2001 இல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 614 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் ஆண்கள் 312, பெண்கள் 302 ஆவார்கள். பாபநாசம் மக்களின் சராசரி கல்வியறிவு 84.39% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 78% விட கூடியதே. பாபநாசம் மக்கள் தொகையில் 11.43% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இவ்வூரில் பாண்டிய அரசர்களால் கட்டப்பட்டு, நாயக்க மரபு அரசர்களால் விரிவாக்கப்பட்ட பழம்பெரும் பாபநாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு வைப்புத் தலமாகும்.
இறைவர் : பாவநாசர், பாபவிநாசகர்.
இறைவியார் : லோகநாயகி, உலகம்மை.
தல மரம் : களா மரம்.
தீர்த்தம் : தாமிரபரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம்.
வழிபட்டோர் : அகத்தியர்.
வைப்புத்தலப் பாடல்கள் :
சம்பந்தர் - பொதியிலானே பூவணத்தாய் (1-50-10), அயிலுறு படையினர் (1-79-1)
அப்பர் - தெய்வப் புனற்கெடில (6-7-6), உஞ்சேனை மாகாளம் (6-70-8).