கரியோபிலாலெசு (தாவர வகைப்பாட்டியல்: Caryophyllales) என்பது கற்றாழை, கார்னேசன்கள், அமராந்த்சு ஆகியவற்றை உள்ளடக்கிய பூக்கும் தாவரங்களின் மாறுபட்டும், பன்முகத்தன்மையும் கொண்ட தாவர வரிசையாகும் . இவற்றின் பல இனங்கள் சதைப்பற்றுள்ள தண்டுகளாகவும்,இலைகளைக் கொண்டும் இருக்கின்றன. பீட்டாலைன் (betalain) நிறமிகள், இந்த வரிசையின் தாவரங்களில் தனித்தன்மை ஆகும். கேரியோஃபிலேசியே, மொலுகினேசியே ஆகிய இரு தாவரக்குடும்பங்களில் இந்நிறமிகள் இல்லை. இந்த தாவர வரிசையின், பிற குடும்பங்களிலும் உள்ளன.
வளரியல்பு
மெய்இருவித்திலி இனங்களில், ஏறத்தாழ 6% தாவரங்கள், இந்த தாவர வரிசையின் கீழ் அடங்குகிறது.[2] தற்போது, இவ்வரிசை, 37 குடும்பங்களையும், 749 பேரினங்களையும், 11,620 இனங்களையும் கொண்டுள்ளது.[3]
மார்சு தாவரவியல் பூங்காவிலுள்ள, தென் அமெரிக்காவின் மத்தியப் பகுதியைச் சேர்ந்த கற்றாழை. கற்றாழை ஒரு தாவரக் குடும்பமாகும், இது இந்த தாவர வரிசையின் கீழ் உள்ளது.
APG IV இல் Kewaceae, Macarthuriaceae, Microteaceae, Petiveriaceae ஆகியவை சேர்க்கப்பட்டன.[4]
↑Angiosperm Phylogeny Group (2009). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III". Botanical Journal of the Linnean Society161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x.
↑Angiosperm Phylogeny Group (2016). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV". Botanical Journal of the Linnean Society181 (1): 1–20. doi:10.1111/boj.12385.