ராஜ்யலட்சுமி
ராஜ்யலட்சுமி சாந்து என்பவர் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.[1] இவர் 1980 களில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். தெலுங்குத் திரைப்படமான சங்கராபரணம் படத்தில் நடித்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டார், இதில் இவர் தனது பதினைந்து வயதில் சந்திர மோகனுடன் கதாநாயகியாக நடித்தார். சங்கரபாரணத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜ்யலட்சுமி, என். டி. ராமா ராவ், நாகேஸ்வர ராவ், ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, சங்கர், மோகன்லால், திலீப், ஜிதேந்திரா, மம்முட்டி, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இந்திய திரைப்படத் துறையின் அனைத்து பகுதிகளிலும் பல முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார். தற்போது இவர் தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் அவ்வப்போது தோன்றுகிறார்.[2] குடும்பம் வாழ்க்கைராஜ்யலட்சுமி 1964 திசம்பர் 18 அன்று ஆந்திராவின் தெனாலியில் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்திலேயே நாடகக் குழுவில் இருந்த தனது தாயுடன் சிறிய நாடகங்களில் நடித்துள்ளார். 1980-இல் சங்கராபரணத்தில் "சாரதா" என்ற பாத்திரத்தில் நடித்தார். 1990-ஆம் ஆண்டில் கே. ஆர். கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு ரோகித் கிருஷ்ணன், ராகுல் கிருஷ்ணன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்துடன் சென்னையிலும், ஹைதராபாத்திலும் வசிக்கிறார். திரைப்படவியல்தமிழ்
தொலைக்காட்சித் தொடர்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia