பண்பாட்டுப் படுகொலைபண்பாட்டுப் படுகொலை அல்லது கலாச்சார சுத்திகரிப்பு (Cultural genocide / cultural cleansing) எனும் கருத்தியல் 1944 ஆம் ஆண்டில் ரபேல் லெம்கின் எனும் வழக்கறிஞரால் இனப்படுகொலையிலிருந்து வேறுபடுத்தி காட்டப்பட்டது.[1]கலாச்சார இனப்படுகொலையை துல்லியமான வரையறை செய்யப்படாவிட்டாலும், ஆர்மீனிய இனப்படுகொலை அருங்காட்சியகம் இதை "ஆன்மீக, தேசிய மற்றும் கலாச்சார அழிவின் மூலம் நாடுகளின் அல்லது இனக்குழுக்களின் கலாச்சாரத்தை அழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்" என்று வரையறுக்கிறது.[2] இராபர்ட் ஜௌலியன் போன்ற இன ஒப்பாய்வியல் அறிஞர்கள், பண்பாட்டுப் படுகொலை எனும் சொல்லிற்கு இணையாக இனப்படுகொலை எனும் சொல்லாடலை பயன்படுத்தினர்.[3] இந்த பயன்பாடு இனக் குழு மற்றும் பண்பாடு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.[4] 2007-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட பூர்வ குடிகளின் உரிமைகள தொடர்பான பிரகடனத்தில்[5] இனப்படுகொலை, பண்பாட்டுப் படுகொலை எனும் சொற்கள் நீக்கப்பட்டு சுருக்கமாக இனப்படுகொலை என மாற்றப்பட்டது. விளக்கம்இனப்படுகொலை தொடர்பான சரியான சட்ட வரையறை மற்றும் சரியான வழி வகைகள் குறிப்பிடப்படவில்லை. பண்பாட்டுப் படுகொலை என்பது இனம், மதம், மொழி அல்லது அல்லது தேசிய இனைக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகும். எனவே கலாச்சாரப் படுகொலை அல்லது பண்பாட்டுப் படுகொலையில் மொழி, வழிபாட்டு முறைகள், தொன்மையான நூல்கள், கலைப்படைப்புகள் மற்றும் கட்டமைப்புகள் போன்ற கலாச்சார கலைப்பொருட்களை அழிக்கப்படுவதும் அழிப்பதும் அடங்கும், அத்துடன் பொருத்தமானவற்றை அழிப்பவரின் கருத்துக்கு இணங்காத கலாச்சார நடவடிக்கைகளை அடக்குவதும் அடங்கும்.[6] சாத்தியமான பல காரணங்களுக்கிடையில், பண்பாட்டு இனப்படுகொலை மத நோக்கங்களுக்காக செய்யப்படலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்தோ அல்லது வரலாற்றிலிருந்தோ மக்களின் ஆதாரங்களை அகற்றுவதற்காக இன அழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். பூர்வ குடிகளின் பண்பாட்டு உரிமைகள் குறித்தான ஐக்கிய நாடுகள் அவையின் பிரகடனம்மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் 27 மார்ச் 2008 அன்று பூர்வ குடிமக்களின் பண்பாட்டை காத்திடவும், இனப்படுகொலைகளை தடுத்திடவும் சில விதிகளை வகுத்தது.[7] 1994-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பிரகடனத்தின் பிரிவு 7-இன் படி பண்பாட்டுப் படுகொலை குறித்தான் விளக்கம் தரவில்லை. பிரகடனத்தின் சில விதிகள்:
பண்பாட்டுப் படுகொலைகளின் பட்டியல்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia