பறவைகளைப் பிடிக்கும் மரம்
![]() பைசோனியா புரூனோனியானா (Pisonia brunoniana) என்பது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த மரம் ஆகும். இது நிக்டாஜினாசியே குடும்பத்தைச் சார்ந்ததாகும். இத்தாவரம் நியூசிலாந்து, நோர்போக் தீவு, லோர்ட் ஹாவ் தீவு மற்றும் ஹவாய் தீவு போன்ற இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இத்தாவரத்தின் பொதுப்பெயர் பராபரா அல்லது பறவை பிடிக்கும் மரம் ஆகும். மரத்தின் அமைவு![]() காகிதப் பூ குடும்பத்தைச் சேர்ந்த மரம். இது 66 அடி உயரம் வளரக் கூடியது. பல கிளைகளை உடையது. மிருதுவானது. வெளுத்த நிறம் கொண்டது. தடிமனான, பச்சை நிறம் உடைய 25 செ.மீ. நீளம் உடைய இலை. இம்மரத்தின் வரும் பழங்கள் நேராக நிமிர்ந்து முக்கோண வடிவமாக இருக்கும். இதன் மீது அடர்த்தியான இனிப்பான பசை மூடி உள்ளது. இதன் மீது உட்காரும் பறவைகள் பசையில் ஒட்டிக்கொள்கிறது.[1] தப்பிக்க முயற்சிக்கும் போது மேலும் இதன் இறக்கையில் பசை ஒட்டிக்கொண்டு பறவை பறக்க முடியாமல் மாட்டிக் கொள்கிறது. சிறுவர்கள் இம்மரத்தில் ஏறி பறவைகளை பிடித்துக் கொள்கிறார்கள். இம்மரம் ஆஸ்திரேலியாவில் வளர்கிறது. இம்மரத்திற்கு மருத்துவரும் இயற்கையாளருமான வில்லியம் பைசோ என்பவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஹவாய் தீவுகளில் இத்தாவரத்தின் பரவல்நியூசிலாந்தில் இத்தாவரமானது கெர்மாடெக் தீவுகள் தொகுதியில் உள்ள ராவோல் தீவின் கடற்கரையோரக் காடுகளில் காணப்படுகிறது. மூன்று மன்னர்கள் தீவுகள் மற்றும் வடக்குத் தீவுகளில் இத்தாவரம் வாங்காபே துறைமுகத்திலிருந்து மாங்காவாய் வரை வெவ்வேறு இடங்களில் ஆங்காங்கே காணப்படுகிறது. வரலாற்றுரீதியாக, இது கோரமண்டல் தீபகற்பத்தில் ஓக்லாந்துக்கு அருகில் வளர்ந்து வந்தது. தற்போது இத்தாவர வகையானது தீவுகளின் கடற்கரையிலிருந்து சற்று விலகிய பகுதிகளில் குறிப்பாக கொறிப்பனவற்ற தீவுகளில் காணப்படுகின்றன. இத்தாவர வகையானது நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் முற்றிலும் அழிந்து விட்டது என்றே கூறலாம். இத்தாவரத்தின் அகன்ற இலைகளானவை கால்நடை இனங்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படுவதால் இவ்வாறான நிலை உருவாகி இருக்கலாம். ஹவாய் தீவுகளில் இத்தாவரமானது பபாலா கெபாவ் என அழைக்கப்படுகிறது. வறண்ட மற்றும் மிதமான தட்பவெப்பநிலை காணப்படும் பகுதிகளில் இது பரவலாகக் காணப்படுகிறது. ஹவாய் தீவின் பறவை பிடிப்பவர்களால் இத்தாவரத்தின் ஒட்டக்கூடிய பழங்களானவை பறவைகளைப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவர்கள் இவ்வாறு பிடித்த பறவைகளிலிருந்து இறகுகளைச் சேகரித்து பல்வேறு பொருள்களைத் தயாரிக்கிறார்கள்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia