பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல்

தொகுப்பு

தொகுப்புகள்


1 2

தென்காசி சுப்பிரமணியன்

நீங்கள் குமரிக்கண்டம், தென்காசி பாண்டியர் பக்கத்தையும் உரையாடல்களையும் பார்க்க வேண்டுகிறேன். உங்களுக்கு பாண்டியர் குமரிக்கண்டக்குறிப்புகள் கிடைக்கலாம்.உங்கள் கருத்துக்களை எழுதவும். தென்காசி சுப்பிரமணியன்

பாராட்டுகள்

நிரோ, நீங்கள் பாண்டியர் வரலாறுகளை அழகாகத் தொகுத்து வருவது கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். என் பாராட்டுகள்! தொடர்ந்து பணியாற்றுங்கள்!--செல்வா 22:28, 13 பெப்ரவரி 2007 (UTC)Reply

மிகவும் நன்றி திரு செல்வா அவர்களே!--நிரோஜன் சக்திவேல் 22:43, 13 பெப்ரவரி 2007 (UTC)Reply

நிரோ, பாண்டியர் வார்ப்புருவில், ஒரே கால இடைவெளியில் பல பாண்டியர்கள் ஆண்டிருப்பது் குறிப்புகள் உள்ளன. இதனை சரி பார்க்கவும். வெவ்வேறு பகுதிகளை ஆண்டார்களா? செல்வா 02:08, 14 பெப்ரவரி 2007 (UTC)Reply

அப்படித்தான் நினைக்கின்றேன்.அவர்கள் வரலாறுகளைப் பார்க்கும் சமயம் விளங்கும்.--நிரோஜன் சக்திவேல் 02:33, 14 பெப்ரவரி 2007 (UTC)Reply

பயன்படாப் படிமங்கள்

நிரோ, பல பயனர்களாற் பதிவேற்றப்பட்டுப் பயன்படாதுள்ள படிமங்களை நீக்கப்பட்டு வருகின்றன. [1] பார்க்க. அங்கு நீங்கள் பதிவேற்றிய படிமங்கள் சிலவும் உள்ளன. அவற்றில் தமிழ்விக்கிக்கெனவே நீங்கள் எடுத்த அல்லது உங்களிடம் பிர்திகள் இல்லாத ஆனால் முக்கியமான படிமங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதை பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு எவையும் இல்லையென்பதை உறுதிப்படுத்தினால் அல்லது அவ்வாறு இருப்பின் அவற்றின் பேஎச்சுப் பக்கங்களில் குறிப்பிட்டால் ஏனையவற்றை இலகுவாக்க நீக்கித் துப்பரவுப் பணியில் ஈடுபடக் கூடியதாக இருக்கும். நன்றி. --கோபி 17:56, 16 பெப்ரவரி 2007 (UTC)Reply

மிக்க நன்றி நிரோ. --கோபி 18:07, 16 பெப்ரவரி 2007 (UTC)Reply

ஆதாரங்கள்

உங்களுடைய கட்டுரைகளில் ஆதாரங்களையும் மேற்கோள்களையும் சேர்த்தால் வேண்டும். நன்றி. --Natkeeran 22:41, 17 பெப்ரவரி 2007 (UTC)Reply

நிரோ, நீங்கள் பாண்டியர்களின் கட்டுரையில், "பாண்டியர்களின் தோற்றத்திற்குச் சான்றாக கி.மு 7000 ஆண்டளவில் உருப்பெற்ற தொல்காப்பியத்தில் கூறியபடி.." என்று எழுதியிருக்கிறீர்கள். திரு சின்ன்சாமி அவர்கள் எழுதிய புத்தகத்தில் அப்படி இருந்தால் அதனைக் குறிப்பிட்டு, என்ன என்ன காரணங்களினால் ஆசிரியர் சின்னசாமி அப்படிக் கூறுகிறார் என்று கூறி, மற்றபடி இக்கருத்து பற்றி நிலவும் மாற்றுக் கருத்துக்களையும் கூறவேண்டியது கலைக் களஞ்சியக் கட்டுரையின் கடமை. கி.மு 7000 என்பது நம்புவதற்கு கடினமான தொல் பழங்காலம்! சிந்து வெளி நாகரீகம் சுமார் கி.மு 2500-3500 ஆகிய காலப்பகுதியைச் சார்ந்தது. அதற்கு முன் நிலவிய நாகரீகங்கள் கி.மு 4000-4500 வரையிலும் கூட செல்லக்கூடும். தொல் எகிப்தியர்கள், சுமேரியர்களின் காலம் கி.மு 3000-4000 வரையிலும் செல்லும். இவை அனைத்திற்கும் ஏராளமான தொல்பொருள் உறுதிகோள்கள் உள்ளன. தமிழர்களுக்கு கி.மு 300க்கும் முன் செல்லக்கூடிய தொல்பொருள் உறுதிகோள்கள் மிகவும் அருகியதே (இன்னும் கண்டுபிடிக்கப் படாமல் இருக்கலாம், ஆனால் உள்ளதை வைத்துத்தான் வரலாறு எழுதவேண்டும் அல்லவா?). எனவே ஒரு புத்தகத்தில் இருப்பதால் அது உண்மையாகாது. அப் புத்தகத்தில் அதில் கூறியுள்ளவற்றுக்கு உறுதுணையாக என்ன என்ன காட்டப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தி எழுதுதல் வேண்டும். பொதுவாக தமிழர்களிடையே தொல்கதைகள் மிகக் குறைவு. தங்கள் தோற்றம் பற்றி இயற்கைக்கு மாறாக அவ்வளவாக ஏதும் இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் முச் சங்கம் பற்றி கூறப்பட்டுள்ளது ஒரு வியப்பான விதி விலக்கு. சிலப்பதிகாரம் மற்றும் சில சங்க இலக்கியங்களும் கடல் கோள் போன்றவை நடந்ததற்கான குறிப்புகள் தருவது உணமை. ஆனால் வலுவான பிற சான்றுகள் கிடையாது. தமிழர் வரலாறு பழமையானது (கி.மு 1000 க்கும் முன் செல்லக் கூடும்) என்பது ஒருவாறு நம்மால் உணரப்படினும், தக்க அறிவியல் சான்றுகள் இல்லாமல் கூற்றுக்களை முன்வைப்பது நல்லதல்ல. வேளான்மை என்பது உலகில் தோன்றியதே சுமார் கி.மு 5000-6000 ஆண்டுகள் என அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள், எனவே கி.மு 7000ல் தொல்காப்பியம் எழுதப்பட்டது என்பது நம்ப முடியாமல் இருக்கின்றது. உறுதி பயக்கும் சான்றுகளை முன் வைத்து எழுதுதல் நலம்.--செல்வா 00:30, 18 பெப்ரவரி 2007 (UTC)Reply

கட்டுரைகள் எழுதும்போது கவனிக்க வேண்டியவை

  • ஒவ்வொரு வசனங்களின் இடையேயும் ஒரு இடைவெளி (space) வரவேண்டும்.
  • அது போலவே, ஒவ்வொரு இரண்டு சொற்கள் "," வினால் பிரிக்கப்படும்போது இடைவெளி வேண்டும்.

உ+ம்: எட்டிச்சாத்தன் கட்டுரையில் "இவன் பல தொண்டுகள் செய்ததால் புகழ்பெற்றிருந்தான்.முதலூர்,தென்வெளியங்குடி ஆகிய இரு ஊர்களிலும் உள்ள சிவன் கோயிலினைக் கட்டியவன்."

இவ்வரிகள் இப்படி எழுதப்படவேண்டும்: இவன் பல தொண்டுகள் செய்ததால் புகழ்பெற்றிருந்தான். முதலூர், தென்வெளியங்குடி ஆகிய இரு ஊர்களிலும் உள்ள சிவன் கோயிலினைக் கட்டியவன் இவனே. நன்றி.--Kanags 23:53, 17 பெப்ரவரி 2007 (UTC)Reply

அனைவரது கருத்துக்களையும் ஏற்கின்றேன் ஆனாலும் நான் டிஸ்கவரி சானலில் பார்த்த ஒரு விபரணப்படத்தில் மனிதர்கள் 30,000 வருடங்களிற்கு முன்னர் தோற்றம் பெற்றதாகப் பார்த்தேன் அதே வேளை அவர்களே அன்றைய கால கட்டத்தில் குரங்கிலிருந்து மெதுவாகப் பிரியும் சமயம் அதாவது evoultion மேலும் அவர்கள் ஏன 7000 ஆண்டுகளிற்கு முன்னர் இவ்வாறான காப்பியங்களைப் படைக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கக் கூடாது இது எனது தனிப்பட்ட கருத்துத்தான்.ஒரு கேள்வியும் கூட.மேலும் இன்னுமொரு விபரணப்படத்தில் வேற்றுக்கிரக வாசிகள் பண்டைய கற்கால மனிதர்களுக்குப் பாடம் புகற்றி அவர்களே எகிப்திய மற்றும் பல நாகரீகங்கள் வளர்வதற்குக் காரணம் என்ற விபரணப்படம் மிகவும் அருமையானவை.சிந்திக்கக்கூடியவை.இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது நாம் பேசும் அனைத்து மொழி நாம் வணங்கும் கடவுள்கள் அனைவரும் வேற்றுக்கிரக வாசிகளாக இருந்திருக்கலாம்.இதையும் கூறினார்கள் இது அறிவியல் பூர்வமான தகவல்களைத் தரும் தொலைக்காட்சியான நேஷனல் ஜியோகிராபிக்கில் பார்த்தேன்.ஏன் கூறுகின்றேன் என்றால் மனிதன் எவ்வாறு காட்டு வாசியாக இருந்து பின் மகாபாரதக் காலத்தில் வசித்தன் என்பது எனக்கு என் மண்டையைக் குளப்புகின்ற சேதிகள்.

மேலும் கனக்ஸ் எனது தவறுகளைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி நான் ஏன் அவ்வரியை அவ்வாறு எழுதினேன் என்றால் அது நான் கூறுவது போன்று அல்ல அவ்வரியினை வேறொருவர் கூறியிருந்தார் புலவர் ஒருவர் அதனாலேயே அப்பாடலை மாற்றாது எழுதினேன்.--நிரோஜன் சக்திவேல் 00:49, 18 பெப்ரவரி 2007 (UTC)Reply

நிரோ, நான் எழுதியதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லைப் போலத் தெரிகிறது. பாடல் அப்படி எழுதப்பட்டிருந்தால் அப்பாடலை இயற்றியவரில் பிழையில்லை. அப்பாடலைப் பதிப்பித்தவரின் பிழையாகும். ஆனால் நான் குறிப்பிட்டது பாடலல்ல. நீங்கள் பொதுவாக எழுதும் வசனங்களையே. உங்கள் கட்டுரைகள் அனைத்திலுமே இப்படியான தவறுகள் உள்ளன. ஏன், தங்களின் இப்பதிலிலும் பல இடங்களில் அந்தத் தவறைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் வேண்டுமென்றே அப்படிச் செய்யவில்லை. அப்படி எழுதப் பழக்கப்பட்டுவிட்டீர்கள் போற் தெரிகிறது. தவறாக நினைக்க வேண்டாம். விக்கிபீடியாவில் மட்டுமல்ல பொதுவாக எங்குமே இக்கொள்கை (அ-து, இரு வசனங்களுக்கிடையே ஒரு இடைவெளி விடுவது) ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. நன்றி. --Kanags 02:34, 18 பெப்ரவரி 2007 (UTC)Reply

மன்னிக்கவும் இப்பொழுது புரிந்துள்ளேன்.--நிரோஜன் சக்திவேல் 14:35, 18 பெப்ரவரி 2007 (UTC)Reply


மேற்கோள்கள்

மேற்கோள்கள் ஒரு கட்டுரைக்கு எந்த வகியில் அவசியமாகின்றது காரணம் பாண்டியர் கட்டுரையில் 300 பக்க புத்தகத்தகவலினையும் தேடிச்சுருக்கி எழுதப்பட்டுள்ளது.இவ்வனைத்துப் பக்கங்களினையும் குறித்து மேற்கோள்கள் வழங்குவது மிகவும் கஷ்டமானது.மேலும் உசாத்துணையாக வழங்கப்பட்டவை போதாதா.விக்கிபீடியாவில் மேற்கோள்களிற்கு எந்த அளவிற்கு முக்கியம் அளிக்கப்படவேண்டும்.--நிரோஜன் சக்திவேல் 19:21, 18 பெப்ரவரி 2007 (UTC)Reply

புதுசு கண்ணா புதுசு

நிரோ, புதுசு போன்ற பேச்சு வழக்கு சொற்களை தவிர்க்கலாமே :) புதிது, தொடக்கம், உருவாக்கம் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன்--Ravidreams 19:51, 23 பெப்ரவரி 2007 (UTC)Reply

இவற்றுள்ளும் தூய தமிழா ?! பிரியா எழுத விட மாட்டீங்களே?--நிரோஜன் சக்திவேல் 19:52, 23 பெப்ரவரி 2007 (UTC)Reply

ஹி..ஹி..பிரியா, ராதிகா எல்லாரும் எழுதலாம் :) பயனர் பேச்சுப் பக்கங்களில் எப்படி வேண்டுமானால் இருக்கலாம். உரையாடல் பக்கங்கள் கொஞ்சம் relaxation. ஆனால், கட்டுரைப் பக்கங்களில் கவனம் செலுத்தலாம் தானே? சென்னைப் பயனர்கள் புச்சு என்று எழுதினால் நமக்குப் புரியுமா? :)--Ravidreams 19:55, 23 பெப்ரவரி 2007 (UTC)Reply


நிர்வாகிகள் மற்றும் பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது.

தமிழர்கள் விக்கிபீடியாவிற்கு வந்து தமிழ் கற்க எழுதக் கற்க உதவும் நம் தமிழ் விக்கிபீடியா பிற மொழியினர் தமிழைக் கற்றுக் கொள்ள உதவியாக அவர்கள் மொழியிலிருந்து தமிழ் மொழி அட்டவணை அல்லது அதற்கென ஒரு மிகப்பெரிய பகுப்பினை உருவாக்கி பிற மொழிப் பயனர்கள் இலகுவில் தமிழினைக் கற்றுக் கொள்ள உதவ நாம் கட்டுரைகள் உலக மொழிகள் பலவற்றிலும் உருவாக்க வேண்டும் நான் கூறவருவது என்னவெனின் தமிழ் விக்சனரியில் உள்ள ஆங்கில பிற மொழிகள் பொருள் மாதிரி அன்றி பல விரிவாக கட்டுரைகளை உண்டாக்கி முதற்பக்கத்தில் Learn Tamil எனவோ வேறு வார்த்தைகளினைப் பயன்படுத்தியோ உருவாக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்.இது எனது தனிப்பட்ட கருத்தே.ஏற்கனவே தமிழைக் கற்றுக் கொடுக்க பல தளங்கள் இருப்பதும் தெரியுன் ஆனாலும் அவை மிகவும் விரிவான முறையில் அல்ல அதனால் பிற மொழியினர் பலர் தமிழினை இலகுவாகக் கற்றுக் கொள்ள உதவியாக இருக்கும்.ஏனெனில் தமிழ் அன்பர்களை விட பிற மொழியினரே தமிழை வளர்த்த பெருமைகள் பலவற்றினை உட்டையவர்கள் ஆகையால் உலகின் தொண்மையான மொழி என்ற காரணத்தினாலும்.ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த உதவும் விதமாகவும் நம்மால் இயன்றளவு பக்கங்களினை அமைத்தால் நன்றாவிருக்கும் என நம்புகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 17:39, 26 பெப்ரவரி 2007 (UTC)Reply

நிரோ, உங்கள் ஆலோசனை மிகவும் தேவையான ஒன்று. கலைக்களஞ்சியம் என்ற வரையறைக்குட்பட்டு இதை செய்வது குறித்து தெளிவில்லை. ஆனால், இதை ஒரு நூலாக தமிழ் விக்கி நூல்களில் நாம் அனைவரும் கூட்டாக எழுத இயலும். --Ravidreams 18:15, 26 பெப்ரவரி 2007 (UTC)Reply
நானும் இரவியின் கருத்துடன் உடன்படுகிறேன். விக்கிநூல்களில் எழுதி அதற்கு விக்கிபீடியாவின் முதற்பக்கத்தில் இணைப்புக் கொடுக்கலாம். --Sivakumar \பேச்சு 18:20, 26 பெப்ரவரி 2007 (UTC)Reply

நிரோ ஓர் அவசியமான விடயத்தைச் சுட்டிக் காட்டியிருக்கின்றீர்கள். இத்தகைய பாடநூல்களை உருவாக்குவதற்கு மிகப் பொருத்தமான இடம் விக்கிநூல்கள் தான். நாம்தான் விக்கிமூலத்து உள்ளடக்கங்களை விக்கிநூல்களில் இட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பங்களிப்போர் தொகை மிகக் குறைவு என்பதும் முக்கிய காரணம். கோபி 18:37, 26 பெப்ரவரி 2007 (UTC)Reply


அவசர சிகிச்சை தேவை

எனது browser இல் ஏதோ கோளாறு பக்கங்களினை தொகுக்க முடியவில்லை தொகுக்க அழுத்தும் போது WARNING: Your browser is not unicode compliant, please change it before editing an article. இவ்வாறு வருகின்றது தெரிந்தவர்கள் உதவவும்.எந்த setting மிகச் சரியானது.அதாவது பலதரப்பட்டவை என்ற பகுதியில் எதனை சரி செய்வது.--நிரோஜன் சக்திவேல் 02:18, 28 பெப்ரவரி 2007 (UTC)Reply

what is ur browser name, version, operating system? try to install firefox 2. it should work ok. else reinstall IE.--Ravidreams 09:30, 28 பெப்ரவரி 2007 (UTC)Reply

இப்பொழுது வேலை செய்கின்றது.--நிரோஜன் சக்திவேல் 12:24, 2 மார்ச் 2007 (UTC)Reply

பாண்டியர்

பாண்டியர் கட்டுரைகளில் நீங்கள் சேர்த்துவரும் தகவல்கள் அருமை. இது உங்களின் செந்த ஆக்கமாகவே கருதுகின்றேன். அதாவது பல துணைநூலகளின் உதவியுடன் ஆக்கப்படும் ஆக்கம். எப்படி இந்த தகவல்களை கண்டுபிடித்து சேர்க்க முடிகின்றது?--Natkeeran 17:46, 1 மார்ச் 2007 (UTC)Reply

பாண்டிய மன்னர்களின் பட்டியல்கள் பல நீளம் இப்பொழுது உள்ளது குறைவே இப்புத்தகத்தில் துருவிப் பார்த்தால் பல பாண்டிய மன்னர்களினைப் பற்றிய தகவல்கள் உண்டு.விரைவில் அனைத்தும் சேர்க்கப்படும்.மேலும் தகவல்கள் மாத்திரமே எடுக்கின்றேன் அப்படியே புத்தகத்தினைப் போன்று எழுதவில்லை.பல மாறுதல்கள் செய்து எழுதுகின்றேன்.இதற்கு மேற்கோள் தேவையில்லை என நினைக்கின்றேன் காரணம் அவ்வாறு செய்ய வேண்டுமென்றால் பக்கம் மிகவும் நீளமாகிவிடும்.உசாத்துணை மட்டும் இருந்தால் போதுமென நினைக்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 18:05, 1 மார்ச் 2007 (UTC)Reply


கி.பி./ கி.மு

தமிழில் bce / ce இவற்றை எவ்வாறு அழைப்பது.--நிரோஜன் சக்திவேல் 04:16, 3 மார்ச் 2007 (UTC)Reply

இது தமிழில் சரியாக முறை செய்யப்படவில்லை. மேலும் bce/ce என்று எழுத்வதால் ஏதோ கிறிஸ்தவ சார்பு இல்லாததுபோல் தென்பட்டாலும், உண்மை அப்படி இல்லை. பெயர்தான் வேறுபாடு. BC/AD என்பதே BCE/CE எனப்படுகின்றது. தமிழில் இதனை தற்கால ஆண்டு வரிசை (த.ஆ) தற்காலத்திற்கு முனனைய ஆண்டு வரிசை (த.மு.ஆ) எனலாம். --செல்வா 02:57, 13 மார்ச் 2007 (UTC)Reply

சற்றுக் கூடிய அவதானம் தேவை...

நான் இங்கே சுட்டுபவற்றை நீங்கள் தயந்து ஆராக்கியமான விமர்சனமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

  • "கிரேக்க நாட்டில் நாடகம் தோன்றியதற்கான உறுதியான முதற் சான்று கி.பி 534 ஆம் ஆண்டளவில் என்பதும் குறிப்பிடத்தக்கது." (??)
  • கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டில் 'டயோனிசஸ்' என அழைக்கப்பட்ட வசந்தம் மற்றும் வளம் போன்றவற்றிற்குரிய கிரேக்க தெய்வத்தின் வழிபாடு நடைபெற்றது. கி.மு. ஏழாம் - எட்டாம் நூற்றாண்டு காலகட்டங்களில் அத்தெய்வத்திற்குத் திருவிழா கொண்டாடப்படும் வேளை அத்தெய்வத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக குழு நடனங்களின் போட்டி நடைபெறும் சமயம் தமிழ் நாட்டில் நடைபெறும் வெறியாட்டுப் பாட்டு போன்று, பக்திப் பரவசத்தினால் பக்திப் பாடல்கள் பாடப்படும். இவ்வாடல்-பாடல்களிலிருந்தே நாடகம் பிறந்தது என கிரேக்க மேதையான அரிஸ்டாட்டில் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

(வசனம் நீண்டு விட்டது, பொருள் தெளிவில்லை.)

  • இப்படி பல தவறுகள் அந்தக் கட்டுரையில் இருக்கின்றது.

மேம்படுத்தினால் நன்று. நன்றி. --Natkeeran 03:00, 4 மார்ச் 2007 (UTC)Reply

பாராட்டு

தமிழ்த் திரைப்படங்களை குறித்து நீங்கள் தகவல் சேர்க்கும் வேகம் மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள்--Ravidreams 08:58, 16 மார்ச் 2007 (UTC)Reply

நிரோ ஒரே நாளில் ஏறத்தாழ 100 கட்டுரைகள் எழுதியுள்ளீர்கள்!! இது யாரும் செய்யாத புத்தரிய (புதிய அரிய) செயல். எத்தனை பாராட்டினாலும் தகும், எனினும், அருள்கூர்ந்து தாங்கள் மற்ற கடமைகளில் ஏதும் குறைவு வாராமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன். சுமார் 6-7 மணிநேரம் இடைவிடாது உழைத்திருக்கிறீர்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுதலாம். நீங்கள் இத்தனை இளையவராய் இருந்து இத்தனை அரும் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி தந்தாலும் தாங்கள் ஒருபோதும் தங்கள் முதற்கடமைகளில் இருந்து ஒரு சிறிதும் வழுவாது இருக்க வேண்டும் என அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா 13:53, 16 மார்ச் 2007 (UTC)Reply
உங்கள் வியப்பூட்டும் ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும், நீங்கள் பாண்டியர் பற்றி விரிவாக எழுதியதற்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் என் பாராட்டைத் தெரிவிக்க இதனை அன்புடன் அளிக்கின்றேன் ---செல்வா 14:47, 16 மார்ச் 2007 (UTC) செல்வாReply

--செல்வா 13:52, 16 மார்ச் 2007 (UTC)Reply


செல்வா மற்றும் ரவிக்கு மனமார்ந்த நன்றிகள். அதே சமயம் எனது முதற்கடமைகளிற்கு ஏதும் தவறுகள் இழைக்கவுமில்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன். --நிரோஜன் சக்திவேல் 14:12, 16 மார்ச் 2007 (UTC)Reply

மேலும் தொகுக்கும் பொழுது ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது செல்வா கவனியுங்கள் நீங்கள் கொடுத்த பட்டத்தினை அவதானிக்க இயலவில்ல.--நிரோஜன் சக்திவேல் 14:18, 16 மார்ச் 2007 (UTC)Reply

நிரோ, என் கை ஒப்பத்தை பதக்கச் சட்டத்துளேயே இட்டிருந்தேன். நான் முன்தோற்றம் சரிபார்த்தபொழுது சரியாக இருந்தது. சிவகுமார் சரி செய்துள்ளார். சிவகுமாருக்கு நன்றி. நீங்கள் உங்கள் முதற்கடமைகளைச் செவ்வனே செய்கிறீர்கள் என அறிந்து மிகவும் மகிழ்கின்றேன். மீண்டும் என் நல்வாழ்த்துகள்!--செல்வா 14:36, 16 மார்ச் 2007 (UTC)Reply

பெருமளவு புதிய பக்கங்களை உருவாக்கிப் பங்களித்துள்ளமைக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள். கோபி 15:48, 16 மார்ச் 2007 (UTC)Reply

பரிந்துரை

நீங்கள் தொடங்கும் புதிய கட்டுரைகளுக்கு ஆரம்பம் என்று எழுதுகிறீர்கள். தொடக்கம், துவக்கம், உருவாக்கம், புதியது என்று ஏதேனும் நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தலாமே. --செல்வா 02:25, 19 மார்ச் 2007 (UTC)Reply

ஆரம்பம் தூய தமிழ்ச் சொல்லில்லையா? --நிரோஜன் சக்திவேல் 02:28, 19 மார்ச் 2007 (UTC)Reply

இல்லை. அதனால் அதனை ஆளவேண்டாம் எனச் சொல்லவில்லை. எல்லா இடத்திலும் ஆள்வதைத் தவிர்க்கலாம் என்பதே என் பரிந்துரை. தமிழ்ச்சொற்களுக்கும் இடம் தரலாமே! நாமே நம் தமிழ்ச் சொற்களை எடுத்தாளவில்லை என்றால் யார் ஐயா நம் சொற்களை எடுத்தாள்வார்கள். நானும் ஆரம்பம் என்னும் சொல்லை ஆள்வேன், ஆனால் எல்லாவிடத்தும் இல்லை. உங்கள் புதிய கட்டுரை என்னும் குறிப்பு மிக நன்றாக உள்ளது.--செல்வா 02:42, 19 மார்ச் 2007 (UTC)Reply


பாரிய படையெடுப்பு

பாரிய படை நகர்வொன்றினால் நமக்கு முன்னிருந்த இரு மொழியினர் துவம்சம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 215 காலாட்படையினருடன் (குறுங்கட்டுரைகள்) படையெடுத்து சென்ற மாமன்னன் நிரோஜன் சக்திவேலால் இப்படையெடுப்பு நடாத்தப்பட்டுள்ளது என்பது தமிழ் விக்கிபீடியா மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.--நிரோஜன் சக்திவேல் 04:16, 19 மார்ச் 2007 (UTC)Reply

துரித கதியில் பல கட்டுரைகளை ஆக்குவதற்கு உங்களைப் போன்றவர் வேறு யாரும் கிடையாது. இந்த வேகத்தில் போனால் இம்மாத இன்னும் சில வாரங்களில் 10,000 கட்டுரை இலக்கை அடையளாம். நானும் புதிய கட்டுரைகளை ஆக்க முயற்சிக்கிறேன். நற்பணி தொடர வாழ்த்துக்கள்.--டெரன்ஸ் \பேச்சு 04:22, 19 மார்ச் 2007 (UTC)Reply
வாழ்த்துக்கள்! பன்மொழி பட்டியலில் 70-71 ஆம் இடத்திலேயே ஓராண்டுக்கும் மேலாக முடங்கிக்கிடந்த த-வியை விரைந்து முன் ஓச்சிய பெரு வீரர் நீங்கள்தான். மீண்டும் வாழ்த்துக்கள்! மேலும் பல பயனர்கள் முன்வந்து பயன் பெருக்குவார்கள் என நம்புகிறேன்.--செல்வா 04:49, 19 மார்ச் 2007 (UTC)Reply

மாமன்னா, வாழ்த்துக்கள் :)--ரவி 07:02, 19 மார்ச் 2007 (UTC)Reply

மாமன்னா வென்றுவாருங்கள். நானும் என்பங்கிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பக்கபலமாகக் கட்டுரைகளை ஆக்குகின்றேன். --Umapathy 08:55, 19 மார்ச் 2007 (UTC)Reply

நிரோ, நாம் பன்மொழி விக்கியில் 2-3 இடங்கள் முந்தி வந்துள்ளது 100,00 பேர் மட்டுமே பேசும் அஸ்தூரியன் மொழியும், 700,000 பேர் மட்டுமே பேசும் வெல்ஷ் மொழியும் ஆகும். 70 மில்லியன் மக்களுடன், நூற்றுக்கணக்கான கிழமை இதழ்களும் மாதிகைகளும் , நாளிதழ்களும் கொண்டு பல்லாயிரக்கணக்கான நூல்கள் கொண்ட தமிழ் மொழியினர் இந்நிலையில் (பின்தங்கி) இருப்பது எண்ணிப்பார்க்கத்தக்கது. எத்தனை துறைகளில் நாம் எழுத்லாம்! அடிப்படையான செய்திகளே நம் விக்கியில் இல்லை. உங்களைப் போல நாளொன்றுக்கு 50-100 என்று கட்டுரைகள் எழுதாவிடிலும், நாளொன்றுக்கு ஓரிரண்டு கட்டுரைகளாவது எழுதுவோர் இன்னும் நிறைய வரவேண்டும். அதிலும், சற்று பொது நோக்கில், எளிய நடையில் கலை.கழ. நோக்கில் எழுத வரவேண்டும்.--செல்வா 12:55, 19 மார்ச் 2007 (UTC)Reply


மன்னவா, நீங்கள் கைப்பற்றிய நிலப்பரப்பின் அளவு பாரியதே. பாராட்டுக்கள். அதேவேளை த.வி லும் சினிமாதானா என தமிழ் மக்கள் அலுத்துவிடக் கூடாது. எனவே, உயிரினங்கள், நோய்கள், மொழிகள், நகரங்கள் போன்ற பிற வளமான நிலப்பரப்புக்கள் மீதும் உங்கள் ஆக்கிரமிப்பு நிகழட்டும். நன்றி. --Natkeeran 15:54, 19 மார்ச் 2007 (UTC)Reply

நான் திரைப்படங்களிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏனெனில் தமிழர்களை விக்கிபீடியாவிற்குள் அழைத்துவர திரைப்படங்களே மிக மிக அவசியம் முள்ளை முள்ளா எடுப்பது போல திரைப்படங்கள் மூலமே அவர்களி உள்ளே அழைத்து வந்து பின்னர் அவகளை பிற தகவல்கள் உள்லே அழைத்துச்செல்ல முடியுமென நான் பெருவாரியாக நம்புகின்றேன். இன்று இணையம் உபயோகிக்கும் தமிழர்களின் தொகை ஒரு 1 மில்லியனைத் தாண்டாது.அதிலும் 500,000 பெயர்கள் தமிழை அறிந்திருக்க முடியாத தமிழர்கள் என வைத்துப் பார்த்தால் மீதமுள்ள 500,000 ஆயிரம் மக்களை இங்கு இணைக்க முடியும். அவர்களில் ஏராளமானோர் திரைப்படத்தகவல்களிற்காகவே இணையத்தினை நாடுகின்றவர்கள் இவை எனது கணிப்பே உறிதியாகச் சொல்ல இயலாது.--நிரோஜன் சக்திவேல் 18:11, 19 மார்ச் 2007 (UTC)Reply

ம்ம் நிரோஜன் வன்னியில் இருக்கின்ற நினைப்போ?ம்ம் தொடர்ந்து நடந்துங்கள் உங்கள் ஓயாத அலையை--கலாநிதி 16:54, 19 மார்ச் 2007 (UTC)

நிரோ, அவரவர் ஆர்வத்துக்கு ஏற்ப எத்துறைக் கட்டுரைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம். தமிழ்த் திரைப்படங்கள் மூலம் புதுப் பயனர்கள் விக்கியை வந்தடைய இருக்கும் வாய்ப்பு குறித்து உங்கள் கருத்தும் சரியே. இடையிடையே, பாண்டியர்கள் குறித்து நீங்கள் எழுதியது போல் பிற தலைப்புகளிலும் எழுதுங்கள். தற்போது நீங்கள் விக்கியின் மூத்த பயனராகி வருவதால் :) தனிக்கட்டுரை ஆக்கம் தவிர, தமிழ் விக்கியின் ஒட்டு மொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதைச் செய்யலாம். வாழ்த்துக்கள்--ரவி 20:35, 19 மார்ச் 2007 (UTC)Reply


வெளியிணைப்புகளும் படிமங்களும்

திரைப்பட உறைகளில் வேறு இணாஇயத்திலிருக்கும் அடையாளம் இருப்பது அவ்வளவு சரியாக எனக்குப் படவில்லை. மேலும் வேறு இணையத்திலிருந்து பெறும் படுமங்கள் வேண்டாமெனத் தோன்றுகின்றது காரணம் தமிழ் விக்கிபீடியாவின் தரத்தினை அது பாதிக்கலாம் விக்கிபீடியா வேறு இணையத்திலிருந்துதான் இயங்குகின்றது என வருவோர் எண்ணலாம். மேலும், வெளியிணைப்புகள் திரைப்பட விமர்சனக்களையும் அளவே நம்பிக்கையீட்டக்கூடிய வெளியிணைப்பாக இருப்பதும் நல்லது. ஒருவர் தனது வலைபதிவில் எழுதியதை உணமையாகவும் வேறு இணையத்தில் இருப்பதில் அனைத்தினையும் உண்மையாகவும் கருதமுடியாது. இவ்வாறு வெளியிணைப்புகள் அனைத்து விக்கிகளுக்கும் கொடுக்காதிருந்தாலும் நன்றாகவே இருக்கும்.--நிரோஜன் சக்திவேல் 18:31, 24 மார்ச் 2007 (UTC)Reply

நிரோ, படிமங்களில் பிற தளங்களின் பெயர்கள் இருப்பதை தவிர்க்கலாம். படிப்படியாக அப்படிமங்களை நீக்கலாம். இல்லை, அவற்றைத் தொகுத்து படிமப் பெயர் இல்லாமல் தரலாம். நடிகைகள், நடிகர்களின் அதிகாரப்பூர்வத் தளங்களில் இருந்து படிமங்களைப் பயன்படுத்தலாம். படிமங்கள் குறித்து உங்கள் கருத்து சரி.

அதே வேளை வெளியிணைப்புகளைப் பொறுத்த வரை, வலைப்பதிவு இணைப்புகளை முற்றிலும் புறக்கணிக்கமுடியாது. தமிழில் நிறுவனப்படுத்தப்பட்ட உள்ளடக்க முயற்சிகள் குறைவே. பலர் தரமாகவும் நம்பகமாகவும் வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். நிச்சயம் அவற்றைப் பயன்படுத்தலாம். வலைப்பதிவு என்பதற்காகவே புறக்கணிக்கத் தேவை இல்லை.--ரவி 18:55, 24 மார்ச் 2007 (UTC)Reply

மீண்டும் ஒரு படையெடுப்பா?

மராட்டியரை சென்றுவிடலாம் போல தெரிகின்றது! நல்லது!--செல்வா 00:26, 25 மார்ச் 2007 (UTC)Reply


இரண்டாம் படையெடுப்பு

ஜந்து மொழியினருடனான மாமன்னர் நிரோஜன் சக்திவேலின் இரண்டாம் படையெடுப்பு நடத்தப்ப்டுகின்றது.62 ஆம் இடத்தினை அடைய மாமன்னருடன் 500 காலாட்படையினர் போராட்டத்தில் ஈடிபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.--நிரோஜன் சக்திவேல் 00:29, 25 மார்ச் 2007 (UTC)Reply

மாபெரும் வெற்றி பெற என் நல்வாழ்த்துகள்! 500 ஆ?!! உங்களோடு சேர்ந்து இன்னும் சில சிற்றரசர்களாவது "நாடுகள்" கட்டுரை வழிப் படை எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். உங்கள் பெரும் படையெடுப்பின்போதே இதனையும் நிறைவேற்ற வேண்டும்!--செல்வா 00:36, 25 மார்ச் 2007 (UTC)Reply

போர் ஓய்ந்தது இராண்டாம் படையெடுப்பு நிறைவுற்றது. 62 ஆவது இடத்தில் உள்ளோம்.--நிரோஜன் சக்திவேல் 06:32, 25 மார்ச் 2007 (UTC)Reply

தூள்! கட்டுரை எண்ணிக்கையை முதலில் பார்த்த போது ஒரு சிறு அதிர்ச்சி. பின்னர் உடனேயே புரிந்து கொண்டேன், வார இறுதி, படையெடுப்புத்தான் என்று. வாழ்த்துக்கள். --Natkeeran 13:14, 25 மார்ச் 2007 (UTC)Reply

நிரோ, மூணு நாள் அமைதியா இருக்கும்போதே பதுங்கிப் பாயப் போறார்னு நான் நினைச்சது சரியாப் போச்சு :) வரிசையா இப்படி recordகள் செஞ்சா திரும்ப அத நீங்க தான் முறிக்கணும் :) வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றி--ரவி 07:16, 25 மார்ச் 2007 (UTC)Reply

நிரோ, உங்கள் உழைப்பு மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள், நன்றிகள். ஆனால் ஒரு சிறு ஆனால் முக்கிய விடயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முன்னர் கணேசின் தானியங்கியைப் பயன்படுத்துவது தொடர்பில் நான் எதிர்ப்புத் தெரிவித்த அதே அம்சமே அது. அதாவது ஒருகுறிப்பிட்ட விடயப்பரப்பில் அளவுக்கதிகமான கட்டுரைகள் இருப்பது த.வி.யின் சமநிலையைக் குழப்பும். 10000 கட்டுரைகள் இருக்கும்போது 1000 கட்டுரைகள் ஒரே விடயப்பரப்பில் இருப்பதுகூட அளவுக்கதிகமே. உடனடியாக இதனை இன்னும் அதிகரிப்பது நல்லதல்ல. ஒரு 60,000 கட்டுரைகள் இருக்கும்போது 6,000 கட்டுரைகள் இருக்கலாம். இவ்வாறு நான் கூறுவதை உங்கள் உழைப்பைத் தடைபோடுவதாக எடுக்க வேண்டாம். துப்பரவுப் பணிகளுக்காக குறிப்பில்வழிப் பக்கத்தைப் பயன்படுத்துபவன் என்ற அடிப்படையில் இப்பொழுது இந்திய ஊர்கள் பற்றிய கட்டுரைகள் அளவுக்கதிகமாக உள்ளதைக் காண முடிகிறது. இனி தமிழ்த் திரைப்படங்கள் தொடர்பிலும் அந்த நிலையையே எதிர்பார்க்கிறேன். நீங்கள் நீண்டகாலம் தொடர்ந்து பங்களிப்பவர் என்ற அடிப்படையில் நான் சுட்டிக்காட்டுவது உங்களுக்கு ஓரளவு தெரிந்ததே. ஆதலால் ஏனைய விடயப்பரப்புக்களில் உங்கள் சலியாத உழைப்பைச் செலுத்த வேண்டுகிறேன். நன்றி. கோபி 07:23, 25 மார்ச் 2007 (UTC)Reply

கோபி, உங்கள் கருத்து புரிந்து கொள்ளத்தக்கதே. நிரோ, நீண்ட நாள் பயனர், ஒட்டுமொத்தத் தமிழ் விக்கிபீடியா நலனில் அக்கறை கொண்டவர் என்ற முறையில் இதை ஒரு வேண்டுகோளாகத் தான் வைக்க முடியும். எனினும், இதை ஒரு வழிமுறையாகவோ பரிந்துரையாகவோ வைக்க இயலாது. அது ஊக்கத்துடன் செயல்படுபவர்களின் வேகத்தை குறைப்பது போலவே ஆகி விடும். ஒருவருக்கு எத்துறையில் ஆர்வம் உள்ளதோ அதில் தான் பங்களிக்க விருப்பமாய் இருக்கும். நெடுநோக்கில் இது போன்று துறை சார் ஆர்வம் உள்ளோர் இன்னும் பலர் வரக்கூடும். அப்போது அவர்களின் கட்டுரைகளை மட்டுப்படுத்த இயலாது. கூடாது. கணேசின் கட்டுரைகள் தானியக்க உருவாக்கம் என்பதால் அதில் system biasஐத் தவிர்க்க கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பது சரி. மனித உருவாக்கக் கட்டுரைகளை அப்படி கருத இயலாது. தமிழ் விக்கி தொடங்கிய காலத்தில் மயூரனாதன் எழுதிய கட்டடக்கலை குறித்த கட்டுரைகளே அதிகம் இருந்தது ஒப்பு நோக்கத்தக்கது. நிரோ, அவ்வப்போது பாண்டியர் போன்ற பிற தலைப்புகளிலும் பங்களித்தே வருகிறார். இனியும் செய்வார். அதைத் தாண்டி அவரது தனி ஈடுபாட்டுத் துறையான திரைப்படங்கள் குறித்து அவர் எந்த கட்டுக்களும் இன்றி எழுத வேண்டும் என்பதே என் நிலை--ரவி 08:42, 25 மார்ச் 2007 (UTC)Reply

நிரோ, நீங்கள் அருஞ்செயலரே!! உங்களை நெஞ்சார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்! தனி ஒருவராய் புது முடுக்கூட்டியுள்ளீர்கள்! நீங்கள் தொடர்ந்து த.வி-யுக்கு எல்லாத்துறைகளிலும் மிகச் சிறந்த வழிகளிலே பணியாற்றுவீர்கள் என நான் நம்புகின்றேன். உங்களுடைய கணினி நிகழ்பட விளையாட்டு வரிசையில் தொடங்கி, திரைப்படம், பாண்டியர், கிரேக்க நாடகம், தனிமனிதர்கள் வரலாறு என்று ஏராளமான கட்டுரைகள் எழுதி அருஞ்செயலராய் கொடி நாட்டி உள்ளீர்கள்! --செல்வா 12:52, 25 மார்ச் 2007 (UTC)Reply
இங்கே கோபிக்கும், கோபியைப் போல நினைக்ககூடிய பயனர்களுக்கும், ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். 2000 கட்டுரைகள் த.வி யில் இருந்தால் அதில் 1800 ஒரே தலைப்பில் இருந்தாலும் தவறில்லை, ஏனென்றால், பிற தலைப்புகளில் வேண்டும் என்பவர்கள் அப்படி எழுத வேண்டியதுதானே? யார் யாருக்கு எந்த எந்தத் தலைப்புகளில் ஆர்வம் உள்ளதோ அவைகளில் எல்லாம் தாராளமாக த. வி-யின் கொள்கைகளுக்கு ஏற்ப எழுதலாம். மேலும், நிரோ ஏன் திரைப்படம் பற்றி எழுதுகிறார் என்றும் அழகாக விளக்கி உள்ளார். மிக ஆர்வத்துடன், மிகக் கட்டுக்கோப்புடன், விடா உழைப்போடும் முனைப்போடும் அவர் ஆக்கி வரும் ஆக்கங்களைக் கண்டு வியப்பவர்களில் நானும் ஒருவன். ஒரு தகவற்சட்டம், 2-3 வரி திரைப்பட கட்டுரைகளை அண்மையில் அவர் எழுதினாலும், பாண்டியர்களைப் பற்றியும், பிற தலைப்புகளிலும், நிரோ நிறைய எழுதி த. வி-க்குப் புதுமுடுக்கம் தந்துள்ளார். எந்த ஒருவரும் எந்த ஒரே தலைப்பிலும் கட்டுரைகள் எழுதலாம், எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் எழுதலாம். குறைந்தது 3-4 செய்திகளாவது இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடலாம். விரிவடையக்கூடிய தலைப்பாக இருத்தல் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடலாம். ஆனால் ஆர்வத்துடன் எழுதுவோருக்கு, தேவையில்லாத தடைகள் இடுவது முறையல்ல என்பது என் கருத்துக்கள்.--செல்வா 13:03, 25 மார்ச் 2007 (UTC)Reply



(மேலே உள்ள கருத்து என்னுடையதல்ல). நிரோ, அடுத்த படையெடுப்பை ஆரம்பிக்கும்போது ஒரு சிறு சமிக்கை கொடுங்கள். நாங்களும் உங்களுக்கு உதவிக்கு ஆயத்தமாய் இருப்போம்:). வாழ்த்துக்கள்.--Kanags 12:59, 25 மார்ச் 2007 (UTC)Reply


பல நாடுகளித் தன் வசம் கைப்பற்றிய மாமன்னர் தற்சமயம் நாட்டின் கட்டுமானப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். அதாவது பாண்டியர் போல விரிவான கட்டுரைகளை அனைத்துத் துறைகளிலும் எழுதுவதென்று.--நிரோஜன் சக்திவேல் 13:10, 25 மார்ச் 2007 (UTC)Reply

ஆம் நிரோ, ஏற்கனவே நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதிலும் ஈடுபடுங்கள். நன்றி--ரவி 13:15, 25 மார்ச் 2007 (UTC)Reply


நிரோ, முதலில் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். தவி கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் 8 இடங்கள் முன்னோக்கிச் சென்றதற்கு உங்களுடைய உழைப்பே முக்கிய காரணம். தவியின் கட்டுரை எண்ணிக்கையை உயர்த்துவதற்கு இத்தகைய பாய்ச்சல்கள் தேவைப்படுகின்றன. சினிமாக் கட்டுரைகள் தொடர்பாக நீங்கள் தெரிவித்த கருத்தையும் ஓரளவுக்கு நான் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு சினிமாத் துறையில் அவ்வளவு ஆர்வம் இல்லாதிருந்த போதிலும், தவியின் ஆரம்பகாலங்களில், நடிகர் பட்டியல், நடிகைகள் பட்டியல் போன்ற எவரும் பங்களிக்கக்கூடிய சில குறுங்கட்டுரைகளை உருவாக்கினேன். அக் கட்டுரைகள் ஊடாகச் சிலர் தவிக்குள் வரக்கூடும் என்பதற்காகவே இதைச் செய்தேன். அதே கருத்தையே நீங்களும் எடுத்துக் காட்டியுள்ளீர்கள். இப்பொழுது தவியில் உங்களுக்குப் போதிய அனுபவம் உண்டு, சினிமா அல்லாத கட்டுரைகளிலும் உங்கள் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். கோபியின் கருத்துக்களிலும் நியாயம் உண்டு. ஆகவே உங்கள் திறமையைச் சினிமா அல்லாத கட்டுரைகள் பக்கமும் காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன். இறுதியாகச் செல்வா கூறியதையே நானும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் முதன்மைப் பணிகளிலேயே உங்கள் முதற் கவனம் இருக்கட்டும். உங்களுடைய துறையில் நீங்கள் வளர்ச்சியடையும்போது தவியும் உங்களால் அதிக பயன்பெறும். வாழ்த்துக்கள். Mayooranathan 16:01, 25 மார்ச் 2007 (UTC)Reply


நிரோஜனின் உழைப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஒவ்வொரு கட்டுரையும் 7 - 8 தகவல்களுடன் கூடியதாக மிகச் சில நாட்களில் 500 கட்டுரைகளை உருவாக்கிய அருஞ்செயல் உண்மையில் பிரமிக்க வைப்பதாகும். ஆனால் நிரோஜனால் தமிழ்த் திரைப்படங்களுக்கு அப்பாலும் பல கட்டுரைகளைச் சிறப்பாக எழுத முடியும் என்பது நாமெல்லோரும் அறிந்ததே. அதனையே நான் சுட்டிக் காட்டினேன். நிரோ அனைத்துத் துறைகளிலும் பங்களிக்க முன்வந்திருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. பாண்டியர் போல் இல்லாவிடினும் சில குறித்த விடயப் பரப்புக்களில் ஒரே விதமான கட்டுரை அமைப்புடன் தகவல்களை மட்டும் மாற்றி 20 முதல் 50 கட்டுரைகள் வீதம் எழுதலாம். இவ்வாறே நான் பாடல் பெற்ற தலங்கள், ஆவுஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் போன்றன பற்றி எழுதினேன். (இவ்வாறு எழுதுவதால் பரந்துபட்ட விடயங்களை த.வி.யில் கிடைக்கச் செய்யலாம்.) ஆனால் நிரோ எவ்வாறு ஒரேயடியாக 500 கட்டுரைகளை எழுதினார் என்பது எனக்கு விளங்கவேயில்லை :-) பாராட்டுக்கள் நிரோ. தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி. கோபி 17:23, 25 மார்ச் 2007 (UTC)Reply

அனைவரது கருத்துக்களையும் ஏற்கின்றேன் அதே வேளை நான் இவ்வாறு படையெடுப்புகளைச் செய்ததன் காரணம் தமிழ் விக்கிபீடியா தொடர்ந்தும் கட்டுரை எண்ணிக்கையில் பின்னால் தள்ளல்ப்பட்டிருந்ததே. மேலும்.திரைப்படக் கட்டுரைகளிற்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கியதன் காரணமும் இலகுவில் தகவல் கிடைத்தன இலகுவில் உருவாக்க முடிந்தது. இதையே பாண்டியர் போல ஒரு பெரிய கட்டுரைய எழுத முயற்சித்தேன் என்றால் நிறைய ஆராய்ச்சி தேவை 300 பக்கப் புத்தகத்தினையும் வாசிக்க வேண்டும் எவ்வாறு தொகுக்கலாம் என மாற்றங்கள் செய்யவேண்டும். அவ்வாறு செய்ய 1 மாதங்கள் எடுத்திருக்கும் ஒரு கட்டுரையினை உருவாக்குவதற்கு.மேலும் விக்கிபீடியாவில் பக்கங்கள் துறைகள் ஆகியனவற்றில் கோபி கூறுவது போல் சில துறைகளில் கவனம் செலுத்துவது என்பது என்னால் ஏற்க முடியாதது நான் அவரது கருத்தினைத் தவறாகக் கூறவில்லை ஆனாலும் பல துறைகளில் பலருக்கு விருப்பம் இருக்கலாம். சிலருக்கு சில துறைகளினைப் பற்றி எழுத ஆர்வம் இருக்கலாம் அப்படிப்பார்த்தால் பல துறைகளிலும் சில கட்டுரைகள் ஒன்றாக எழுதுவதும் ஒன்றுதான் ஒரு துறையில் பல கட்டுரை எழுதுவதும் ஒன்றுதான் இதில் எண்ணிக்கை என்பது அவசியம்.தற்சமயம் நான் எண்ணிக்கையினைக் குறிக்கோளாக வைத்தே 500 கட்டுரைகளினை தொடங்கினேன். காரணம் நமக்கு முன்னிலையில் இருக்கும் 10 மொழிகளின் ஜனத்தொகையும் மிகவும் குறைவே ஆகையால் இவர்களுக்கும் முன்ன ர்னாம் இருப்பது மிகவும் தேவையானதாகக் கருத்தில் கொண்டு உருவாக்கியவையே இக்கடுரைகள் மேலும், எனக்கும் பாண்டியர் போல் கட்டுரைகள் உருவாக்கத்தான் ஆசை சூழநிலையால் இவ்வாறு எழுத நேர்ந்தது.இனிமேல் கோபி கூறியது போலவும் பல துறைகளிலும் எழுத முயற்சிக்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 17:48, 25 மார்ச் 2007 (UTC)Reply


தமிழ் விக்கிபீடியாவின் depth

தமிழ் விக்கிபீடியாவில் depth 18 எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு அனைத்து மொழிகள் பட்டியலிலும் குறிக்கப்படுவது எதனை கட்டுரையில் அளவினையா?--நிரோஜன் சக்திவேல் 19:06, 25 மார்ச் 2007 (UTC)Reply

நிரோ, பன்மொழி விக்கிபீடியா வரிசை நிலவரம் தரும் அதே பக்கத்தில் உள்ள விளக்கம் -

The "Depth" column (Edits/Articles × Non-Articles/Articles) is a rough indicator of a Wikipedia’s activity, showing how frequently its articles are updated; depths above 200 for Wikipedias below 10 000 articles are dismissed as irrelevant--ரவி 20:35, 25 மார்ச் 2007 (UTC)Reply

நிரோ, depth என்பதும் விக்கிபீடியாக்களின் தரத்தின் அளவுதான். இது ஒரு கட்டுரைக்கு எவ்வளவு தொகுப்புகள் நிகழ்கின்றன, எவ்வளவு கட்டுரையல்லாத வேறு பக்கங்கள் உள்ளன என்பதைப் பொறுத்துள்ளது. கட்டுரைகள் வேகமாக அதிகரிக்கும் போது தொகுப்புக்களிலோ அல்லது கட்டுரை அல்லாத பிற பக்கங்களிலோ அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லாததால் இது குறையும். மிகவேகமாகக் கட்டுரை அதிகரிப்புச் செய்த தெலுங்கு விக்கிபீடியாவைப் பாருங்கள். அங்கே depth 1 என்ற அளவுக்கு இறங்கிவிட்டது. தமிழிலும் சில மாதங்களுக்கு முன் 29 இல் இருந்தது இப்பொழுது 18 க்கு இறங்கியுள்ளது. Mayooranathan 03:00, 26 மார்ச் 2007 (UTC)Reply

பதுங்கிப் பாய்ச்சலா?

மாமன்னா, கொஞ்ச நாளாக ஆளைக் காணோம்?? பதுங்கிப் பாயும் (பறக்கும்? :)) உத்தேசம் ஏதும் உள்ளதா? --ரவி 18:46, 3 ஏப்ரல் 2007 (UTC)Reply

தற்சமயம் தமிழ் நாடக வரலாறு பற்றி விரிவாக விளக்கமாக தகவல்கள் சேர்த்துக்கொண்டிருக்கின்றேன். விரைவில் கட்டுரை ஆரம்பிக்கப்படும்.--நிரோஜன் சக்திவேல் 18:57, 3 ஏப்ரல் 2007 (UTC)Reply

நல்லது--ரவி 19:35, 3 ஏப்ரல் 2007 (UTC)Reply

FARC

Tamil Language article to be removed of its FA, even after extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)Reply

காப்புரிமை

நீண்ட கட்டுரைகள் எழுதுவது நன்று. பந்திகளையோ அல்லது வசனங்களையோ ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்தாள்வது காப்புரிமையை மீறும் செயலாகும். நீங்கள் அறிந்து அவ்வாறு செய்யமாட்டீர்கள் என்று தெரியும். இருப்பினும் காப்புரிமை தொடர்பாக அலட்ச்சியமாக இருத்தல் தொலைநோக்கில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். நன்றி. --Natkeeran 13:16, 9 ஏப்ரல் 2007 (UTC)Reply

காப்புரிமையினை மீறுவதென்பது அப்புத்தகத்தினை உசாத்தினையில் குறிக்காமல் அப்படியே புத்தகத்தில் உள்ளது போல் இங்கும் எழுதுவது ஆனால் நான் அனைத்தினையும் மாற்றி எழுதியுள்ளேன் விக்கிபீடியா நடைக்கேற்றாற்போல் உசாத்துணையுடன்.--நிரோஜன் சக்திவேல் 15:34, 9 ஏப்ரல் 2007 (UTC)Reply

நன்றி நிரோஜன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். --Natkeeran 15:36, 9 ஏப்ரல் 2007 (UTC)Reply

இதில் தவறாக நினைப்பதில் என்ன உள்ளது.--நிரோஜன் சக்திவேல் 15:37, 9 ஏப்ரல் 2007 (UTC)Reply

awb

நிரோ, பல பக்கங்களில் வார்ப்புரு இடுவது போன்ற சிறு மாற்றங்களுக்கு autowikibrowser பயன்படுத்துவது உங்கள் வேலையை எளிதாக்கும். முயன்று பாருங்கள்--ரவி 07:35, 16 ஏப்ரல் 2007 (UTC)Reply


மூன்றாம் படையெடுப்பிற்குத் தயாராகுங்கள்

படை திரட்டப்படுகின்றது இம்முறை அனைவரும் வியக்கும் வண்ணம் தாக்குதல் நடத்துவதற்கு மாமன்னர் ஏற்பாடு நடத்துகின்றார். விரைவில் படையெடுப்பு ஆரம்பம். அனைத்து தமிழ் விக்கி நாட்டில் உள்ள மக்களையும் ஆங்காங்கே சிறு படைகளைத் திரட்டுமாறும் மாமன்னர் உத்தரவு பிறப்பிக்கின்றார். பத்து நாட்களுக்குள் படையெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என மன்னரின் அமைச்சரவைவில் கருத்து அடிபடுகின்றது.--நிரோஜன் சக்திவேல் 01:04, 23 ஏப்ரல் 2007 (UTC)Reply

இன்னும் ஒரு படையெடுப்பா!! நடக்கட்டும். முழு வெற்றி அடைய என் நல்வாழ்த்துக்கள்!!--செல்வா 02:29, 23 ஏப்ரல் 2007 (UTC)Reply
அமைதியா இருக்கும் போதே நினைத்தேன் புயல் வரப்போகுதுனு. முன் கூட்டியே என் நல்வாழ்த்துக்கள்!!--டெரன்ஸ் \பேச்சு 04:33, 23 ஏப்ரல் 2007 (UTC)Reply

ஆகட்டும் ஆகட்டும்--கலாநிதி 16:42, 23 ஏப்ரல் 2007 (UTC)

நானும் என் சிறு படையைத் திரட்டுகிறேன்.--Sivakumar \பேச்சு 16:48, 23 ஏப்ரல் 2007 (UTC)Reply

மாமன்னரே, இன்னும் பத்து நாட்களுள் பத்தாயிரம் எட்டப்படும் என எதிர்பார்க்கலாமா? மகிழ்ச்சிதான் :-)) --கோபி 16:58, 23 ஏப்ரல் 2007 (UTC)Reply

அன்சாக் நாளன்று படையெடுப்பைத் தொடங்கியிருக்கிறீர்கள். வெற்றியுடன் திரும்ப வாழ்த்துகள். என் மிகச் சிறு படை உங்கள் படையுடன் ஒப்பிடும்போது எம்மாத்திரம். எண்டாலும் உதவி தேவையானால் கூப்பிடுங்கள்.--Kanags 02:46, 25 ஏப்ரல் 2007 (UTC)Reply

தொடரும் படையெடுப்பு பெறு வெற்றியடைய வாழ்த்துக்கள் :)--ரவி 07:11, 25 ஏப்ரல் 2007 (UTC)Reply

மன்னா,, உணவு , உறக்க, வேலை இடைவேளைக்குப் பிறகு படையெடுப்பைத் தொடருமாறு வேண்டிக் கொள்கிறேன் !!!--ரவி 09:17, 25 ஏப்ரல் 2007 (UTC)Reply

எதிரிகள் பலரை வென்றுள்ளோம் போர் இடைவேளை நேரம் படை வீரர்பலர் இன்னமும் போருக்கு ஆயத்த நிலையில் போர் மீண்டும் வெடிக்கலாம் தயார் நிலையில் அனைவரும் இருங்கள்.--நிரோஜன் சக்திவேல் 09:37, 25 ஏப்ரல் 2007 (UTC)Reply

மன்னா தங்களின் படையெடுப்பினால் எதிரிகள் துவம்சம் ஆகின்றார்கள். தாங்கள் என்னவிசைப்பலகை பாவிக்கின்றீர்கள்? (அஞ்சல், பாமினி, தமிழ்நெட் 99)--Umapathy 10:03, 25 ஏப்ரல் 2007 (UTC)Reply

நான் உபயோகிப்பது keyman இல் unitamil--நிரோஜன் சக்திவேல் 17:12, 25 ஏப்ரல் 2007 (UTC)Reply

pls see http://blog.ravidreams.net/?p=154 for difference between keyboard, software and encoding--ரவி 22:42, 25 ஏப்ரல் 2007 (UTC)Reply

இடைவேளையா??!! நிரோ, வெற்றிமேல் வெற்றி குவிக்கும் மன்னர்தாம் நீங்கள்! வாழ்த்துக்கள்! உங்கள் திட்டம் மிக அருமை!--செல்வா 11:44, 25 ஏப்ரல் 2007 (UTC)Reply


தொடரும் படையெடுப்பு

தொடர்ந்து மூன்றாம் நாளும் நடைபெறும் மூன்றாம் படையெடுப்பு........--நிரோஜன் சக்திவேல் 21:25, 26 ஏப்ரல் 2007 (UTC)Reply

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள் தங்களது கவனத்தை இந்த பக்கத்துக்கு வேண்டுகிறேன். முடியுமான போது வந்து பங்களிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:03, 26 ஏப்ரல் 2007 (UTC)Reply

அடுத்த படையெடுப்பிற்கான வேண்டுகோள்

மாமன்னா, தமிழ் விக்சனரியில் படை வீரர் எண்ணிக்கை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. உங்களிடம் ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி ஏதும் இருந்தால் அதைக் கொண்டு தமிழ் விக்சனரி தளத்துக்கு வந்து ஒரு படையெடுப்பை முன்னின்று நடத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் :) --ரவி 16:04, 26 ஏப்ரல் 2007 (UTC)Reply

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! 10000 கட்டுரைகள்!!!

நிரோ, உங்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்! 10,000 கட்டுரைகளை இவ்வளவு விரைவாகத் தாண்டுவோம் என்று யாருமே எண்ணியிருக்க மாட்டார்கள்! இத்தனைத் திரைப்படங்கள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியவே தெரியாது! நீங்கள் எதிர்பார்ப்பதுபோல், இதுவே பலரையும் த.வி- க்கு வருகைதர முதல் உந்துதலாக அமையலாம். திரைப்படங்கள் பற்றிய அடிப்படையான செய்திகளுக்குச் த.வி யே சிறந்த இடமாக இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் பேருழைப்பைப் போற்றுகிறேன். --செல்வா 00:08, 27 ஏப்ரல் 2007 (UTC)Reply

நன்றிகள் அனைவருக்கும்--நிரோஜன் சக்திவேல் 00:19, 27 ஏப்ரல் 2007 (UTC)Reply

நன்றி நிரோ, தங்களின் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைத்த உழைப்பினால் 10, 000 கட்டுரைகளைத் தாண்டியுள்ளோம். தமிழ் சினிமா குறித்த உங்கள் கட்டுரைக்ளுக்கு நன்றி. --Umapathy 01:30, 27 ஏப்ரல் 2007 (UTC)Reply
தமிழ் விக்கிபீடியா 10,000 கட்டுரை இலக்கை இவ்வளவு விரைவாகத் தாண்டுவதற்கு உங்களுடைய பங்களிப்பே முக்கிய காரணமாக இருந்தது. நன்றியும் வாழ்த்துக்களும். Mayooranathan 04:20, 27 ஏப்ரல் 2007 (UTC)Reply

நிரோ, தங்களின் அயரா உழைப்பினால் இன்று 10,000 என்ற இலக்கை அடைந்துள்ளோம். இந்நாள் விக்கிபீடியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள். நன்றியும் வாழ்த்துக்களும்.--Kanags 09:08, 27 ஏப்ரல் 2007 (UTC)Reply


நிரோ, பத்தாயிரத்தை இவ்வளவு விரைவில் எட்ட உதவியது உங்களது விடா முயற்சியே. தமிழ்த் திரைப்படங்கள் தொடர்பில் த.வி.யில் தேடினால் எல்லாமே கிடைக்கும் என்ற நிலை உங்களது பணியால் உருவாகி வருகிறது. நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கோபி 15:49, 27 ஏப்ரல் 2007 (UTC)Reply
தங்களின் அரிய பணிக்கு வாழ்த்துக்கள் மாமன்னரே தொடர்ந்து முன்னெடுங்கள் தங்கள் ராஜங்கத்தை--கலாநிதி 17:11, 27 ஏப்ரல் 2007 (UTC)
வாழ்த்துக்கள் மன்னவா. இனி கோட்டைகள் கட்டி, நாட்டைப் பலப்படுத்துவோம். --Natkeeran 01:20, 28 ஏப்ரல் 2007 (UTC)Reply

மூன்றாம் படையெடுப்பு ஓய்ந்தது

பிறமொழியினர் முன்னேற முனைந்தால் மீண்டும் ஒரு படையெடுப்பு நடத்தப்படும். தற்சமயம் அனைத்து மக்களும் சிறு படையெடுப்புகளை எடுக்குமாறு மன்னர் உத்தரவு பிறப்பிக்கின்றார்.ஹிந்தி மொழியினரை முந்துவது வெகு விரைவில் அவர்களுக்கெதிரான படையெடுப்பில் அவர்கள் சுக்கு நூறாகப் போகின்றனர். விரைவில் நான்காம் படையெடுப்பு நடாத்தாப்படும்.--நிரோஜன் சக்திவேல் 00:26, 27 ஏப்ரல் 2007 (UTC)Reply


உங்கள் இடையராப் பணிக்கு நன்றி சொல்லிப்போதாது. நீங்கள் எங்கோ ஒரு மில்லியன் கட்டுரைகளை எட்டிவிடுவோம் என்று கூறியிருந்தீர்கள் இப்படிப்போனால் அதுவும் நடக்கலாம். ஒரு சிரியக் கேள்வி நீங்கள் திரைப்படங்கள் பற்றிய வார்புருவில் நீளம் என்ற ஒரு களத்தை இட்டுள்ளீர்கள் இது ரீலின் நீளமா? ஆப்ப்டியானல் அதில் இட்டுள்ள மி என்பது மீட்டருக்காகவா? பதில் கூறினால் மீட்டருக்கான இணைப்பை பாட் மூலம் இட்டு விடலாம்.--TrengarasuBOT 07:15, 27 ஏப்ரல் 2007 (UTC)Reply

ஆமாம் மி என்பது மீட்டர் கணக்கு அ என்பது அடிகள்--நிரோஜன் சக்திவேல் 15:05, 27 ஏப்ரல் 2007 (UTC)Reply

நிரோ, உங்கள் அண்மைய வெற்றிகரமான படை(டம்?) எடுப்பிற்குப் பாராட்டுக்கள். இப்படையெடுப்பிற்கு பொருத்தமான நினைவுக் குறியீடாக எம். ஆர். இராதா கட்டுரையை உருவாக்க வேண்டுகிறேன். தமிழ் திரைப்படத்துறை தொடர்பில் இத்தனை கட்டுரைகள் இருந்தும் நடிகவேளிற்கு ஒரு கட்டுரை இல்லாதது வருத்தத்திற்குறியது. தேவையான தகவல்களை இங்கிருந்தும் ஒத்த கட்டுரையிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். நானும் என்னால் இயன்ற உதவி செய்கிறேன். என்ன சொல்கிறீர்கள்? -- Sundar \பேச்சு 15:50, 4 மே 2007 (UTC)Reply

முயல்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 15:55, 4 மே 2007 (UTC)Reply


வார்ப்புருக்களின் நிறங்களைத் தேர்ந்தெடுப்பது எங்கு

வார்ப்புருக்கள் உருவாக்குவது எவ்வாறு மற்றும் முக்கியமாக ஒரு வார்ப்புருவின் பின்புற நிறங்கள் போன்றனவற்றை எடுத்துக்காட்டாக தமிழ்த் திரைப்படத்திற்கு நான் அதன் பின்புறத் தோற்றத்திற்கு நிறம் ஒன்றினை இட்டுள்ளேன் இவ்வாறான அனைத்து நிறங்கள் பற்றிய பட்டியல் ஒன்று அவசியம் தேவைப்படுகின்றது எங்கு தமிழ் விக்கியில் உள்ளது அல்லது ஆங்கில விக்கியில் உள்ளதா.--நிரோஜன் சக்திவேல் 01:30, 5 மே 2007 (UTC)Reply

நிறங்கள் தொடர்பாக த.வி இன்னும் எந்தவித அலசலும் இல்லை. தகவல்கள் தட்டுப்பட்டால் சேர்த்துவிடுகிறேன். --Natkeeran 00:42, 14 மே 2007 (UTC)Reply

சிந்து கவனிக்க

இராகங்களினைப் பற்றியும் இசை வடிவங்களினைப் பற்றியும் நீங்கள் தொகுப்பன மிகவும் பயனுள்ளன. இத்தகு இராகங்களினைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள் என நினைக்கின்றேன். இவற்றினை அனைவரும் எளிதில் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் எடுத்துக்காட்டு என வெளியிணைப்பினை இட்டு தமிழ்த் திரைப்பாடல்கள் மற்றும் திரைப்படத்தின் பெயர்களினை போன்றவற்றினை வழங்கினால் அனைவரும் ராகங்களினை மிகவும் எளிய முறையில் தெரிந்து கொள்ள இயலுமல்லவா.உங்களுக்குத் தெரிந்தனவற்றை அளித்தால் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும்.--நிரோஜன் சக்திவேல் 00:08, 14 மே 2007 (UTC)Reply

மீண்டும் வருக

நிரோ, நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லை. பாரிய படையெடுப்புக்களின்பின்னர் எங்கே போய்விட்டீர்கள்? மீண்டும் உற்சாகத்துடன் பங்களிக்க வாருங்கள். அண்மைக்காலமாகப் பயனர்கள் பலர் மும்முரமாகப் பங்களிக்கிறார்கள். நீங்களும் வந்தால் மேலும் பலம் சேர்ப்பதாயிருக்கும். நன்றி. --கோபி 16:59, 10 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நிரோ, எப்படி இருக்கின்றீர்கள்? தமிழ் விக்கிக்கு உங்களை மீண்டும் வரவேற்பதில் மகிழ்கிறேன். அண்மையில் Mohandoss என்னும் பயனர் இசைக்குழுக்களைப் பற்றி அருமையாக தொகுத்து வருவது கண்டபொழுது உங்கள் நினைவு மிகவும் வந்தது. இயன்ற பொழுது மீண்டும் பங்களியுங்கள். நன்றி.--செல்வா 17:26, 10 செப்டெம்பர் 2007 (UTC)Reply

வேலைப்பளு காரணமாக என்னால் பங்களிக்க இயலவில்லை விரைவில் எனது மிகப்பெரிய பங்களிப்புகள் தொடரும்.......--நிரோஜன் சக்திவேல் 17:48, 10 செப்டெம்பர் 2007 (UTC)Reply


A question for you

Dear Sir / Madam,

I can not read Tamil, but I have a question for you here. Thanx !!

My dialog 00:31, 22 நவம்பர் 2007 (UTC)Reply


விபரணப்படம்

விவரணப்படமா விபரணப்படமா தெரிந்தவர்கள் பதிலளிக்கவும்.--நிரோஜன் சக்திவேல் 19:37, 29 ஜனவரி 2008 (UTC)

இரண்டுமே சரியானதுதான். விவரணப்படம் என்பதைத் தேர்வு செய்யலாம். ஆனால் ஆவணப்படம் என்றும் கூறலாம். --செல்வா 02:54, 23 மார்ச் 2008 (UTC)Reply

Hi

Hi. மீண்டும் வருக. என் வயதை ஒத்தவர்கள் யாரும் இல்லாமல் Bore அடித்துக்கொண்டிருந்தது. :-)) மீண்டும் வந்ததமைக்கு நன்றிகள். முன்னர் செய்தது போல் இன்னொரு பாரிய படையெடுப்பை செய்வீர்கள் என எண்ணுகின்றேன் βινόδ  வினோத் 16:02, 1 பெப்ரவரி 2008 (UTC)Reply

இயன்ற அளவு முயற்சி செய்கின்றேன் வேலைப்பளு கொஞ்சம் குறைந்துள்ளது அதே வேளை கூகிள் வீடியோவில் தமிழைப் பரப்ப 1000 ற்கும் அதிகமான வீடியோக்களை அளித்துள்ளேன். மேலும் இணையத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ் பரப்ப முயற்சிகள் செய்துகொண்டுள்ளேன் உலகில் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி விக்கிபீடியாவிற்குள் அவர்களை நுழைத்து அறிவில் மூத்தோர் ஆக அவர்களை மாற்ற முயற்சிகள் பல செய்கின்றேன்.என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி அவ்வளவுதான்--நிரோஜன் சக்திவேல் 16:06, 1 பெப்ரவரி 2008 (UTC)Reply

நிரோ, மேலே நீங்கள் கூறியனவற்றைக் கேட்டு மிக மகிழ்கிறேன். நீங்கள் கூறும் தமிழர்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்க உங்கள் நற்பணி.--செல்வா 02:51, 23 மார்ச் 2008 (UTC)Reply



சந்தேகத்தினைத் தீர்த்து வையுங்கள்

பத்திரிகையா பத்திரிக்கையா எது சரி தெரிந்தவர் விளக்குக--நிரோஜன் சக்திவேல் 17:27, 27 ஏப்ரல் 2008 (UTC)Reply

நிரோ, பத்திரிக்கைதான், எள்முனையளவும் ஐயமில்லை. வல்லின க் இல்லாவிட்டால் "பத்திரிgai" என்று ஒலிக்கும். -- சுந்தர் \பேச்சு 17:35, 27 ஏப்ரல் 2008 (UTC)Reply

இன்று தமிழகத்தில் பத்திரிகையை பத்திரிக்கை ஆக்கி விட்டனரோ தெரியாது. தமிழறிஞர் உ. வே. சாமிநாதையர் தனது கட்டுரைகளில் பத்திரிகை என்றே எழுதிவந்தார் (இன்று அவரது நினைவு நாள்). என்னிடம் ஆதாரம் உள்ளது. நன்றி.--Kanags \பேச்சு 21:33, 27 ஏப்ரல் 2008 (UTC)Reply

சுந்தர், கனகு, நிரோ, பத்திரிகை என்பதுதான் சரியானது, ஆனால் சுந்தர் சொன்னதுபோல அதனை பத்திரிgai என்றுதான் ஒலித்தல் வேண்டும். பத்திரிkai என்று ஒலிக்க வேண்டும் என்று விரும்பினால் பத்திரிக்கை என்றுதான் எழுதுதல் வேண்டும். கூகுள் தேடல் சரியான முடிவுகள் தரும் என்பதில்லை, ஆனால் கூகுளில் திருமண பத்திரிக்கை என்னும் சொல்லாட்சி 2530 முறையும், திருமண பத்திரிகை என்பது ஒரே ஒரு முறையும் பதிவாகியுள்ளது. ஒலிப்பு பற்றி சுந்தர் கூறியதில் எள்ளளவும் ஐயம் இல்லை. --செல்வா 22:37, 27 ஏப்ரல் 2008 (UTC) பத்திரிகை என்பது பத்ரம் = இலை, ஓலை, கடிதம் என்னும் வடமொழிச் சொல்லில் இருந்து ஆக்கப்பட்ட சொல்.--செல்வா 22:52, 27 ஏப்ரல் 2008 (UTC)Reply

தவறான பரிந்துரைக்கு வருந்துகிறேன். அதையும் "எள்முனையளவும் ஐயமில்லை" என்று கூறியது பெரிய தவறு. வடசொல் என்பதால் எனக்கு சொல் நெறி சரிவர தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 03:25, 28 ஏப்ரல் 2008 (UTC)Reply

பத்திரிகை வடசொல் என்றால் அதன் தமிழ்ச் சொல் என்ன செய்தித்தாளா.--நிரோஜன் சக்திவேல் 23:04, 27 ஏப்ரல் 2008 (UTC)Reply

பத்திரிக்கை, பத்திரிகை என்பதற்குப் பதில் இதழ் என்ற சொல் பயன்படுகிறது. நாளிதழ், வார இதழ், குடும்ப இதழ், சிறுவர் இதழ், திருமண வரவேற்பிதழ், இதழியல், இதழாளர்கள்...--ரவி 00:09, 28 ஏப்ரல் 2008 (UTC)Reply

ஈராயிரவர் பதக்கம்

ஈராயிரவர் பதக்கம்

நிரோஜன் சக்திவேல், நீங்கள் தமிழ் விக்கிக்குப் புயல் வேகத்தில் பணியாற்றி இன்றளவில் 2448 கட்டுரைகள் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! இங்குள்ளோர் யாவருக்கும், இனி வருவோருக்கும் நீங்கள் சிறந்த முன் சான்றாளராகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உடன்பணியாளராகிய நான் ஈராயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நல்லுள்ளம், நற்பணி! அன்புடன் --செல்வா 15:56, 3 மே 2008 (UTC)Reply

நன்றி திரு செல்வா அவர்களே எவ்வாறு நான் இவ்வாறு உருவாக்கியதை அவதானிக்கின்றீர்கள் எனக்கே தெரியவில்லை விளக்குக.--நிரோஜன் சக்திவேல் 15:59, 3 மே 2008 (UTC)Reply

வாழ்த்துக்கள் நிரோஜன். --Natkeeran 16:02, 3 மே 2008 (UTC)Reply

நிரோ, இங்கே பாருங்கள். நீங்களே 2000 கட்டுரைகள் தொடங்கி அருஞ்செயல் ஆற்றிய முதல் பயனர்! ஏப்ரல் 26, 2007 இலேயே 2000ஐ அடைந்தீர்கள். உங்கள் படிப்புக்கும், பிற முதன்மையான கடமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து, எந்தவித ஊறும் வாராமல் எஞ்சி நேரம் கிடைத்தால், இயன்றவாறு தொடர்ந்து பங்களியுங்கள்.--செல்வா 17:02, 3 மே 2008 (UTC)Reply

நிரோஜன், உங்கள் புயல்வேகக் கட்டுரையாக்கங்களினால் குறைந்த காலத்திலேயே ஏறத்தாழ 2500 கட்டுரைகளை ஆக்கிச் சாதனை புரிந்துள்ளீர்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மயூரநாதன் 19:14, 3 மே 2008 (UTC)Reply

நூலகத் திட்டம்

நிரோஜன், நீங்கள் நூலகத் திட்டம் பற்றி அறிவீர்கள். அதில் தற்போது ஏறத்தாழ 1600 நூற்கள் பதிவேற்றப்பட்டுவிட்டன. அடுத்த கட்ட செயற்திட்டமும் (+1000) தொடங்கி விட்டது. இந்த நூற்களை பரந்த வாசிப்பு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவ்வப்பொழுது சில இடுக்கைகள் (5-10 வரிகள்) எழுதி பங்களித்தால் நன்றாக இருக்கும். எ.கா நீங்கள் படித்த நூற்களின் அறிமுகங்கள் தரலாம்.

--Natkeeran 16:23, 3 மே 2008 (UTC)Reply


உத்தியோகப்பூர்வம் மற்றும் அதிகாரப்பூர்வம்

உத்தியோகப்பூர்வம் என்றால் என்ன அதிகாரப்பூர்வம் என்றால் என்ன தெரிந்தவர் விளக்குக.--நிரோஜன் சக்திவேல் 15:31, 24 மே 2008 (UTC)Reply

இரண்டும் Official என்பதின் தமிழாக்கங்கள். முன்னது ஈழவழக்கு பின்னது தமிழக வழக்கு வினோத்ラージャン 15:35, 24 மே 2008 (UTC)Reply

நன்றி வினோத்--நிரோஜன் சக்திவேல் 15:37, 24 மே 2008 (UTC)Reply

அலுவல்நிலை? தனித்தமிழ் வழக்கு. ;) -- சுந்தர் \பேச்சு 15:39, 24 மே 2008 (UTC)Reply

உத்தியோகப்பூர்வம் என்பது பொருந்தாத சொல்லாட்சி ஆனால் வறட்டுத்தனமாக மொழிபெயர்த்தது. Office என்பது அலுவலகம். ஒருவர் வேலை பார்ப்பதை உத்யோகம் பார்க்கிறார் என்பார்கள் (வடமொழி சார்புடைய மேல் மட்ட 2-5% மக்கள், எல்லோரும் அல்ல). என்ன உத்யோகம் என்பது என்ன வேலை (தான் வாழ பொருள் ஈட்டும் தொழில், பணி) என்றுதான் பொருள். இது தவிர உத்யோகஸ்தர், அரசாங்க உத்யோகம் முதலான சொற்களும் வடமொழி சார்புடைய 2 முதல் 5% மக்களிடையே வழக்கில் இருந்தது (இன்று அது என்ன ஜா'ப்? உங்களுக்கு என்ன ப்ரொ'வெஷன்?, ஆபீஸ் ஜாபா?..) ஆகவே இந்த உத்யோகம் என்பது Office (அலுவலகம்) என்பதோடு தொடர்பு கொண்டு official என்பதற்கு உத்யோகபூர்வமாக என்னும் பொருள் பொருந்தாத சொல்லை விடாது எழுதுகிறார்கள். ஒரு நிறுவனத்தின் ஏற்பு பெற்ற ஒன்று என்று சொல்வதை ஏற்புபெற்ற "ஒப்புதல்பெற்ற" என்று ஏதேனும் பொருத்தமாகச் சொல்லுதல் வேண்டும். அதிகாரபூர்வமாக என்பது பொருந்தும். அதாவது ஒரு நிறுவனத்தைப் பொருத்த அளவில் அதன் செயல்பாடுகளை வரையறை செய்யும் உரிமை, அதிகாரம் பெற்ற ஓர் அறிவிப்பு/செயல்/நிலை என்று கூறுவதாகக் கொள்ளலாம். அதிகாரம் என்னும் சொல் power. authority என்னும் பொருள் கொண்டது. எனவே authorized, approved என்றும் பொருள் கொள்ளும். அதனை எளிதாக (நிறுவன) ஏற்புபெற்ற என்று கூறுவது இன்னும் கூடுதலாகப் பொருந்தும். நல்ல தமிழாகவும் இருக்கும். அதிகாரம் தேவை இல்லை. அதிகாரம் என்பது சமசுகிருதச்சொல். நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு என்பதை விட நிறுவனத்தின் அறிவிப்பு என்றாலே போதும். அங்கே அதிகாரபூர்வ அல்லது ஏற்புபெற்ற என்னும் சொல்லே தேவை இல்லை. இதெல்லாம் வறட்டுத்தனமான செயற்கையான மொழிபெயர்ப்புகள். தமிழ்வழி சிந்திக்காததால் எழும் குழப்பங்கள். நிறுவனப்பெயர் என்றாலே போதும். நிறுவனத்தின் அதிகாரபூர்வமான பெயர் என்று நீட்டி முழக்க வேண்டியதில்லை. நிறுவனத்தின் முறையான பெயர் என்றும் கூறலாம், ஆனால் தேவை இல்லை.--செல்வா 16:02, 24 மே 2008 (UTC)Reply

நன்றி செல்வா அதேவேளை அதிகாரபூர்வ இணையத்தளம் என்றா எழுதுவது இல்லை அதிகாரப் ப் சேர்த்து அதிகாரப்பூர்வ இணையத்தளம் என்றா எழுதுவது விளக்குக.--நிரோஜன் சக்திவேல் 16:20, 24 மே 2008 (UTC)Reply

அதிகாரபூர்வ என்று எழுதுவதுதான் வழக்கு, ஆனால் அப்படி எழுதிவிட்டு அதிகாரpuurva என்று வல்லின பகர ஒலிப்புடன் கூறுவது தமிழ் முறைமைமைக் குலைப்பதாகும். என் பரிந்துரை ஏற்புபெற்ற வலைத்தளம்/இணையத்தளம். இல்லாவிடில் பதிவுப் பெயர், முறைப்பெயர், ஒப்புதல்பெற்ற பெயர் என்று சொல்லலாம். எங்கள்/நிறுவன/தொழில்/கழக/நாட்டு/.. ஏற்புபெற்ற இணையத்தளம்என்று எழுதுங்கள். தமிழ்ச்சொற்களைத் தமிழர்கள் ஆளாமல் பின் என்ன கன்னட, இந்திமொழியர்களா ஆளப்போகிறார்கள்? ஏதும் தொடங்குவதாக இருந்தால் நல்ல உயிர்ப்பான தமிழில் பெயரிட்டுத் தொடங்குங்கள் என்று பரிந்துரைக்கிறேன். --செல்வா 16:59, 24 மே 2008 (UTC)Reply

தாக்குதல்கள்

நிரோஜன், மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடங்கியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது:). பாராட்டுகள். மிகவும் தேவையான கட்டுரைகள். மிக்க நன்றி. கட்டுரைகளில் சில வெளியிணைப்புகளையும் சேர்த்து விடுங்கள். இப்படியான கட்டுரைகள் மேற்கோள்கள் இல்லாமல் எழுதுவது முறையல்ல. செய்திக்குறிப்புகள் க்ட்டாய்யம் இணையங்களில் இருக்கும். உ+ம் புதினம், தமிழ்நெட், சண்டேடைம்ஸ், டெய்லிமிரர் போன்ற பக்கங்களில் இருந்து மேற்கோள் காட்டலாம். நன்றி.--Kanags \பேச்சு 22:46, 30 மே 2008 (UTC)Reply

யூடியூப் படங்கள்

நீங்கள் யூடியூப் படங்களை எவ்வாறு உருவாக்குகிறீர்கள். அண்மையில் கேம்பிரிச் பல்கலைக் கழகம் 2 நிமிடத்துக்குள் கணினி விஞ்ஞானம் பற்றிய யூடியூப்பை உருவாக்கும் போட்டியை அறிவித்துள்ளார்கள். பார்க்க http://www.2minutechallenge.org/site/ (ஆரம்பத்தில் எம் எஸ் என் இந்தியா தளத்தூடாகவே இதை அறிந்தேன் http://tamil.in.msn.com/infotech/articles/article.aspx?cp-documentid=1421833). நன்றி. --உமாபதி \பேச்சு 17:25, 1 ஜூன் 2008 (UTC)


நான் யூடியூப் உபயோகிப்பதில்லை ஆனால் கூகிளில் தான் எனது 1000ற்கும் மேற்பட்ட நிகழ்படங்கள் இவற்றில் இரண்டு மணி நேரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் என கூகிள் இணையம் மிகச்சிறந்தது. யூ டியூப்பில் 30 நிமிடத்திற்கு மேலே செல்ல இயலாது. எனது டி. வி. டியில் உள்ள திரைப்படங்களினை நான் imtoo என்னும் software மூகன் எனது கணனியில் பதிவேற்றிப் பின் அப்படங்களை கூகிளில் பதிவேற்றுகின்றேன்.

http://www.imtoo.com/ இத்தளத்தில் சென்று அந்த மென்பொருளை பதிவேற்றுக பின் FF5EE6F5F72DB036CE691F17-48ED-651C-3C86 இந்த passwordஜ உபயோகித்து உங்களுக்குச் சொந்த மாக்கிக் கொள்க. --நிரோஜன் சக்திவேல் 17:35, 1 ஜூன் 2008 (UTC)


என்னைப் பொருத்தமட்டில் கூகில் வீடியோ பலமடங்கு சிறந்தது

  • எவ்வளவு மணித்தியாலம் உள்ள நிகழ்பத்தினையும் பதிவேற்றலாம்.
  • மற்றவருடைய நிகழ்படத்தினை நாம் எமது கணனியில் பதிவேற்றி வைக்கலாம்.

--நிரோஜன் சக்திவேல் 17:37, 1 ஜூன் 2008 (UTC)

நன்றி நிரோ. நேரடியாக இந்த மென்பொருளூடாக Record பண்ண இயலுமா? அல்லது விண்டோஸ் மூவி மெக்கரில் வீடியோவைப் பதிந்து விட்டுப் பின்னர் யூடியூப் இற்கு ஏற்றமாதிரி மாற்றிவிடலாமா? சொந்தமாக ஒன்றைத் தயாரித்துப் பதிவேற்றம் செய்யவேண்டியதே எனது தேவை--உமாபதி \பேச்சு 17:46, 1 ஜூன் 2008 (UTC)--உமாபதி \பேச்சு 17:46, 1 ஜூன் 2008 (UTC)

ஆமாம் நீங்கள் உங்கள் டி. வி. டித் திரைப்படங்களை கூகிளிலோ யூடியூப்பிலோ பதிவேற்ற வேண்டுமானால் imtoo வைப் பாவிக்கலாம். ஆனால் புகைப்படங்கள் சிலவற்றை வைத்து edit செய்து போட வேண்டுமென்றால் விண்டோஸ் மூவி மேக்கர் ஜப் உபயோகிக்கலாம்.--நிரோஜன் சக்திவேல் 17:52, 1 ஜூன் 2008 (UTC)

வார்ப்புரு கனேடியத் தமிழர்

  • வார்ப்புரு:கனேடியத் தமிழர்
  • மேற்கண்ட வார்ப்புருவைச் சற்று சுருக்கி உள்ளேன். ஒரே தகலை மீண்டும் மீண்டும் தருவது சற்று excessive ஆக இருக்கிறது. சில தகவல்களுக்கு பட்டியல்கள் கூடப் பொருந்தும், சில இடங்களில் துறை பற்றிய கட்டுரை கூடப் பொருந்து. எவ்வாறு பொருந்துகிறதோ அவ்வாறே செய்யாம். நீங்கள் இது சற்று intrusion போன்று தோன்றினால், தயங்காமல் சொல்லவும். உங்கள் வார்ப்புருவை சற்று Generalize செய்து பிற நாட்டு தமிழர்கள் பற்றிய தகவல்களை சேர்ப்பதற்கும் பயன்படுத்தலாம். நன்றி. --Natkeeran 02:09, 3 ஜூலை 2008 (UTC)

வரிசைப் படுத்தல்

  • ஒன்றுக்கு 1 இலக்கமும், இன்னொன்றுக்கு 3 இலக்கமும் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? Random ஆக செய்தாலும் அது நடுநிலைமையாக perceive பண்ணுப்படாது. அதனால் அகரவரிசைப் படுத்தல் நன்று. அல்லது திகதி அடிப்படையில்! பொதுவாக இதுவே ஆங்கில விக்கியில் பின்பற்றப்படுகிறது. வெறும் பட்டியலே போதும், மேலதிக விபரங்களை கட்டுரையில் சேர்க்கலாம். --Natkeeran 01:04, 10 நவம்பர் 2008 (UTC)Reply


  • நீங்கள் கூவதும் நன்றே ஆனாலும் நான் இலக்கங்கள் இட்டு வழங்குவது இதழ்களோ, நூற்களோ ஆகியனவற்றின் மொத்தத் தொகையினை அறிவதற்கே. ஆகையால் இலக்கம் என்பது மிகவும் முக்கியமானதாக நான் கருதுகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 01:31, 10 நவம்பர் 2008 (UTC)Reply


  • பிழைகள் இருந்தால் பின்னாட்களில் திருத்தி எழுதலாம். ஆக்வே இலக்கம் இடப்பட்டு வருவதை தயவு கூர்ந்து இடைநிறுத்த வேண்டாம். நான் இங்கு பட்டியல்கள் இடுவதே அதன் மொத்த எண்ணிக்கையினை அறிந்துகொள்வதச்ற்கு உதாரணத்திற்கு தமிழில் வெளிவந்த மொத்த திரைப்படங்களினை விக்கியில் இலக்கம் இல்லாவிடில் நான் வந்து இங்கு எண்ணிக்கொண்டிருக்க முடியாது அல்லவா. ஆகையால் இலக்கம் இடுவது முக்கியம் என்பது என் கருத்து.--நிரோஜன் சக்திவேல் 01:33, 10 நவம்பர் 2008 (UTC)Reply


உங்கள் பயன்பாட்டுக்கு இப்படியும் சொய்யலாம். வேண்டுமானால் வேரு ஒரு பட்டியலை அகரவரிசைப் படி பின்னர் தயாரிக்கலாம். கனடாவில் பகுப்பு:கனேடியத் தமிழ் இதழ்கள் பற்றி மேலும் சில கட்டுரைகள் இட்டுள்ளேன். http://www.thamizham.net/ அரிதான சிற்றிதழ்கள் பற்றி பல தகவல்கள் கிடைக்கின்றது.


நூற்களா அல்லது நூல்களா

நூற்கள் , நூல்கள் இரண்டும் சரிதானா அல்லது எது மிகவும் நல்லது. எனக்கு நூற்கள் சிறப்பான உச்சரிப்பினைத் தருகின்றது.--நிரோஜன் சக்திவேல் 18:18, 23 நவம்பர் 2008 (UTC)Reply

நூல்கள். --Natkeeran 18:43, 23 நவம்பர் 2008 (UTC)Reply

2004 ஆம் ஆண்டு வெளிவந்த நூற்கள் என்பது உச்சரிக்கும் பொழுது சிறப்பாக உள்ளது 2004 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்கள் என்பது எனது உச்சரிக்கும் தன்மையில் பொருந்தவில்லை. நூற்கள் பெரும்பாலும் சரியாக எனக்குத் தோன்றுகின்றது.--நிரோஜன் சக்திவேல் 20:16, 23 நவம்பர் 2008 (UTC)Reply

சொல் - சொற்கள்
நூல் - நூற்கள் - Kanags \பேச்சு 20:18, 23 நவம்பர் 2008 (UTC)Reply

2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்

வணக்கம் நிரோஜன் சக்திவேல்:

நாம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் பற்றி கருத்துக் கோருவோம். மேலும் விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 01:23, 29 டிசம்பர் 2008 (UTC)

பங்களிப்பாளர் அறிமுகம்

வணக்கம் நிரோ, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 08:50, 5 அக்டோபர் 2009 (UTC)Reply

வணக்கம் நிரோ. திசம்பர் 5 - 17 வரை முதற்பக்கத்தில் உங்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம். நன்றி--ரவி 06:56, 6 டிசம்பர் 2009 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:56, 18 பெப்ரவரி 2010 (UTC)Reply

தேவைப்படும் கட்டுரைகள்

வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)Reply

என்னிடம் உள்ள மற்றும் ஆடிய நிகழ்பட ஆட்டங்களின் பட்டியல்

வணக்கம் நிரோசன், மேலுள்ள தலைப்பில் உங்கள் பயனர் பக்கத்தில் நீங்கள் அடிக்கடி இற்றைப்படுத்திவரும் பட்டியல் விக்கிப்பீடியாவில் இருப்பது அவசியம் தானா? இவை உங்கள் பயனர் பக்கத்தில் இருப்பது விக்கிக்கொள்கைக்கு ஏற்புடையதாக இல்லை. அவற்றை உடனடியாக நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 13:29, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

பயனர்கள் பக்கத்திலாவது சுதந்திரம் இல்லையா.. அப்படியானால் விக்கிபீடியாவின் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிரான விக்கிலீக்ஸ் செய்திகள் என்ன ஆச்சு.....--நிரோஜன் சக்திவேல் 21:44, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
இதனைப் பாருங்கள்: விக்கிப்பீடியா:பயனர் பக்கம். மேலும், விக்கிலீக்சிற்கும் விக்கிமீடியாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.--Kanags \உரையாடுக 23:11, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
மன்னிக்கவும் நிரோசன், சிலரது பயனர் பக்கங்களில் இடம்பெற்ற சில தகவல்கள் குறித்து அண்மையில் சில பிரச்சினைகள் வந்தன. அதனையடுத்து அவர்களது தகவல்கள் நீக்கப்பட்டன. நாம் முன்னுதாரணமாக இருக்கக்கூடாது என்பதனாலேயே அவற்றை நீக்கச் சொன்னேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். விக்கியில் உங்கள் பங்களிப்புகளை மீண்டும் எதிர்பார்க்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 22:04, 27 ஆகஸ்ட் 2010 (UTC)

விக்கி மாரத்தான்

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:23, 27 அக்டோபர் 2010 (UTC)Reply

கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள் என்ற பக்கத்தில் தலைப்பு ”கற்ப மூலிகைகள்” என இருக்க வேண்டும். பிற பிழைகளை திருத்தியுள்ளேன். நன்றி.

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்

வணக்கம் நிரோ. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:14, 2 மே 2011 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா திட்டம்






பங்களிப்பு வேண்டுகோள்

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:27, 21 சூலை 2011 (UTC)Reply

திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகோள்

அன்புள்ள நிரோ, நலமா? திரைப்படங்கள் குறித்து தாங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் சில மேம்பாடுகளைச் செய்ய உதவினால் நன்றாக இருக்கும்.

தேவைப்படும் மேம்பாடுகள்:

  • தகுந்த உசாத்துணை / வெளி இணைப்பு தரப்பட வேண்டும். IMDB தரவு உதவும்.
  • கட்டுரை, தகவற்பெட்டியில் அடிக்கடி வரும் பெயர்களுக்கு கட்டுரைகள் உருவாக்க வேண்டும். ஏற்கனவே கட்டுரை இருந்தால், தகுந்த வழிமாற்று உருவாக்க வேண்டும்.
  • விக்கியிடை இணைப்புகள் சேர்க்கவேண்டும்.
  • மூன்று வரிகளுக்குக் குறைவாக உள்ள கட்டுரகளில் (தகவற்பெட்டியில் இல்லாத) பயனுள்ள கூடுதல் தகவல் சேர்க்க வேண்டும்.
  • திரைப்படங்களின் படிமங்கள் கிடைத்தால் இணைக்க வேண்டும்.

இது குறித்த ஒருங்கிணைப்புக்கு, விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள்/ஒழுங்கமைவு பார்க்கவும். நன்றி--இரவி 16:09, 4 பெப்ரவரி 2012 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்






உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புத் திட்டம்


Article request: Transport for London

Hi! Are you interested in starting a stub on en:Transport for London? The Tamil site of the agency is here and it can help you if you are interested in starting it.

Thanks WhisperToMe (பேச்சு) 19:30, 21 ஏப்ரல் 2013 (UTC)Reply

Thank you very much! WhisperToMe (பேச்சு) 03:34, 24 ஏப்ரல் 2013 (UTC)Reply

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், நிரோஜன் சக்திவேல்!

தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

தாங்கள் சிவக்கலப்பு அடையும் நிலை போன்ற சைவ சித்தாந்த கட்டுரைகளை இயற்றுவது குறித்து மகிழ்ச்சி. தங்களுடைய வழிகாட்டல்களை விக்கித்திட்டம் சைவத்திற்கு தர வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:32, 6 மே 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:07, 24 சூன் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் குறுங்கட்டுரைகளை விரிவாக்க உதவி தேவை

வணக்கம் நிரோ, குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில குறுங்கட்டுரைகளை விரிவாக்கி உதவ முடியுமா? பல தரப்பட்ட தலைப்புகள் குறித்து ஆர்வமும் பங்களிப்பு முனைப்பும் உடையோர் தமிழ் விக்கிப்பீடியாவில் வெகு சிலரே. எனவே, கட்டுரைகளைத் துவக்கியோரே மெனக்கட்டால் ஒழிய பல்வேறு தலைப்புகள் முன்னேற்றம் காண்பதில்லை. தற்போது இவ்வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில கட்டுரைகளில் தங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு, கொழும்பு லேக்ஹவுஸ் பத்திரிகை அலுவலகத்தின் குண்டுவெடிப்பு. எனவே, இவற்றை மேம்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம் என்று கருதி இத்தகவலை இடுகிறேன். மற்றபடி, வழமை போல் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் குறிப்பிடத்தக்கமையும் போதிய உள்ளடக்கமும் உள்ள தரமான குறுங்கட்டுரைகளை உருவாக்குவத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 11:24, 12 மே 2014 (UTC)Reply

ஒரு வேண்டுகோள்

வணக்கம் நிரோஜன் சக்திவேல்! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:55, 17 மே 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் நிரோஜன் சக்திவேல்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:11, 30 திசம்பர் 2014 (UTC)Reply

வணக்கம் நிரோசன், நீங்களும் இணைந்து பங்காற்ற வேண்டுகிறேன். நீங்கள் பெயர் பதிந்து வைத்தால் கூட அனைவருக்கும் உற்சாகம் தொற்றும். மீண்டும் உங்கள் நல்வரவையும் படையெடுப்பையும் எதிர்பார்த்து :)--இரவி (பேச்சு) 15:17, 11 சனவரி 2015 (UTC)Reply

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--Kanags \உரையாடுக 05:50, 30 சூலை 2016 (UTC)Reply

தெலுங்குத் திரைப்படங்கள்

வணக்கம் நிரோஜன், நீண்ட காலத்துக்குப் பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மீண்டும் வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. தெலுங்குத் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை உருவாக்கவிருக்கிறீர்களா? தமிழ்த் திரைப்படக் கட்டுரைகள் போன்று தானியங்கியாக உருவாக்க விரும்பினால், ஆலமரத்தடியில் உரையாடி ஒப்புதல் பெற்று எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். தனித்தனியாக ஒரு சில கட்டுரைகளை உருவாக்க விரும்பினால் ஒப்புதல் தேவையில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 01:54, 31 சூலை 2016 (UTC)Reply

வெகு கால இடைவேளைக்குப் பின்னர் மாமன்னர் நான்காம் படையெடுப்பினை நடத்த எத்தனிக்கின்றார் இம்முறை இதுவரை காலமும் எட்டாத எட்டமுடியாதவகையில் படையெடுப்பினை நடாத்த மன்னர் நிரோஜன் எத்தனிக்கின்றார். அனைவரையும் சிறு சிறு படைகள் தமை கூட்டுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது.......--நிரோஜன் சக்திவேல் (பேச்சு) 03:25, 31 சூலை 2016 (UTC)Reply

உங்கள் படையெடுப்பைத் தள்ளிப் போடுங்கள். ஆலமரத்தடியிலோ அல்லது உகந்த பக்கம் ஒன்றில் முதலில் ஒப்புதல் கேட்டு, விக்கி சமூகத்தினரின் முழுமையான ஒப்புதலுடன் தரவேற்றுங்கள். இல்லையேல் படையெடுப்பைத் தடை செய்ய...:)--Kanags \உரையாடுக 03:31, 31 சூலை 2016 (UTC)Reply

புதிது புதிதாக வரையறைகள் கூறுகின்றீர்கள் ,நான் திரைப்படங்கள் குறித்து தனித்தனியே கட்டுரைகள் உருவாக்க நினைக்கின்றேன்..அதற்கென்ன செய்ய வேண்டும்--நிரோஜன் சக்திவேல் (பேச்சு) 03:50, 31 சூலை 2016 (UTC)Reply

தகுந்த மேற்கோள்கள் தாருங்கள். குறுங்கட்டுரைகளாக இல்லாமல் ஓரளவு அடிப்படைத் தகவல்களைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 12:29, 1 ஆகத்து 2016 (UTC)Reply

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அன்புள்ள நிரோஜன்,

நலமா?

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 16:07, 24 மார்ச் 2018 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya