கொள்ளுமாறு/தெரிந்து கொள்ளுமாறு ஆணித்தரமாக எழுதலாம் என்பதே" என்று சொல்கிறீர்கள். எனினும், மேற்படி கட்டுரைகளைப் பொறுத்தவரையில் விக்கிப்பீடியாவில் உள்ள பலரும் அவை குறித்து முதலிலேயே கூறாதிருந்தமையினால் அல்லது கவனிக்காதிருந்தமையினால் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவற்றை விரிவாக்குமாறு கட்டுரையாசிரியருக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் அத்துறையில் ஆர்வமுள்ளோரும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபடலாம். அவ்வாறு விரிவாக்கம் செய்ய முடியாத கட்டுரைகளைத் தனிப் பட்டியலொன்றுக்குட் கொண்டு வரலாம். இங்கு எழுத்தாளர்கள் பற்றிய சிக்கல் எழு முன்னரே வேறு கட்டுரைகள் தொடர்பில் நாம் அவ்வாறுதான் நடந்து கொண்டோம். தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் என்று (என்னைப் பொருத்தவரையிற்) பொருளற்ற ஒருவரிக் கட்டுரைகள் பல இருந்தன. அவையனைத்தையும் நீக்குவதற்கு நான் நீக்கல் வேண்டுகோளை இணைத்தபோது அவற்றையெல்லாம் இணைத்து ஒரு பட்டியலாக்கப்பட்டது. ஆறுகள் பற்றிய ஒருவரிக் கட்டுரைகளை எழுதியவர் அதற்காக எங்கேயும் வருத்தப்பட்டதாக அறியேன். எனவே, இந்த விபரம் தெரியாத எழுத்தாளர் கட்டுரைகளுக்கும் அவ்வாறே செய்யலாம். வெறுமனே பெயர்களை அல்லது சொற்களை அல்லது பெறுபேறுகளைப் பட்டியலிடுவதனால் என்ன பயன் விளையும்? அதே நேரம், விக்கிப்பீடியாவின் வளர்ச்சி அறிவார்ந்ததாக இருக்க வேண்டுமாயின் குறிப்பிட்ட ஒரு வகைக் கட்டுரைகள் உரவாகும் போது தொடக்கத்திலேயே அதைப் பற்றி அறிவுறுத்தப்பட வேண்டும். மாறாக, ஒரு பயனர் ஏராளமான கட்டுரைகளை எழுதிய பின்னர் அது குறித்து ஆளுக்கொரு பக்கம் நின்று கருத்தாடுவதால் ஏனைய பயனர்களிடம் உளத்தாங்கல் ஏற்படலாம். நாமிருக்கும் சூழலில் எங்களிடம் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொடர் பங்களிப்பாளர்களே உள்ளனர். இந்நிலையில் நாம் இதனைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.--பாஹிம் 02:35, 28 சனவரி 2012 (UTC)
தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகநூற்றுக்கணக்கான ஒருவரிக்கட்டுரைகள், அல்லது மேலே உரையாடியுள்ள 'தனித்தன்மையற்ற' பல கட்டுரைகளை புன்னியாமீன் அல்லது வேறொரு பயனர் எழுதியதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கலாமே? அவர்களின் நேரம், வேலை குறைந்திருக்குமே, தவிர்த்திருப்பார்களே, விக்கியின் தரமும்(?) பாதித்திருக்காதே. பலநூறு கட்டுரைகள் எழுத நினைக்கும் புதிய பயனர்கள், 'நாம் கட்டுரைகள் பல எழுதி பின்னர் விக்கியர்கள் ஒன்றும் சொல்லாமல் ஒருநாள் இதுபோன்று நீக்கிவிடுவார்களோ' என்று தவறான எண்ணம் கொள்ள செய்யுமே. நாம் ஏன் ஆரம்பத்திலே இவற்றை கண்கானிக்கவில்லை, மேம்படுத்தசொல்லி அறிவுறுத்தவில்லை என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். (நான் கூட தூதரகங்களின் பட்டியல் கட்டுரைகள் தமிழாக்கம் செய்து எழுதினேன். 400 கட்டுரைகள் வரை (70-80 சதவீதம்) மென்பொருள் கொண்டு தமிழாக்க முடியும் என்றபோதிலும், தொடரவில்லை. ஆரம்பத்தில் சில பயனர்களின் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர் அதனால் வேலை அதிகமிருக்கும் என்றெண்ணி தொடரவில்லை.) -- மாகிர் 04:07, 27 சனவரி 2012 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia