புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், இந்தியா
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of New and Renewable Energy, India)என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய மூத்த அமைச்சர் ராஜ்குமார் சிங் மற்றும் இணை அமைச்சர் பகவந்த் குபா மற்றும் கிருஷண் பால் ஆவார். இந்த அமைச்சகம் புதிய மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்திகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறிவுசார் சொத்து பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு, ஊக்குவிப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கு பொறுப்பாகும். காற்றாலை மின்சாரம், சிறு புனல் மின் சக்தி நிலையங்கள், உயிரிவளி மற்றும் சூரிய மின் ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இந்த அமைச்சகம் கவனம் செலுத்துகிறது. அமைச்சகத்தின் பரந்த நோக்கம், இந்தியாவின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதும், பயன்படுத்துவதும் ஆகும். அமைச்சகத்தின் தற்போதைய செயலாளர் ஆனந்த் குமார் ஆவார்/[2] அமைச்சகத்தின் தலைமையகம் புது தில்லியில் உள்ள லோதி சாலையில் உள்ளது.[3] அமைச்சகத்தின் 2016-17 ஆண்டு அறிக்கையின்படி, சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் நீர் மின்சாரம் உள்ளிட்ட பல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.[4] பணிகள்
நோக்கம்புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள், செயல்முறைகள், பொருட்கள், கூறுகள், துணை அமைப்புகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சர்வதேச விவரக்குறிப்புகள், தரநிலைகள் மற்றும் செயல்திறன் அளவுருக்களுக்கு இணையாக உருவாக்கி, நாட்டை நிகர அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய நாடாக மாற்றவும், உள்நாட்டில் உருவாக்கப்பட்டவைகளைப் பயன்படுத்தவும். மற்றும்/அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் எரிசக்தி பாதுகாப்பின் தேசிய இலக்கை மேம்படுத்துகிறது.[5] அமைப்புகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia