புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2011
13 ஏப்ரல் 2011 அன்று இந்திய ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.[1] வேட்பாளர்கள்26 மார்ச் 2011 தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை முடிக்கக் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. 30 மார்ச் 2011 வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.[1] மொத்தத்தில், 187 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். யானம் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக பத்து வேட்பாளர்கள் போட்டியிலிருந்தனர். இந்திரா நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ந. ரங்கசாமி (கதிர்காமம் தொகுதியிலும் போட்டியிட்டார், பிரதேச வரலாற்றில் முதல் முறையாக ஒரு வேட்பாளர் இரண்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார்) மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளர் ஏ.கே.டி ஆரோமொகம் என் இருவர் மட்டுமே போட்டியிட்டனர்.[2] வாக்கு எண்ணிக்கை 13 மே 2011 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டது. பிரச்சாரம்போட்டியிடும் கட்சிகளில், இரண்டு பெரிய கூட்டணிகள் இருந்தன. ஒருபுறம், தற்போதைய முதலமைச்சர் வெ. வைத்திலிங்கத்தை ஆதரிக்கும் கூட்டணி இருந்தது. இதில் இந்தியத் தேசிய காங்கிரசு (17 இடங்கள்) தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் (10 இடங்கள்), பாட்டாளி மக்கள் கட்சி (2 இடங்கள்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (1 இடம்) போட்டியிட்டன. தேர்தலில் போட்டியிட்ட மற்றொரு முக்கிய கூட்டணி என்.ரங்கசாமியின் அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் (17 இடங்கள்), அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (10 இடங்கள்), இந்தியப் பொதுவுடைம கட்சி (மார்க்சிஸ்ட்) (1 இடம் ), இந்திய பொதுவுடைமைக் கட்சி (1 இடம்) மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (1 இடம்). மூன்றாவது அணியாக பாரதிய ஜனதா கட்சி தனியாக 20 இடங்களில் போட்டியிட்டது. சுயேச்சை வேட்பாளர்களாக 78 பேர் களத்திலிருந்தனர்.[2] பிரச்சாரத்தில் பல உயர்மட்ட தேசிய அரசியல்வாதிகள் பங்கேற்றனர். இவர்களில் முக்கியமானவர்கள்: சோனியா காந்தி (இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்), ராகுல் காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்), பிரணாப் முகர்ஜி (இந்திய தேசிய காங்கிரஸ் மத்திய அமைச்சர்), நிதின் கட்கரி (பாஜக தலைவர்), சுஷ்மா சுவராஜ் (பாஜக எம்.பி), வெங்கையா நாயுடு (முன்னாள் பாஜக தலைவர்), மு. கருணாநிதி (திமுக, முதலமைச்சர் தமிழ்நாடு ), ஜெ. ஜெயலலிதா (அஇஅதிமுக பொதுச் செயலாளர்) மற்றும் விஜயகாந்த் (தே.மு.தி.க தலைவர்).[2] கட்சிகளும் கூட்டணிகளும்காங்கிரசு கூட்டணி
என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி
தனித்து தேர்தல் கலத்தில் நிற்கும் கட்சிகள்
தேர்தல்810,000 மேற்பட்ட வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கத் தகுதி பெற்றனர்.[2] முடிவுகள்
தொகுதியின் முடிவுகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia