பேச்சு:நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்1இவர் பெயர் கட்டுரையில் கோப்பர்னிக்கஸ் என்று ப் சேர்த்தும், சில இடங்களில் கோபர்நிகஸ் என்று ப் இல்லாமலும், சில இடங்களில் க் இல்லாமலும், சில நி என்னும் தகர நி இட்டும் எழுதப் பட்டுள்ளது. இன்னொரு முக்கியக் கருத்து. தமிழில் மட்டும் அல்லாமல், பொதுவாக யாரும் ஸ் என்று நிறுத்தவே முடியாது. ஏதேனும் ஓர் சிறு உயிரொலி அதன் பின் வந்தே நிற்கும். இதனை நன்கு அறிந்தே தமிழர்கள் குற்றியலுகரம் போன்ற நுட்பமான ஒலியிலக்கணங்களைப் படைத்தனர். க், ச், ட், த், ப் என்று சொல்லி நிறுத்திப் பாருங்கள் ஒலி வரவே வராது. மேலும் அடுத்து வரும் சொல்லுக்காக வாயைத் திறக்கும்பொழுது ஒலி வரும். top என்பதைக் கூறும் பொழுது, இதழ்கள் ஒட்டி இருக்கும்பொழுது ஒலி வராது. ஆங்கிலத்திலேயும், மொழியியலில் இதனை "stop" என்றே கூறுகின்றனர். தமிழில் எழுதும் பொழுது நிக்கோலசு கோப்பர்னிக்கசு என்று எழுதுவது சரியான முறை. இதில் கடைசியில் முடியும் சு என்பது குற்றியலுகரம். எனவே பெரிய ஒலி வேஏறுபாடு ஏதும் இராது. இக்கட்டுரையில் சீராக எல்லா இடத்திலும் நிக்கோலசு கோப்பர்னிக்கசு என்று எழுதலாம் என்று கருதுகிறேன். --செல்வா 01:54, 20 சனவரி 2012 (UTC)
2
3இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் மாத்திரை, இலக்கணம், ஒலிப்பு பற்றி வகுப்பு எடுத்தும், விக்கிப்பீடியா கட்டுரைகளை மாற்றிக் கொண்டிருப்பதை விட விக்கிநூல்களில் கிரந்தமற்ற தமிழ் எழுதுவது எப்படி என்று இலக்கண நூலகள் எழுதுங்கள். பரப்புங்கள். பின்வரும் தலைமுறைக்குப் பயன்படும். படிப்பவர் படித்து விட்டு மனம் மாறி எழுதினால் உங்கள் நோக்கம் நிறைவேற வாய்ப்புண்டு. ஆனால் இப்போது எழுதுபவரை அவரவர் போக்கில் எழுத விட்டால் தான் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிப் பாதையில் செல்லும்.--Booradleyp 17:57, 20 சனவரி 2012 (UTC)
வணக்கம். இங்கு நடக்கும் உரையாடல் குறித்து என்னுடைய சில கருத்துகளைப் பதிய விரும்புகிறேன். செல்வா கடந்த சில நாட்களாகப் பல கட்டுரைகளில் பங்களித்து வருகிறார். பேச்சுப் பக்கங்களிலும் கருத்து தெரிவித்து வருகிறார். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக இப்பேச்சுப் பக்கக் கருத்தும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இப்பக்கம், குறுந்தட்டுத்திட்டத்தில் இருப்பது, குறுந்தட்டுத் திட்டத்தில் உள்ள கட்டுரைகளில் கிரந்தப் பிரச்சினையைக் கொண்டு வர வேண்டாம் என்ற புரிந்துணர்வு உள்ளது குறித்து அவர் அறியாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே, குறுந்தட்டுத் திட்டத்தில் உள்ள ஒரே காரணத்துக்காக அவர் இங்கு கருத்து தெரிவித்திருப்பதாக எண்ணவில்லை. தகுந்த காரணங்களைச் சொல்லி மாற்றலாமா என்று முறையாகவே கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு உள்ளவர்கள் அதைச் சொல்லலாம். தவிர, இதே போன்ற உரையாடல்கள் பல பக்கங்களில் நடப்பது அயரச் செய்தால், பொதுவான ஒரு கொள்கைப் பக்கத்தில் இதனை முன்வைத்து உரையாடுமாறு வேண்டுவதும் முறை. இதையே தான் நான் செல்வாவிடமும் வேண்டுவேன். ஏனெனில், அவரது கருத்தைப் பலர் படிக்காமல் போகலாம். படித்தும் புறக்கணிக்கலாம். ஆனால், திரும்பத் திரும்ப இவற்றை எழுதுவதால் அவரது நேரம் தான் முதற்கண் வீணாகிறது. இந்த நேரத்தில் பல அரிய கட்டுரைகளை அவரால் படைக்க முடியும். அதனால், இந்தக் கருத்தால் குறுந்தட்டுத் திட்டத்துக்கான நேரம் வீணாவதாக நான் எண்ணவில்லை. செல்வா 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். கட்டுரைப் பங்களிப்புகள் போக, அப்போதைய பல பயனர்களுக்கு உந்துதலாகவும் கலைச்சொல்லாக்கத்தில் உதவியாகவும் இருந்துள்ளார். கட்டுரைப் போட்டி சமயத்தில் அதற்கான ஒருங்கிணைப்புகளில் உழைத்துள்ளார். இன்று வரையும் பல மட்டங்களில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்து ஒரு தூதுவராக விளங்கி வருகிறார். எனவே, அவருடைய செயற்பாடுகளால் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி தடைப்பட்டது என்பது போன்ற கருத்துகளுக்கு எனது மறுப்பைப் பதிவு செய்கிறேன். ஒரு திட்டத்தில் பல்வேறு வகையான உரையாடல்கள் திரும்பத் திரும்ப நிகழ்வது எதிர்பார்க்கக்கூடியது தான். இதற்கும் எல்லா விக்கிகளிலும் இருந்தும் எடுத்துக்காட்டு கொடுக்க முடியும். அதையும் தாண்டித் தான் திட்டம் வளர வேண்டும். பெரும்பான்மை வழக்கு, அவரவர் வழக்கு என்பது இலகுவான தீர்வாகத் தோன்றினாலும் தமிழ்நாட்டு வழக்கு, இலங்கை வழக்கிலும் கூட நாளை இது ஒரு பிரச்சினையாகலாம். தற்போது பல கட்டுரைகளில் இலங்கை வழக்கு முதன்மையாகவும் இணையாகவும் உள்ளது. அதையும் கூட தமிழ்நாட்டுத் தமிழர் சொல்வது போல் மாற்று என்று நாளை பிரச்சினை வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. (புன்னியாமீன் கவனிக்க) ஆனால், இன்று வரை இந்த விசயத்தில் நல்ல ஒரு புரிந்துணர்வைக் கொண்டுள்ளோம். அதே போன்ற புரிந்துணர்வை மற்ற விசயங்களிலும் எட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி--இரவி 19:27, 20 சனவரி 2012 (UTC)
3//இது நடக்குமென்று தெரிந்து தானே ஜூலை உரையாடலின் போதே கிரந்தமகற்றல்/சேர்த்தல் செய்ய வேண்டாமென்று முடிவு செய்தோம். நீங்களும் ஒப்புக் கொண்டீர்கள்.// இப்போதும் ஒப்புக் கொள்கிறேன். யாரும் வலிந்து மாற்றினால் கண்டிப்பாக எதிர்ப்பேன். ஆனால், கருத்து சொல்லும் உரிமையும் அதைக் குறித்து உரையாடுவதும் விக்கிக்கொள்கைக்கு உட்பட்டதே. சோடாபாட்டில், கிரந்தம் என்பதை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, விக்கியில் ஏற்படக்கூடிய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் இதை எப்படி அணுகுவது என்று சிந்தித்துப் பார்க்கிறேன். பன்னாட்டு வழக்குகள், ஆங்கில ஒலிபெயர்ப்புகள், கலைச்சொல் தெரிவுகள் என்று இது எந்த ஒரு பிரச்சினையாகவும் இருக்கலாம்.
இந்த அடிப்படையிலேயே என்னுடைய பரிந்துரையை முன்வைத்தேன். ஏற்கனவே கிரந்தம் பற்றிய உரையாடல்கள் முடிவின்றி ஒரு புரிந்துணர்வுடன் பொதுப் பரிந்துரையாக உள்ளதை நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளதை ஏற்றுக் கொள்கிறேன். இந்த பொதுப் பரிந்துரையைச் சுட்டிக் காட்டி முறையான மறுப்பைத் தெரிவித்து விட்டிருந்தால் இந்த உரையாடல் முடிந்திருக்கும். அதற்குப் பிறகும் செல்வா தனது கருத்துகளைத் தொடர்ந்திருந்தார் என்றால், அதை எப்படி அணுகுவது என்று சிந்திக்கலாம். ஆனால், இந்த அணுகுமுறையைத் தாண்டி ஒரு பயனரின் செயல்பாடுகளைத் தனிப்பட்ட முறையில் குறை சொல்வது போல் உரையாடல் நீண்டது விரும்பத்தக்கதாக இல்லை. சில எடுத்துக்காட்டுகள்: //வேறெந்தப் பணிகளிலும் உதவிக்கு வராமல், ஒரு கட்டுரையையும் உரை திருத்த உதவாமல் ஏழு ஆண்டுகளாக கிரந்தத் தலைப்புடன் இருந்த கட்டுரையில் கிரந்தம் களைய வந்திருக்கிறீர்கள்.// ஒரு பயனர் விக்கிப்பீடியாவில் எல்லா வகையான பங்களிப்புகளையும் அவர் விரும்பியவாறு நல்கலாம். கண்டிப்பாக, பெரும்பாலானோர் பங்கேற்கும் திட்டத்தில் பங்கேற்கத் தான் வேண்டும் என்றில்லை. //நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் எனும் கட்டுரை மார்ச்சு 5 2004 அன்று Mayooranathan அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 200க்கு மேற்பட்ட திருத்தங்களைக் கண்டுள்ளது. இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின் தலைப்பு தொடர்பான பிரச்சினையைப் பெரிது படுத்துவது ஏனென்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இதுவரை ஏன் இந்த இத்தவறுகள் கண்டறியப்படவில்லை? குறுந்தகடு திட்டத்திற்கு பாதிப்பாக இருந்தால் தலைப்பு மாற்றத்தை விட்டுவிடுவதே சிறந்தது. ஏனைனில் ஏழு ஆண்டுகள் காட்சிப்படுத்தப்பட்ட நேரத்தில் காணப்படாத தவறு இப்போது பெரிது படுத்தப்படும் போது இது தேவையற்ற சந்தேகங்களையே தோற்றுவிக்கும்// 2004ல் தொடங்கிய கட்டுரையில் இப்போது மட்டுமல்ல 3004ல் கூட வந்தும் திருத்தங்கள் சொல்லலாம். அது விக்கி கொள்கைக்கு உட்பட்டதே. இதில் சந்தேகப்பட என்ன இருக்கு? தமிழ் விக்கிப்பீடியாவில் உரை திருத்துவோர் குறைவே. பல கட்டுரைகளில் பிழை மலிந்துள்ளது. இன்னும் பல ஆண்டுகள் கழித்துத் தான் பிழைகள் முதல் முறையாக காணப்பட்டு களையப்படும். இங்கு கிரந்தம் ஆதரிப்போர், எதிர்ப்போர் "நீங்கள், நாங்கள்" என்று ஏதும் கட்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பக்கத்தில் ஆதரவாகவும் மற்றொரு பக்கத்தில் எதிராகவும் உள்ள தெளிவற்ற நிலையே உள்ளது. //இரவி, குறுந்தகடு திட்டத்தில் தற்போது வேலை செய்வோர் தான் தங்கள் நேரம் வீணாகிறதா இல்லையா என்று சொல்ல முடியும். சொல்லவும் செய்து விட்டோம். இங்கு திட்டத்தில் பணி புரியும் ஐந்து பேர் சொல்லி விட்டனர் செல்வாவின் இந்த செயல்பாடு திட்டத்திலிருந்து எங்களை திசை திருப்பியுள்ளதென்று. // எப்படி விக்கியூடகத் திட்டமிடலில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது அந்தந்த திட்டங்களில் செயல்படுபவர்களின் பொறுப்பு, மற்றவர்களின் பங்களிப்புகளைக் கட்டுப்படுத்தக்கூடாது என்கிறோமோ, அதே போல் இதையும் கருதலாம். குறுந்தட்டுத் திட்டம் நடைபெறுவதாலேயே மற்ற பயனர்கள் தங்கள் வழமையான கருத்து தெரிவிக்கும் பங்களிப்பை நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. மற்றபடி, //பல கிரந்தத்தோடு எழுதி வந்த இத்தனை பேர் விக்கிக்கு வந்த பின்னர் கிரந்தம் குறைப்போம், பிறர் எழுதினால் எழுதட்டும் என்று மாறியிருக்கிறோம். // நானும் இந்த வகை தான். என்னுடைய தனிப்பட்ட வலைப்பதிவுகளில் கிரந்தம் தவிர்க்கிறேன். விக்கிப்பீடியாவில் இயன்றவரை தவிர்க்கிறேன். வலிந்து கிரந்தம் நீக்குவதில்லை. குறிப்பாக, பிற கட்டுரைகளை உரை திருத்தும் போது. என்னைப் போன்று பலரும் உள்ளனர். அவர்களில் ஒரு சிலராவது செல்வா போன்றோர் சொல்லிய கருத்துகளைச் சீர் தூக்கிப் பார்த்து முடிவு செய்தவர்கள். செல்வாவின் வழமையான செயற்பாடுகளை அறிந்தும், தங்கள் நடையிலேயே வழக்கமாக கிரந்தோ கலந்தோ கலக்காமலோ எழுதுவோரும் விக்கிப்பீடியாவில் உள்ளனர். எனக்குத் தெரிந்து வினோத் மட்டுமே கிரந்தப் பிரச்சினையால் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து வெளியேறியவர். அவர் ஒருவர் மட்டுமே தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வெளியேவும் தமிழ் வழி அறிவு சார் செயல்பாடுகளில் ஈடுபடுகிறவர். "தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த ஒழிப்பு" என்று பூதம் காட்டும் பல பேரிடம் "நீங்கள் கிரந்தம் கலந்து உங்கள் நடையிலேயே எழுதுங்கள். அதை மற்றவர்கள் நீக்காமல் இருக்க நான் பொறுப்பு" என்று உறுதி கொடுத்து கூட அழைத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் ஒரு கட்டுரையைக் கூட எழுதியது இல்லை. விக்கிப்பீடியாவுக்கு வெளியேவும் கட்டற்ற அறிவு சார் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. "சமூகம் ஒரு சாக்கடை, நான் இறங்கி சுத்தம் செய்ய மாட்டேன்" என்று நொண்டிச் சாக்குச் சொல்லி விட்டு மேலும் துப்பி விட்டுப் போகிறாவர்கள் மாதிரியே, தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க சோம்பல்படுகிறவர்களுக்கு, விரும்பாதவர்களுக்கு கிரந்தம் ஒரு வசதியான சாக்குப் போக்காக இருக்கிறது. எனவே, நான் இது போன்ற முறையீடுகளைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கிரந்தம் தொடர்பான உரையாடல்கள் அவ்வப்போது எழுந்து அடங்குவதால் தமிழ் விக்கியின்வளர்ச்சி தடைபடுவதாகவும் எண்ணவில்லை. விக்கி போன்ற பொதுத் திட்டத்தில் இதுவும் ஒரு பகுதி. இங்கு கிரந்தம் வேண்டுமா வேண்டாமா என்பதை விட எந்த ஒரு பிரச்சினையையும் எப்படி அணுகுகிறோம் என்பதே முக்கியம். . --இரவி 22:19, 20 சனவரி 2012 (UTC) 4//இங்கு கிரந்தம் ஆதரிப்போர், எதிர்ப்போர் "நீங்கள், நாங்கள்" என்று ஏதும் கட்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பக்கத்தில் ஆதரவாகவும் மற்றொரு பக்கத்தில் எதிராகவும் உள்ள தெளிவற்ற நிலையே உள்ளது.// இன்று இங்கு நடந்த உரையாடல்களே யார் எதை விரும்புகிறார்கள் என்று தெளிவாகச் சொல்கின்றன. கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலோனோர் அவரவர் விருப்பபடி எழுத விடலாம் என்று சொல்லிவிட்டோம். இதனை மதித்து அடுத்து மற்ற கட்டுரைகளில் இருந்து விட்டுப் போகிறது என்று விட்டு விடுவீர்களா?. வலிந்து திணிப்பதில்லை என்று சொல்கிறீர்கள். இந்த உரையாடலை பொதுவான பரிந்துரைக்கு அடித்தளமாக்கி “எழுதுவோர் எழுதட்டும்” என்று விடப்போவதில்லை. மீண்டும் மீண்டும் ஏதேனும் ஒரு கட்டுரையில் போய் கிரந்தம் அகற்றல் முயற்சி தான் நடக்கப் போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை. இவ்வளவு பேரிடம் எதிர்ப்பிருக்கிறது. ஒரு ஆறு மாத காலம் கிரந்தமகற்றச் சோல்லி உரையாடவேண்டாமென யாரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. எதிர்ப்போர் சலிப்புத் தட்டி ஏதேனும் செய்யுங்கள் என்று விட்டுவிடும் வரை இது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. //குறுந்தட்டுத் திட்டம் நடைபெறுவதாலேயே மற்ற பயனர்கள் தங்கள் வழமையான கருத்து தெரிவிக்கும் பங்களிப்பை நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது.// இது தான் சிக்கலின் அடிப்படையே. பலருக்கு விக்கியில் பல வேலைகள் உள்ளன. சிலருக்கு கிரந்தமகற்றலே வழமையான பணியாக உள்ளது. எதிர்ப்பவர் ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப்பக்கத்திலும் வந்து வாதம் செய்ய இயலாதிருப்பதை பயன்படுத்தி கிரந்த அகற்றம் நடக்கிறது இங்கே. இக்கட்டுரை தற்செயலாக குறுந்தட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இங்கு அனைவரும் எதிர் கருத்து சொல்ல வந்து விட்டோம். பிற கட்டுரைகளில் தொடர்ச்சியாக வந்து நீக்காதீர்கள் நீக்காதீர்கள் என்று கருத்து சொல்லிக்க கொண்டிருக்க எங்களால் இயலாது. கிரந்தம் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் விக்கியில் பிற விருப்புகள் கொண்டுள்ளோம். இத்திட்டம் வேலை செய்ய ஆளின்றி இருமுறை நின்று போனது. இப்போது சிலர் தாமாக முன்வந்து அதை எடுத்துச் செய்து கொண்டிருக்கும் வேளையில், வந்து ஒவ்வொரு கட்டுரையாக மறுப்பு தெரிவித்துக் கொண்டிரு என்றால் என்ன செய்வது?. இழுத்துப் போட்டு செய்ய முன்வந்தோர் இவ்வாறு தொடர்ச்சியாக ஒரே சண்டையைப் பிடிவாதமாகப் போட்டுக் கொண்டிருக்காமல் இருப்பதால் தான் திட்டம் முன்னேறுகிறது. திட்டமும் நடைபெறாது விக்கியும் வளராது; கிரந்த உரையாடல் தான் நடந்து கொண்டிருக்கும். இன்னும் சில மாதம் நானும் இதைத் தொடர்ந்து செய்யலாம் என இப்போது நினைக்கிறேன். கிரந்தமகற்றலை எதிர்ப்பதே வழமையாகக் கொண்டு உரையாடுகிறேன். அப்படிச் செய்தால் தான் இந்த உரையாடல்களைக் குறைக்க இயலும். //"நீங்கள் கிரந்தம் கலந்து உங்கள் நடையிலேயே எழுதுங்கள். அதை மற்றவர்கள் நீக்காமல் இருக்க நான் பொறுப்பு" என்று உறுதி கொடுத்து கூட அழைத்திருக்கிறேன்.// இதே உறுதியை இங்கு எங்களுக்குத் தாருங்களேன். எவ்வளவு எதிர்ப்பிருக்கிறது என்று இப்போது உங்களுக்குத் தெரிந்து விட்டது. இருப்பதை மாற்ற வேண்டாமென்று பலரும் கருதுகிறார்கள் என்று தெளிவாகிவிட்டது. இதை இப்படியே ஏன் விட்டு விடக்கூடாது. மீண்டும் இன்னொரு கட்டுரையில் இதே உரையாடலைத் தொடங்கி அங்கும் எதிர்ப்போர் வந்து கருத்து தெரிவிக்க வில்லையெனக் கூறி கிரந்தமகற்றுவது அறமா? //கிரந்தம் தொடர்பான உரையாடல்கள் அவ்வப்போது எழுந்து அடங்குவதால் தமிழ் விக்கியின் வளர்ச்சி தடைபடுவதாகவும் எண்ணவில்லை.// ஏனெனில் கிரந்தமகற்றலை எதிர்ப்போர் பேசி நீட்டிப்பதை விடப் பல்லைக்கடித்துக் கொண்டு கிரந்தமகற்றலைத் தொழிலாகக் கொண்டவர் செய்துவிட்டுப் போகட்டும், நமக்கு வேறு வேலை இருக்கிறது என்று பொறுத்துப் போவதே. இதைப் பயன்படுத்தியே கட்டுரை கட்டுரையாக உரையாடல் நடக்கிறது. இணக்க முடிவு இல்லையென்பது அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த ஒன்று. பின் எதற்காக கட்டுரை கட்டுரையாகப் போய் புதிய உரையாடல்கள்?. இன்று பலரது கருத்து தெளிவாகத் தெரிகிறது. சரி இனி இந்த உரையாடல்கள் வேண்டாமென்று சில மாதங்களாவது தவிர்க்க முன்வருகிறீர்களா?. குறைந்த பட்சம் குறுந்தட்டுத் திட்டம் முடியும் வரையாவது மீண்டும் மீண்டும் கிரந்தம் பற்றி பேசுவதை நிறுத்தி அவரவர் விருப்புப்படி எழுதலாம் என்று விடலாமே?--சோடாபாட்டில்உரையாடுக 23:23, 20 சனவரி 2012 (UTC) சோடாபாட்டில், //சிலருக்கு கிரந்தமகற்றலே வழமையான பணியாக உள்ளது.// நீங்கள் பெயர் குறிப்பிடாமல் விட்டிருக்கும் அத்தனை பேரும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அன்றும் இன்றும் தொடர்ந்து பல்வேறு வகைகளில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பவர்களே. கிரந்தத்தை நீக்குவதை மட்டுமே வேலையாக கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவதற்கு என் மறுப்பைப் பதிவு செய்கிறேன். //இதே உறுதியை இங்கு எங்களுக்குத் தாருங்களேன். // தருகிறேன். வலிந்து மாற்றாமல் இருக்கத் தான் உறுதி தர முடியும். கொள்கைப் பக்கத்தில் கூட உரையாடவே கூடாது என்று உறுதி தருவதற்கு விக்கி நடைமுறைக்கு உட்பட்டுச் சாத்தியம் இல்லை. //இதைப் பயன்படுத்தியே கட்டுரை கட்டுரையாக உரையாடல் நடக்கிறது. இணக்க முடிவு இல்லையென்பது அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த ஒன்று. பின் எதற்காக கட்டுரை கட்டுரையாகப் போய் புதிய உரையாடல்கள்?// ஒரு கட்டுரையில் மாற்றம் செய்வது என்றால் அதன் உரையாடல் பக்கத்தில் எழுதுவது தான் முறை. இதில் முறைகேடாக ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இது அனைவருக்கும் நேர இழப்பாக இருப்பதால், இந்தப் பிரச்சினையை மாறுபட்டு அணுகுமாறு செல்வாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். செல்வாவின் மறுமொழியை எதிர்பார்த்து சற்று பொறுமை காக்குமாறு வேண்டுகிறேன். //இத்திட்டம் வேலை செய்ய ஆளின்றி இருமுறை நின்று போனது. இப்போது சிலர் தாமாக முன்வந்து அதை எடுத்துச் செய்து கொண்டிருக்கும் வேளையில், வந்து ஒவ்வொரு கட்டுரையாக மறுப்பு தெரிவித்துக் கொண்டிரு என்றால் என்ன செய்வது?. இழுத்துப் போட்டு செய்ய முன்வந்தோர் இவ்வாறு தொடர்ச்சியாக ஒரே சண்டையைப் பிடிவாதமாகப் போட்டுக் கொண்டிருக்காமல் இருப்பதால் தான் திட்டம் முன்னேறுகிறது. திட்டமும் நடைபெறாது விக்கியும் வளராது;// மீண்டும் மீண்டும் குறுந்தட்டுத் திட்டத்துடன் இதனை முடிச்சிடுவது சலிப்பூட்டுகிறது. சோடாபாட்டிலுக்கும் நேரத்தை வீண்டிப்பதாகக் கூறும் அனைவருக்கும் பணிவுடன் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன்: 2010ல் இருந்த தமிழ் விக்கிப்பீடியா வானத்தில் இருந்து நேராக வரவில்லை. 2003 முதற்கொண்டு பலரது உழைப்பையும், நேரத்தையும், நன்னோக்கையும் செலுத்தியே இந்த நிலைக்கு வந்துள்ளது. இதில் கிரந்த ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்ப்பாளர்கள் அனைவரும் அடக்கம். தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தைக் குலைத்தேனும் தமிழை வளர்க்க இங்கு யாரும் நினைக்கவும் இல்லை. எனவே, சிலர் மட்டுமே நேரத்தைச் செலவிட்டு விக்கியை வளர்க்க முனைவதாகவும் மற்றவர்கள் வேலை வெட்டியின்றி கிரந்த மாற்றங்களில் ஈடுபடுவதாகவும் நினைக்க வேண்டாம். நன்றி--இரவி 23:49, 20 சனவரி 2012 (UTC) Granthification / DegranthaficationI dont want to get started into reasoning, most of you are probably more knowledgeable on language. To sum up my point on grantha issue, proper nouns, other language words *must* be written how its written by common man. Wikipedia should not be used as a propoganda tool (even if the propoganda promotes technical correctness in using a language which is spoken by millions). Such propoganda must be done outside Wikipedia. I respect editors preference of usage, which is why am not into editing pages making it to use grantha / make it void of it. As for the CD project is concerned, Back in july when we discussed about content issues, the following were discussed and agreed.
I dont want to get into content issues which is not related to me, I am already pained to see CD project was stopped once and 1 month of my work went waste. If this comes in the middle of CD project,please let me know in advance, I would not start any work(I spent few hours to restart yesterday, but that can die!) so I can spend my time in a better way than working for something that wont happen. (There are things beyond CD project which needs my time even in Tamil Wikipedia). ஸ்ரீகாந்த் 17:01, 20 சனவரி 2012 (UTC) வேண்டுகோள்கடந்த சில நாட்களில் குறுந்தட்டுத் திட்டம் நல்ல வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்திருந்த வேளையில் மனதில் தைக்கும் நெருஞ்சியென மறுபடியும் கிரந்தமகற்றல் பிரச்சனை குறுந்தட்டுக் கட்டுரையில் விவாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. இவ்விவாதம் நமது கவனத்தைத் திசை திருப்புவதாகவும் நம் ஆற்றலைக் குறைப்பதாகவும் நேரத்தை விழுங்குவதாகவும் அமையாதா? நான் கடந்த வருடம் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் துவங்கிய போது,விக்கிப்பீடியா ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதைக் கண்டு உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன். நாளடைவில் புரிந்து கொண்டேன். விக்கிமீடியாவின் நோக்கம் கட்டற்ற அறிவை வருங்காலத் தலைமுறைக்கு அவர்களுக்குப் புரியும் வகையில் பாதுகாத்து வைப்பது தானே? விக்கிப்பீடியாவில் இன்று பங்களித்துக் கொண்டிருக்கிற யாரும் மரணத்தை வென்றவர் அல்லரே, நமது காலத்திற்குப் பின் வரும் தலைமுறை எப்படி இருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்? ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுக்கு தமிழ்ப் பெயர் தந்து வழிமாற்று தந்திருப்பது போன்ற நிலை கூட இங்கு ஏற்படலாம். யார் தான் அறிவார்? மாற்றம் என்பதே மாறாதது. தனிப்பட்ட வகையில் நான் தனித்தமிழையே விரும்புபவன். ஆனால் எல்லோரும் அதையே விரும்ப வேண்டும் என்று நான் வற்புறுத்தினால் அஃது அறிவுடைமை ஆகாதன்றோ ? கிரந்தத்தை யாரும் தமிழ் விக்கிப்பீடியாவில் வலியப்புகுத்தவில்லையே! பயன்படுத்தும் கட்டாயம் வரும் போதே பயன்படுத்துகிறார்கள். ஒரோவிடத்து “இது மாதிரியான விவாதங்களில் காலங்கழிப்பதை விடுத்து எறும்பு பற்றி 3 வரி எழுதலாம்” என்று ஒரு பயனர் உரையாடலில் கூறியது என் நினைவுக்கு வருகிறது. கிரந்தமகற்றல் விவாதம் போன்றவை பக்குவமில்லாத புதுப்பயனர்களை இங்கிருந்து அனுப்பி விடக்கூடியது. இங்கிருந்து சென்றவர்கள் நம்மைப் பற்றி அவதூறு பரப்பிக் கொண்டிருக்கும் நிலையையும் உண்டாக்கி விடும். பேராசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தைக் கண்டு மகிழும், மதிப்பு வைத்திருக்கும் அதே வேளையில் அதே நுண்மாண் நுழைபுலம் குறுந்தட்டுத் திட்டப்பணிகட்குத் தடங்கலாய் அமைந்து விடக்கூடாதே என்ற அச்சமும் உண்டாகிறது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 19:34, 20 சனவரி 2012 (UTC)
இங்கே இருப்பது அனைத்தையும் வாசித்து முடிக்கவே நேரம் போய் விட்டது. இப்படியான உரையாடல்கள் சிலசமயம் முடிவின்றிப் போய்க் கொண்டிருக்கின்றதும் உண்மையே. நான் முன்னர் எழுதும்போது கிரந்தம் கலந்து எழுதுவதுண்டு. அப்படி எழுதாவிட்டால் நன்றாக வராததுபோல் ஒரு நினைப்பு. ஆனால் பின்னர் புரிந்துகொண்டு முடிந்த வரையில் கிரந்தம் தவிர்ப்பேன். ஆனால் எல்லோரும் அப்படி எடுப்பதில்லை. இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்காகவே பல புதுப் பயனர்கள் தொடர்ந்து பங்களிக்காமல் போய் விடுகின்றார்கள் என்பதும் உண்மையே. என்னிடம் சிலர் ""தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தமிழைப் பார்க்கவே பயமாக உள்ளது, எப்படி எழுதுவது?" என்று கேட்டிருக்கின்றார்கள். "நீங்கள் உங்கள் முறைப்படி எழுதுங்கள். மற்றவர்கள் திருத்துவார்கள்." என்று கூறியிருக்கின்றேன். ஆனாலும் இது ஒரு வித தயக்கத்தைப் பலருக்கு கொடுப்பதும் உண்மையே. அதேபோல்தான் இலங்கைத் தமிழ், தமிழகத் தமிழ் பிரச்சனையும். நான் இங்கே பல இலங்கைத் தமிழர்களிடம் விக்கி பரப்புரை செய்தபோது, தாங்கள் நினைக்கும் சொற்கள் இங்கே காணோமே என்றார்கள். "நாங்கள் பயன்படுத்தியது சரியான தமிழ் இல்லையாம், அதனால் சரியான தமிழை பயன்படுத்தக் கற்றுக் கொள்வோமே" என்று கூறியிருக்கின்றேன். ஆனால் அனைவரும் அந்தப் பதிலில் திருப்தியடைவதில்லை என்பதும் உண்மையே. நான் பல இடங்களில் அடைப்புக் குறிக்குள் ஏனைய சொற்களைக் கொடுத்திருக்கின்றேன். பல சமயங்களில் சரியாக புரிந்து கொள்ளப்படுமா என்ற சந்தேகத்தில், அல்லது தேடுபவர்களுக்கு கிடைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் ஆங்கிலச் சொற்களைக் கூட அடைப்புக் குறிக்குள் கொடுப்பேன். மாற்ற விரும்புபவர்கள் மாற்றட்டுமே என்று விட்டு விடுவேன். மேலே கருத்துக்கள் வந்திருப்பதுபோல், எழுதுபவர்களைத் தமது பாணியில் எழுதவிடலாம். அது தவறெனக் கருதினால் அவர்களிடம் சொல்லலாம். அவர்கள் ஏற்றுக் கொண்டு எழுதினால் நல்லது. அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவர்களை அவர்கள் போக்கில் விடுவதே நல்லதென்று தோன்றுகின்றது. இங்கே இதுபற்றிய கருத்துத் தெரிவித்திருப்பவர்கள் அனைவருமே முடிந்தளவில் கிரந்தம் தவிர்த்து எழுதுபவர்கள் என்றே தோன்றுகின்றது. எனவே குறுந்தகட்டுத் திட்டத்தில் உள்ள இந்தக் கட்டுரையில் இப்போது இதைப்பற்றி பேசிக் கொண்டிராமல், தற்போதுள்ள தலைப்பையே வைத்துக்கொண்டு, விரும்பினால் அடைப்புக் குறிக்குள் கிரந்தமற்ற சொல்லைக் கொடுத்துவிட்டு, வேலையைத் தொடர்வதே நல்லதென்று தோன்றுகின்றது. இதை எழுதி முடிக்கையில் என் மனதில் தோன்றுவது 'இந்த நேரத்தில் அந்த ஈழை நோய் கட்டுரையின் உரை திருத்தத்தை செய்திருக்கலாமோ' என்பதுதான்.--கலை 21:58, 20 சனவரி 2012 (UTC)
மணியன், கொஞ்சம் deja vu தான். கொஞ்சம் புதிய வூ :) . இதற்கு முன்பு கிரந்தம் வேண்டும் என்று விடாப்பிடியாக உரையாடிய பலர் தமிழ் நலத்தையும், மரபையும் பேணாது வலிந்து கிரந்தம் வேண்டியவர்கள். வினோத் தவிர மற்றவர் யாரும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பெரிய பங்களிப்பையும் நல்கவில்லை. சோவியத் யூனியனை சோவியத் ஒன்றியம் என்று கூட எழுதக்கூடாது வாதிட்டுள்ளனர். ஆனால், தற்போதைய சூழல் அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. அனைவரும் தமிழ் விக்கிக்கு நன்கு பங்களிப்பவர்கள். கிரந்தம் விடுப்பவர்களை எதிர்ப்பதில்லை. சோடாபாட்டில் உட்பட பலரும் தங்கள் கட்டுரைகளிலும் இயன்ற அளவு கிரந்தம் தவிர்த்து எழுதுகிறார்கள். ஆனால், இதற்கு மேலும் ஒவ்வொரு இடத்திலும் கிரந்த எதிர்ப்பு / ஆதரவு உரையாடல் மேற்கொள்வது அயர்ச்சியாக உள்ளதாக உணரப்படுவது நடைமுறைச் சிக்கல். இந்தச் சூழலை ஏற்றுக் கொண்டு கிரந்தப் பயன்பாடு குறித்து ஏற்கனவே உள்ள புரிந்துணர்வை எப்படி திறம்பட நடைமுறைப்படுத்துவது எப்படி என்று சிந்திக்க வேண்டும். இந்திய-இலங்கை வழக்குப் பிரச்சினை இரு நாட்டவரிடையே உள்ள நட்புணர்வால் இலகுவாகக் கையாளப்படுகிறது. ஆனால், கிரந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை, உள்ளது உள்ளபடியே என்பது குறுந்தட்டுத் திட்டத்துக்கான புரிந்துணர்வாக இருந்தாலும், அதில் இல்லாத கட்டுரைகளிலும் அத்திட்டத்துக்குப் பின்பும் இந்தச் சிக்கல் மீண்டும் எழவே வாய்ப்பு உண்டு. தத்தம் கட்டுரைகளில் கிரந்தம் விடுத்து எழுத உரிமை இருக்கிறது என்பதை நாம் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும், நடைமுறையில் அது அவ்வளவு இலகு அன்று. தமிழ்நாட்டில் உள்ள பிரபலங்கள் பெயர்கள் உட்பட பல பெயர்களும் தற்போது கிரந்த மயமாகவும் ஆங்கில மயமாகவும் உள்ளது. கிரந்தம் கொண்டு எழுதினால் தான் பொருளே புரியும் என்போரும் உள்ளனர். எனவே, செல்வாவோ மற்ற யாருமோ தாங்கள் தொடங்கும் கட்டுரைகளில் கிரந்தம் விடுத்து எழுதினால் கூட அவை காக்கப்படும் என்பதற்கு உறுதி இல்லை. எப்படி கிரந்தம் அகற்றுவதற்கு எதிர்ப்பு உள்ளதோ அப்படியே கிரந்தம் விடுத்து எழுதுவதற்கும் எதிர்ப்பு இல்லாதவரை இந்தச் சமநிலையின்மையும் புரிந்துணர்வை நடைமுறைப்படுத்தும் சிக்கலும் தொடரும். இந்த அடிப்படையிலேயே கிரந்தப் பயன்பாடு குறித்த புரிந்துணர்வு உரையாடலை இன்னும் தெளிவான எடுத்துக்காட்டுகள், வழிகாட்டுகளுடன் மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். // விக்கிப்பீடியாவின் நோக்கம் பாமர மக்களுக்கு அறிவை பரப்புவதுதான்.// இல்லை. கட்டற்ற அறிவைப் பரப்புவது தான். ஆங்கில விக்கிப்பீடியாவின் பல கட்டுரைகள் பல்கலையில் படித்தவருக்குக் கூட புரியாது. எனினும், அறிவுச் செழுமையை முன்வைத்து அவர்கள் எழுதுகிறார்கள். புரியாதவர்கள், அகரமுதலிகளைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ள முனைகிறார்கள். இதே, தமிழில் ஒரு துறை சார் கட்டுரையில் இதே போன்று ஒரு கட்டுரையில் தக்க கலைச்சொற்களுடன் எழுதினால், புரியவில்லை என்ற கூப்பாடே வருகிறது. //இதில் தனித்தமிழ் என்று ஒரு சாரார் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதாக ஆக்குவதும் இந்தக் கொள்கைக்கு எதிரானதாகும். // தனித்தமிழ், தூய தமிழ், கிரந்தம் அற்ற தமிழ் ஆகியவற்றுக்கான எதிர்ப்பு பெரும்பாலும் அடையாள அடிப்படைச் சிக்கலே. புரியவில்லை என்று பெரும்பாலும் யாரும் சொல்வதில்லை. தனித்தமிழ் சிலருக்குப் புரியாது என்கிற அதே வாதம், ஆங்கிலமோ மற்ற மொழியோ கலந்த நடை வேறு சில சாராருக்குப் புரியாமல் இருக்க வாய்ப்புண்டு என்பதையும் காணலாம். குறிப்பாக, தமிழ் வழியத்தில் பயிலும் மாணவர்கள், ஆங்கிலம் முதன்மை மொழியாக இல்லாத நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு இந்தப் பிரச்சினை வரலாம். "தூய தமிழில் எழுத வேண்டுமா என்று நண்பர்கள் தயங்குகிறார்கள்" என்று சூரியா கூறினார். எது தூய தமிழ் என்பதே இங்கு ஆளுக்கு ஆள் மாறுகிறது. "ஹைகோர்ட் செசன்ஸ் ஜட்ஜ் தீர்ப்பு வழங்கினார்" என்று கூட தினமலர் செய்தி வெளியிடுகிறது. "மூவி ஃபென்டாஸ்டிக்" என்று ஒரு தமிழ் வலைப்பதிவர் எழுதக்கூடும். "ஆசம். ஸ்ருதி இன்னும் இம்ப்ரூவ் பண்ணனும்" என்று விசய் தொலைக்காட்சியில் பேசுகிறார்கள். இவர்களைப் பொறுத்த வரை இது பாமரரும் புரிந்து கொள்ளும் தமிழ். "உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்", "திரைப்படம் அருமை" என்பது போல் தான் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என்று சொன்னால் கூட தங்களால் அப்படி எழுத இயலாது என்போர் உள்ளனர். தெரிந்தாலும் எழுத மாட்டேன் என்போர் உள்ளனர். நீதிமன்றம் என்பதற்குப் பதில் அறமன்றம் என்பது தூய தமிழ்ச் சொல்லாக இருக்கும் என்போர் சிலர். இதற்கு அடுத்த நிலையாக எழுத்துகளிலும் கூட கிரந்தம் விடுத்து தமிழுக்கு முன்னுரிமை தரலாமே என்பவர்கள் சிலர். இந்த ஒவ்வொரு நிலையில் உள்ளோருக்கும் மற்ற நிலைக்குச் செல்வது இயலாததாகவும் ஏற்புடையதாகவும் இல்லை. இங்கு, தூய தமிழ் என்பதன் புரிதலே ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. 2002 தொடக்கம் 2010 வரை பல இந்திய விக்கிகள் மெதுவான வளர்ச்சி நிலையையே கொண்டுள்ளன. இதற்குப் பல பொதுவான காரணங்கள் உண்டு. மக்களிடைய கணினி-இணையத்தின் பரவல், கணினி மென்பொருள்களின் தமிழ் ஆதரவு, உள்ளூர் மொழி விக்கிப்பீடியாக்கள் குறித்த விழிப்புணர்வு, தமிழ்த் தட்டச்சுக் கருவிகள் கிடைப்பு, தகுந்த கலைச்சொற்களின் கிடைப்பு, பொதுவாக ஒரு திட்டம் முதிர்ச்சி அடைவதற்கான காலம், இலங்கையில் இருந்த போர்ச்சூழல் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவு தடைகளையும் தாண்டி தமிழ் விக்கிப்பீடியாவில் ஒருவர் எழுத முனையும் போது, கிரந்தம்-பிறமொழிச் சொல் கலந்தே எழுதுவது என்றாலும் முழுக்க ஆங்கிலவழியக்கல்வியாக உள்ள சூழலில் அதற்கான திறனும் ஊக்கமும் நேரமும் உள்ளோர் சிலரே. எனவே, தூய தமிழ் பிரச்சினையால் தான் தமிழ் விக்கிப்பீடியா வளரவில்லை என்பது போன்ற தொனி வருவது ஏற்புடையதாக இல்லை. --இரவி 08:17, 21 சனவரி 2012 (UTC)
தூய தமிழ் என்பதன் வரையறையே ஆளாளுக்கு வேறுபடுவதை மேலே சுட்டியுள்ளேன். விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். அதற்கு என்று ஒரு சீரான நடை இருத்தல் அவசியம். கிரந்தப் பிரச்சினை தவிர்த்து பல இடங்களிலும் தகுந்த கலைச்சொற்கள், தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதின் காரணம் இதுவே. இது தமிழில் கலைக்களஞ்சியப் பணியில் ஈடுபடுபவருக்கான ஒரு அடிப்படை :en:WP:COMPTENCE. இது கூட இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்றால் எழுதலாம். ஆனால், கலைக்களஞ்சியமாக இருக்காது. //தமிழ் விக்கிப்பீடியா ஏன் வளரவில்லை என பார்க்கும் பொழுது, தூய தமிழ் பிரச்சினையும் ஓர் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன்// சென்ற விக்கிமேனியாவுக்குச் சென்ற போது, உலக மொழிகள் பலவற்றிலும் இதை ஒத்த பிரச்சினை இருப்பது தெரியவருகிறது. taglish, greeklish என்று அந்தந்த மொழிகளில் மிகை ஆங்கிலம் கலப்பதால் விக்கிப்பீடியாவிலும் என்ன வகையான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பமும் பிரச்சினையும் இருக்கிறது. உலக மயமாக்கலின் காரணமாக ஆங்கிலத்தின் தாக்கம் கூடுதலாக இருக்கிறது. நம்முடைய வரலாற்றுக் காரணங்களால், தமிழில் வேறு பல மொழிகளின் தாக்கமும் உள்ளது. எனவே, இது தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் இருக்கிற பிரச்சினை இல்லை. இந்தப் பிரச்சினை இல்லாத எல்லா மொழி விக்கிப்பீடியாக்களும் வளர்ந்து விடவும் இல்லை. இதனால் தமிழ் விக்கிப்பீடியா வளரவில்லை என்பது ஒரு அகவயமான (subjective) கருத்தாகவே இருக்க முடியும். --இரவி 11:09, 21 சனவரி 2012 (UTC)
//இதைச் செய்ததற்கு கூகிள் பஸ்சில் ஒரு இலக்கிய வட்டத்தாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். // சோடாபாட்டில், இதே இலக்கிய வட்டம் தான் கிரந்தம் நீக்கினாலும் தாலிபான் என்கிறது. பயனர் ஒருவர் தான் தொடங்கும் கட்டுரையில் கிரந்தம் விடுத்து எழுதினாலும் தாலிபான் என்கிறது. கிரந்தம் இருப்பதை ஏற்றுக் கொள்வோர் கிரந்தம் இல்லாமல் இருப்பதை அவ்வளவு இலகுவாக ஏற்றுக் கொள்வதில்லை. இதைத் தான் புரிந்துணர்வில் சமநிலையின்மை என்று குறிப்பிட்டேன். நாம் வெகுவாக கவலைப்படும் விக்கிப்பீடியாவுக்கு வெளியேயான பிம்பத்தில் இந்தச் சமநிலையின்மை கூடுதலாக உள்ளது. //தனிப்பட்ட முறையில் வேண்டினால் கிரந்தம் தவிர்த்து எழுத முன்வருவோர் பலர் உள்ளனர். பொதுப்பரிந்துரை உள்ளது என்று எடுத்தியம்பினாலே “சரி முயற்சிக்கிறோம்” பலர் சொல்லி விடுகிறார்கள். தனித்தமிழ்/கிரந்தமற்ற நடை பிடிக்கவில்லை என்று சொல்வோரிடம் வலிந்து மாற்றம் ஏற்படாது அனைவரும் அவரவர் விரும்பும்படி எழுதலாம் என்று எடுத்துரைத்தால் பலர் ஏற்றுக் கொள்கிறார்கள். கிரந்தம் வேண்டாம் என்பதை தனிப்பட்ட முறையில் பயனர்களுக்கு எடுத்து சொல்லாம், இதை ஒப்புக்கொண்டு இயன்ற வரை கிரந்தம் தவிர்ப்போர் தவிர்க்கட்டும். எழுதுவோர் எழுதட்டும். இதனால் நமக்கு மிகுந்த லாபமே. ஒவ்வொரு கட்டுரையிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை விட பயனரிடம் தனிப்பட்ட முறையில் நேரடியாகப் பேசுவது, நிறைய கிரந்தமற்ற கட்டுரைகளை எழுதுவது, விக்கிக்கு வெளியில் கிரந்தமற்ற நடையைப் பரப்புவது போன்றதே இதற்குத் தீர்வு. இதுவே கிரந்தமற்ற தமிழ் பரவ வேண்டும் என்பதற்கு நல்ல விளைவுகளைத் தரும் உத்தி. விக்கி நடைக்காகப் பொதுப் பரிந்துரையை ஏற்று தங்களை மாற்றிக் கொண்டு விக்கியில் இயன்றவரை கிரந்தம் தவிர்த்து, கிரந்தமாக்கலை செய்ய முனைவோரைத் தடுத்து வரும் போது, கிரந்தமகற்றம் வேண்டுமென்போர் சற்றிலும் இறங்கி வராது, அவர்கள் நிலைப்பாட்டை 100% அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கட்டுரை தோறும் உரையாடுவது தான் இங்கு அயற்சியைக் கொடுப்பதுடன் கசப்புணர்வை வளர்க்கிறது. // ஏற்றுக் கொள்கிறேன். இதை விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு பக்கத்திலும் சேர்க்கலாம். இது போன்ற பரிந்துரைகள் ஆக்கப்பூர்வமாக உள்ளன. நன்றி--இரவி 11:09, 21 சனவரி 2012 (UTC) என் மறுமொழி
w:WP:Ownership of articles என்பதில் கூறப்படும் முதல் வரியைப்பாருங்கள் "All Wikipedia content is open to being edited collaboratively. No one, no matter how skilled, and regardless of their standing in the community, has the right to act as if they are the owner of a particular article." முழு கட்டுரையையும் படித்துப்பாருங்கள்.
--செல்வா 05:36, 21 சனவரி 2012 (UTC)
என் கருத்துநண்பர்களே, இங்கு இவ்வளவு பெரிதாக நடந்துள்ள உரையாடலை இப்போதுதான் பார்க்கிறேன். சில நாட்களாகப் பங்களிக்காமைக்குக் காரணம் மொழியியல் திட்டமொன்றை கூகுள் நிறுவனம் என்னிடம் ஒப்படைத்துள்ளமையால் ஏற்பட்ட வேலைப்பளுதான். கிரந்தம் இருக்க வேண்டுமா தவிர்க்க வேண்டுமா என்பதில் செல்வாவின் கருத்துக்குப் பெரும்பாலும் உடன்படுகிறேன். கிரந்தத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கூறும் போது, நானும் முதலில் வசதிக் குறைபாடாக உணர்ந்தாலும், கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுதும் போது தமிழின் தனித் தன்மை பேணப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட பின்னர் விக்கிப்பீடியாவுக்கு வெளியிலும் பெரும்பாலும் கிரந்தம் தவிர்த்தே எழுதுவது மட்டுமன்றி, நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதையே விரும்புகிறேன். மாணவர்கள் எப்போதாவது உதவி வேண்டினால், இது தமிழ் இது வடமொழி இது வேறு மொழி என்று தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறேன். அதனால், தமிழின் தனித்துவம் பேணப்படுவதில் நானும் ஓரளவுக்கேனும் பங்களிக்கிறேன் என்று மனநிறைவு கொள்கிறேன். இது இவ்வாறிருக்க, ஏனைய மொழிப் பெயர்களைத் தமிழில் கிரந்தம் தவிர்த்து ஆக்கும் போது சில வேளைகளில் குழப்பம் ஏற்படுவதுண்டு. அவ்வாறான நிலைமைகளில் மாத்திரம் நாம் கிரந்தத்தைக் கையாளலாம் என்பது என் கருத்து. ஏனைய எல்லா இடங்களிலும் கிரந்தம் அகற்றியும் நற்றமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியும் எழுதுவதையே நானும் வரவேற்கிறேன். எனவே, இந்தக் கட்டுரையின் தலைப்பை செல்வாவின் பரிந்துரைக்கு ஏற்ப நிக்கோலசு கோப்பர்னிக்கசு என்று மாற்றுவதில் எனக்கும் உடன்பாடே.--பாஹிம் 16:30, 21 சனவரி 2012 (UTC)
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் (அ) நிக்கோலசு கோப்பர்னிக்கசு விளைவித்த புரட்சி!ஆம், வானவியல் துறையில் இந்த அறிஞர் மாபெரும் புரட்சியைக் கொணர்ந்தார். இவர் "15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றி கதிரவனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர்" (காண்க: "நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்", தமிழ் விக்கிப்பீடியா). அந்த மாபெரும் கோப்பர்னிக்கஸ் (அ) கோப்பர்னிக்கசு இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கின்ற காரசாரமான உரையாடலுக்கும் காரணமாகி, ஒரு புரட்சியையே நிகழ்த்திவிட்டாரோ! :) செல்வாவும் சோடாபாட்டிலும் தமிழ் விக்கிக்குச் சிறப்பான பங்களிக்கும் சான்றோர்கள். அவர்களது தொடர் பங்கேற்பு/பங்களிப்பு தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் மிகமிகத் தேவை. "வை திஸ் கொலவெறி" பாடலில் வருகின்ற "தமிழ்" நடை நம் தமிழ் விக்கியிலும் புகுந்துவிடக் கூடாதே என்றும், மணிப்பிரவாளம் அங்கே அரியணை ஏறிவிடலாகாதே என்றும் நாம் கவலைப்பட வேண்டிய இக்காலக் கட்டத்தில், கடுமையான விவாதங்களைத் தவிர்த்து, பொதுவான ஒருசில கொள்கைகளை உருவாக்கும் வழியைப் பார்ப்போம்.
மேற்காட்டிய பதிவை இடுகை செய்த அதே நேரத்தில் செல்வாவும் எழுதிக்கொண்டிருந்ததால் "முரண்பாடு" ஏற்பட்டது. இருப்பினும் எனது கருத்தைப் பதிவுசெய்ய விழைகிறேன்.--பவுல்-Paul 19:35, 21 சனவரி 2012 (UTC)
ஜடாவர்மன்மன்னிக்கவும். எனக்கு கிரந்தம் என்றவுடன் இத்தலைப்பு தான் நினைவுக்கு வருகிறது. ஆங்கிலத்தில் சடையவர்மன் என்று தலைப்பு இருக்க வேண்டியதெல்லாம் ஜடாவர்மன் என்று ஒருவர் எழுதியிருந்தார். தற்போது மாற்றியாகிவிட்டது. ஏன் சடையவர்மன் என்று சரியாக எழுதவில்லை. சடை என்ற சொல் பயன்பாட்டில் ஏற்கனவே உள்ளது. அதை அவர் அறியாமல் இருக்குமளவு நாம் கிரந்தத்தை தெரியாமலே ஆதரித்து வருகிறோம் என்று அறிய முடிகிறது. அதனால் முடிந்தளவுக்கு கிரந்தம் தவிர்த்து வழக்கிலுள்ள தமிழ் சொற்களை பயன்படுத்துவது நன்று. ஆனால் அதை வேண்டுகோளாக வைக்காமல் கட்டாயமாக்குவது சரிதானா என்பதில் எனக்கு தெளிவில்லை. நான் விக்கியில் நுழைந்த போது பேச்சுப்பக்கம் என்று ஒன்று இருந்தது என்பதே தெரியாது. ஒருவேளை அதைப்பர்க்காமல் போயிருந்தால் நானும் சில சர்சைகளுக்காக வெளியேறி இருப்பேன். அது போலவே இங்கு விதியேற்படும் முன்பே அதை அமல்படுத்துவதால் தமிழ் ஆர்வம் கொண்டு சிலர் மாற்றம் செய்தாலும் அவர் வேண்டுமென்றே நம்மை பிடிக்காமல் மாற்றம் செயவது போல் ஒரு பின்பம் உருவாகும். இதனால் இங்கு வரும் புதியவர்கள் வெளியேற வாய்ப்புளது. இங்குள்ள புது விக்கிப்பயனர்களை தக்க வைக்க வேண்டுமானால் அவர்கள் நுழையும்போதே இதை போல் விதியுள்ளது என்பதை தெளிவு படுத்த வேண்டும். கிரந்தம் குறித்த விதியில்லாமல் அதை அமல்படுத்தினால் நீங்கள் நன்மையாக செய்தாலும் தீமையாகவேபடும். அதனால் இதற்கு முதல் விதி ஏற்படுத்துங்கள். அதன்பின் மாற்றம் செய்வது சிறந்தது. இங்கு சிறிது நேரத்தில் மின்தடை ஏற்பட உள்ளதால் உரையாடலை முழுதும் படிக்க முடியவில்லை. அதனால் சிலவற்றை கவனிக்காமலும் சிலவற்றை தவறாகவும் சம்பந்தமில்லாமலும் எழுதியிருந்தால் மன்னிக்கவும். @George46 நான் முரண்பாடு ஏற்படும் பக்கங்களில் உரையாடும் போது, சேமிக்கும் முன் தகவலை வலசொடுக்குதல் மூலம் சேமித்து வைத்து விடுவேன். மீண்டும் ஒட்டி சேர்த்துவிடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் 05:16, 22 சனவரி 2012 (UTC)
// ஆனால் அதை வேண்டுகோளாக வைக்காமல் கட்டாயமாக்குவது சரிதானா என்பதில் எனக்கு தெளிவில்லை. // கிரந்தப் பயன்பாடு குறித்த வழிகாட்டல் பக்கம் ஒன்று மட்டுமே உள்ளது. இது குறித்து விதி ஏதும் இல்லை. தமிழ் விக்கிப்பீடியா போன்ற கூட்டுத் திட்டங்களில் 100% கிரந்தம் சேர்த்து எழுதுவது, 100% கிரந்தம் விடுத்து எழுதுவது இரண்டுமே சாத்தியப்படாது. எனவே, இது குறித்து கண்டிப்பான விதி என்றும் வர இயலாது. தற்போதைய நடைமுறை, அந்தந்தப் பேச்சுப் பக்கங்களில் கிரந்தம் குறித்த கருத்து தெரிவித்து மற்ற பயனர்களின் ஏற்பை வேண்டி அதற்கேற்ப மாற்றல் மட்டுமே. ஆனால், பல பக்கங்களில் இதே போன்ற உரையாடல்கள் நிகழ்வதால் ஆதரிப்போர், மறுப்போர் இருவருக்குமே நேர இழப்பு ஆவதால், இதற்கு உள்ள முறைமையை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்பதே கேள்வி. பேச்சுப் பக்கத்தில் உரையாடினால் கூட புதுப்பயனர்கள் அவற்றைப் பற்றி அறியாமல் இருக்கலாம் என்று நீங்கள் சுட்டி உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. தங்கள் கருத்துகளுக்கு நன்றி.--இரவி 07:48, 22 சனவரி 2012 (UTC)
கருத்துநான் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பங்களிக்க இயலாமையில் பல உரையாடல்களைக் கவனிக்க இயலவில்லை. இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும்போது சில கட்டுரைகளின் உரையைத் திருத்திக் கொண்டிருந்தேன், அதனால் கவனிக்கவில்லை. அந்தந்த இழையில் அல்லாமல் பொதுவாகக் கருத்துத் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். 2004-இல் இருந்து இப்போது வரை கூடிய வரையில் கிரந்தத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதில் பொதுவாகவே உடன்பாடு இருந்து வந்துள்ளது. இருந்தாலும் ஒரு சிலரே எதிர்த்தாலும் ஒரு தாராண்மை ஏற்பு நோக்கிலேயே இறுக்கம் குறைந்த கொள்கையை உருவாக்கினோம். அதிலும் தமிழில் சமய நோக்கில் நெடுநாள் வழக்கில் இருந்த சில பெயர்களில் மட்டும் தான் ஏற்பு விலக்கு பற்றிய கருத்து வேறுபாடு மிகுந்திருந்தது. ஆங்கில, அறிவியற் சொற்களை இதுவரைத் தமிழில் எழுதாதபோது அதை இயன்றவரை தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுதலாம் எனப் பொதுவான புரிந்துணர்வு இருந்தது. இங்கு செல்வாவின் பரிந்துரையில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு கட்டுரையின் தலைப்பையும் உள்ளடக்கத்தையும் பற்றி பேச்சுப் பக்கத்தில் முறையாகக் கேட்டுள்ளார். (குறுந்தகட்டுப் பணிகளின்போது இதை எழுப்ப வேண்டாம் என்ற புரிந்துணர்வு இருப்பதை நானும் முன்னர் கவனிக்கவில்லை. அவ்வாறு இருப்பதால் அதைச் சுட்டினால் போதுமானது. நானும் அந்தக் காரணத்தினால் தலைப்பை இப்போது மாற்றப் பரிந்துரைக்கவில்லை.) பொதுவாக இந்த உரையாடலில் குறிப்பிடப்பட்ட சில கருத்துக்கள்:
எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். தனிப்பட்ட அளவில் நான் எழுதிய கட்டுரைகளை வேறு யாரும் திருத்தாமல் இருந்த போது 5-6 ஆண்டுகள் கழித்து நானே திருத்தியிருக்கிறேன். நமது தனிப்பட்ட, கூட்டுப் புரிதல்கள் வளர்வது இயல்பே. தவிர விக்கியில் இருப்பவர்கள் தொடர்ந்து அன்றாடம் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அவரவர்க்குத் தோதான நேரங்களில் தான் வர முடியும். (அதனால் தான் ஐ.ஆர்.சி., கீச்சு, முகநூல் உரையாடல் போன்றவற்றைக் காட்டிலும் விக்கியிலேயே உரையாடுவது சிறந்தது.)
கிரந்தத்தையும் தாண்டி பொதுவாக அப்படிச் சொல்லத் தொடங்கியுள்ளது மிகவும் அபாயமான போக்கு எனக் கருதுகிறேன். விக்கிப்பீடியா உட்பட எந்தவொரு கலைக்களஞ்சியமானாலும் எழுத்து, இலக்கணம், நடை போன்றவற்றில் இசைந்து கொடுக்க மாட்டார்கள். நானறிய ஒலிக்கோப்புக்களாகப் பேசிப் பதியும் கட்டுரைகளிலும் கூட அதே நிலைதான். அதிலும் தமிழ் போல செந்தர மரபு (இருதர வழக்கு) இருக்கும் மொழியில் இன்னும் உறுதியாக இருப்பதே சரி. எந்த ஒரு பயனரும் எழுதும்போது பிழை விட வாய்ப்புள்ளது. அதை திருத்துவதும், திருத்தங்களைப் பரிந்துரைப்பதும் தவறில்லை. தொடர்ந்து நடக்கும்.
மேலே பலரும் (சோடாபாட்டில் உட்பட) தாங்கள் இயன்றவரை கிரந்தத்தை விடுத்து எழுதுவதாகவே சொல்லியுள்ளார்கள். நல்லெண்ணம் கொண்ட பயனர்கள் தக்க காரணத்துடன் விளக்கும்போது ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள். அவ்வாறு இல்லாமல் வரத் தயங்குபவர்கள் தயங்கினால் பரவாயில்லை. தமிங்கிலமாகவோ, இலக்கணப்பிழைகள் மலிந்தோ, எழுத்துப்பிழைகள் நிறைந்தோ ஒரு கோடி கட்டுரைகள் வந்தாலும் வேண்டாம். சிறிது காலம் தாழ்ந்தேனும் தரமாகவே வருவது நல்லது.
இது தான் நாம் முக்கியமாக எண்ணிப் பார்க்க வேண்டிய கருத்து. நிக்கோலசு என்று எழுதினால் படிப்பதில் சிரமமாக உள்ளதா என எண்ணிப் பார்க்க வேண்டும். பிறமொழிச் சொற்களைக் குறைத்து ஈடான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தும்போதும் இதே கேள்விதான் எழுந்தது. உண்மையாகப் பார்த்தால் புரியவில்லை என்று சொல்பவர்கள் தாம் பழகியது போல இல்லை என்ற பொருளிலேயே சொல்கின்றனர். முதலில் வரும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. நாளாக நாளாக இதுவே இயல்பாய்த் தெரிகிறது. தமிழ் விக்கி இயல்பாகவே இணையத்தில் முன்னிலையில் நிற்கும் (தேடுபொறிகளினாலும், இங்குள்ள உள்ளடக்கம் இணையத்தில் வேறெங்கும் கிடைக்காது என்பதாலும்). அந்நிலையில் இந்த நடை பழகி விடும் வாய்ப்புகளே மிகுதி. அடுத்தது, ஆங்கிலச் சொற்களைத் துல்லியமாகத் தராத போது குறையாகத் தோன்றும் நபர்கள் பொதுவாக ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களே. அவர்கள் ஒரு கட்டுரையை இங்கு படிக்க முடியவில்லை என்றாலும் கூட ஆங்கிலத்தில் படிக்க வாய்ப்புள்ளது. தமிழையே முதன்மையாகக் கற்றுள்ளவர்களை எண்ணிப் பார்க்க வேண்டுமல்லவா? நமது நடையில் எனக்குத் தெரிந்த ஒரே குறை மொழிபெயர்ப்பு நோக்கில் இருப்பதுதான். ஒரு ஆங்கில விக்கிக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது தெரிந்தோ தெரியாமலோ சொல்வரிசை, செயப்பாட்டு வினைகளைக் குறைத்து எழுதும் தமிழ் மரபு போன்றவற்றில் கவனம் குறைந்து இயல்பாக இல்லாமல் எழுதி விடுகிறேன். அதுவே நம்மில் பலருக்கும் வருகிறது. பார்வதி போன்றோரது திருங்களைப் பார்த்த பின்னால் சில நேரங்களில் என்னை நானே குட்டிக் கொண்டிருக்கிறேன். சற்று ஊன்றிப் படித்துவிட்டு மொழிபெயர்க்காமல் தமிழிலேயே எண்ணிப் பார்த்து எழுதும்போது இது குறையும். பட்டாம்பூச்சி கட்டுரை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
யாருடைய நேரம் வீணாகிறது எனப் புரியவில்லை. செல்வா மாற்றட்டுமா எனக் கேட்கிறார் என்றால் தொடர்ந்து கொள்கையில் மறுப்பு இருப்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு நேரம் வீணாகும். ஆனால் மேலே கருத்துத் தெரிவித்துள்ள அனைவரும் தாமாகவே கிரந்தம் விடுத்து எழுதுவதாகவே தெரிவித்துள்ளதாகக் காண்கிறேன். மெதுமெதுவாக அந்தக் கொள்கையைப் பொதுவான ஒரு இடத்தில் உரையாடி இணக்க முடிவை எட்ட வேண்டும். அதன் பின்னர் அதைச் சுட்டிவிட்டு விரும்புபவர்கள் தாமாகவே மாற்றிக் கொள்ளலாம்.
குறுவட்டுத் திட்டம் மிகவும் முக்கியமான திட்டம். அதனால் நல்ல பயன் கிடைக்கும். இதில் முனைந்து ஈடுபடும் அனைவரையும் குறிப்பாக முடுக்கி விட்டு முனைந்து செயலாற்றும் சோடாபாட்டிலையும் உளமாறப் பாராட்டுகிறேன். ஆனால், என்னைப் பொருத்தவரை விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் பற்றிய கேள்விகள் முதலானவற்றை ஒதுக்கிவிட்டு நடத்தும் அளவுக்கு எந்தத் திட்டமும் முக்கியமில்லை. அதிலும் விக்கியைப் போலன்றி குறுவட்டாகவோ அச்சிலோ வெளியிடும்போது அதைத் திருத்தும் வாய்ப்பு இல்லாததால் இன்னும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். ஆங்கில விக்கியின் Version 1.0 திட்ட முனைப்பாளரை விக்கிமேனியாவில் கண்டு பேசியபோது அவரும் அதை வலியுறுத்தினார். சிக்கல் இருந்தால் அந்தக் கட்டுரையை விட்டுவிட்டுக் கூட வெளியிடலாம். குறுவட்டுத் திட்டத்தின் தொடக்கத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு என்பதால் நான் இதை வலியுறுத்தவில்லை. ஆனால் இந்தத் திட்டத்தைக் காட்டித் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதால் விக்கியும் அதன் நோக்கமும் முதன்மையானவை எனக் கூறிக் கொள்கிறேன். இவை தவிர, இந்த உரையாடலின் போக்கில் கவலை தரும் சிலவற்றைச் சுட்டிக் காட்ட விரும்பினேன். இருந்தாலும், இப்போது சூட்டோடு சூடாக மனக்கசப்புத் தர வாய்ப்புள்ளவற்றைத் தவிர்க்க விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:17, 22 சனவரி 2012 (UTC) why this kolaveri ? I watch from outside and want to talk plainly. why all people are against Selva.. bcoz he is coming last minute and do nattamai. All old guys like Ravi, Selva, Sundr busy with thier work when tamil wiki is down. when sodabottle brings new people, corrects all mistakes and help new users it is given new life. people get more help in sodabottle page than help page. That is why this fight.. old caucus vs new turk.. nothing to do grantha..everybody agrees no grantha.. 2. for grantha..it is only notation why so much opposition i dont know..but if all want keep one IPA chart like english where allow grantha and avoid grantha in article. say no grantha in tamil wiki strictly..no such fights u want new users to write grantha and give sermon.. -- −முன்நிற்கும் கருத்து 183.83.61.124 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
கிரந்தம் கிரந்தமகற்றல்விக்கி பீடியா ஒரு பன்முகத் தகவல்கள் கொண்ட கட்டற்ற கலைக் களஞ்சியம். இதில் தகவல் தேடுவோர்கள் அவரவர்கள் அறிந்த (படித்த) ஒலியியலில் கொண்டு தான் தேடுவார்கள். இதில் நாடு, வட்டாரம் எல்லம் அடங்கும். தலைப்புகளுக்கிடையே ஒரு சிறிய இடைவெளி விட்டாலுமே அக்கட்டுரை கிடைப்பதிலை. எனக்கு இது போன்ற கட்டுரைத் தேடலில் மிக அதிக நேரம் செலவாகியுள்ளது. எனவே தேடுவோருக்கு முதலில் விக்கியில் தகவல் உள்ளது என்ற நம்பிக்கை வரவேண்டும். அதன் பின் அதன் உள்ளடக்கத்தில் நாம் செய்த கிரந்தம்/ கிரந்தமகற்றல் மாற்றங்கள் பார்த்து அவர் இதற்கேற்ற தமிழ் இது தான் எனத் தெளியட்டுமே... அனைவரிடத்திலும் விக்கி பீடியா சென்று சேர வேண்டும் எனில் கிரந்தம்/ கிரந்தமகற்றல் என்ற தருக்கங்கள் இங்கு தேவையில்லை. ஆனால் தமிழ் என்று நோக்கும் போது அது தேவை. அதுவும் ஓர் உரை திருத்தப் பணியே. ஆயினும் எனது வேண்டுகோள்: பொதுவான தவறுகளின்றி எத்தலைப்புகளில் கட்டுரை தொடங்கப்பட்டதோ அவ்வாறே இருக்கட்டும். ஆனால் கட்டுரையின் உள்ளடக்கங்களில் நாம் விரும்பும் தமிழ் வளர்க்கலாமே? --Parvathisri 16:22, 23 சனவரி 2012 (UTC) //இவர் பெயர் கட்டுரையில் கோப்பர்னிக்கஸ் என்று ப் சேர்த்தும், சில இடங்களில் கோபர்நிகஸ் என்று ப் இல்லாமலும், சில இடங்களில் க் இல்லாமலும், சில நி என்னும் தகர நி இட்டும் எழுதப் பட்டுள்ளது.//
|
Portal di Ensiklopedia Dunia