பரசுராம் (2003 திரைப்படம்)
பரசுராம் (Parasuram) என்பது 2003ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். அர்ஜுன் இயக்கி, நடித்த இப்படத்தில், அப்பாஸ், கவுண்டமணி, கிரண் ராத்தோட், காயத்திரி ரகுராம், ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் 2003 மே 30 அன்று வெளியிடப்பட்டது. கதைஆகாஷ் தலைமையிலான ஒரு நிழலுலக பயங்கரவாதக் குழுவானது வேலையில்லாத இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பாக்கித்தானுக்கு அனுப்பி தற்கொலைக் குண்டுதாரிகளாக மாற்றுகிறது. இந்த வழக்கு உதவி காவல் ஆணையர் பரசுராமினம் ( அர்ஜுன் ) ஒப்படைக்கப்படுகிறது. அவர் எப்படி அந்த கும்பலை ஒழிக்கிறார் என்பதே கதை. நடிப்பு
தயாரிப்புஇந்த படம் துவக்கத்தில் அசோகா என்ற பெயரில் சாஜி கைலாஸ் இயக்குவதாகவும், சம்யுக்தா வர்மாவும், அர்ஜுனும் முன்னணி பாத்திரங்களில் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. பின்னர் படைப்பு வேறுபாடுகள் காரணமாக சாஜி படத்திலிருந்து விலகினார், அர்ஜுன் தானே இயக்குநராக பொறுப்பேற்றார்.[1][2] வரவேற்புSify.com, இந்த திரைப்படத்தை "பரிதாபம்" என்று அழைத்தது.[3] இசைஇப்படத்தின் படல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்க, பின்னணி இசையை ரகுமானின் உதவியாளர் பிரவின் மணி அமைத்தார். இதில் ரகுமானின் இசையானது சராசரி ரகமாக கருதப்படுகிறது.[4]
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia