மனித மேம்பாட்டுச் சுட்டெண்![]()
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (ம.மே.சு.), அல்லது மனித வள சுட்டெண் அல்லது மனித வளர்ச்சிச் சுட்டெண் (Human Development Index, HDI) என்பது ஐக்கிய நாடுகள் அவையினால் ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண்ணாகும். இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்வி, வாழ்க்கைத்தரம், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மாந்த உரிமைகள் (முக்கியமாக குழந்தைகள் உரிமை), ஆண்-பெண் உரிமைகள், அறமுறைகள், முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் அவையினால் பல நாடுகளுக்கும், சில தன்னாட்சி நிலப்பகுதிகளுக்கும் கணித்து அடையப்படும் அளவீடாகும். 2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2] இந்தச் சுட்டெண்ணைக் கொண்டு நாடுகள் வளர்ந்த நாடுகள் (developed countries), வளர்ந்துவரும் நாடுகள் (developing countries), வளர்ச்சியடையாத நாடுகள் (undeveloped countries) என்று பிரிக்கப்படுகின்றது. அத்துடன் மாந்தரின் வாழ்க்கைத் தரத்தில் நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் அல்லது விளைவைத் தீர்மானிக்கவும் உதவுகின்றது[3]. இந்தச் சுட்டெண்ணானது 1990 அம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளியலாளர் மக்பூப் உல் ஹக் மற்றும் இந்திய பொருளியலாளர் அமர்த்தியா சென் ஆகியோரால் உருவாக்கப்பட்டது[4]. 2019 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி மனித வளர்ச்சிச் சுட்டெண் தர வரிசையில் இலங்கை 72 ஆவது இடத்திலும், இந்தியா 131 ஆவது இடத்திலும் உள்ளன மனித மேம்பாட்டு அறிக்கை - 20192019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சி திட்ட அறிக்கையின்படி, இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.[5][6] மனித மேம்பாட்டு அறிக்கை - 2018ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 189 நாடுகளுக்கான, 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது[7] குறிப்பு:
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[8] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும். குறிப்பு:
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:தாய்வான், லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா. மனித மேம்பாட்டு அறிக்கை - 2016ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2016 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 14 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[9][10]. 2015 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2016, மார்ச் 21 ஆம் நாள் ஸ்டொக்ஹோம், சுவீடனில், வெளியிடப்பட்டது[11]. குறிப்பு:
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[9] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும். குறிப்பு:
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், குவைத். மனித மேம்பாட்டு அறிக்கை - 2015ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2015 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 13 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[12][13]. 2014 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2015, டிசம்பர் 14 ஆம் நாள் அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில், வெளியிடப்பட்டது[14]. குறிப்பு:
மனித மேம்பாட்டு அறிக்கை - 2014ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2014 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 12 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது [15]. 2013 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2014, ஜூலை 24 ஆம் நாள் தோக்கியோ நகரத்தில் வெளியிடப்பட்டது[16]. குறிப்பு:
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[15] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும். குறிப்பு:
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், கியூபா, குவைத். பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகள்வெவ்வேறு காரணங்களால், சில நாடுகள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இன்றியமையாத தரவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்ததே முக்கிய காரணமாகும். 2014 அறிக்கையில் இடம்பெறாத ஐக்கிய நாடுகள் அங்கத்துவமுடைய நாடுகள்:[15] வடகொரியா, மார்சல் தீவுகள், மொனாக்கோ, நவூரு, சான் மரீனோ, சோமாலியா, தெற்கு சூடான், துவாலு. மனித மேம்பாட்டு அறிக்கை - 2013ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2013 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 11 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2012 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2013, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[17] குறிப்பு: பச்சை அம்புக்குறி (
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது[17]. குறிப்பு: பச்சை அம்புக்குறி (
மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் முதல் நான்கிலொரு பகுதியில் இருந்த நாடுகளில், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலில் இல்லாத நாடுகள்: நியூசிலாந்து, சிலி, ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், சீனக் குடியரசு, லீக்டன்ஸ்டைன், புரூணை, அந்தோரா, கத்தார், பார்படோசு, ஐக்கிய அரபு அமீரகம், சீசெல்சு. மனித மேம்பாட்டு அறிக்கை - 2011ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2011 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2011, நவம்பர் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது[18] குறிப்பு: பச்சை அம்புக்குறி (
ஐக்கிய நாடுகள் உறுப்பினர் அல்லாதவை (UNDP யால் கணக்கிடப்படவில்லை)
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது.[18]
குறிப்பு: பச்சை அம்புக்குறி (
சமமின்மை சரிசெய்யப்பட்ட பட்டியலில் வராத நாடுகள்: நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், சீனக் குடியரசு (தாய்வான்), ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன், சிலி, ஆர்ஜென்டீனா மற்றும் பார்படோஸ். சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[18]: வட கொரியா, மார்ஷல் தீவுகள், மொனாகோ, நவூரு, சான் மேரினோ, சோமாலியா, துவாலு. மனித மேம்பாட்டு அறிக்கை - 20102010 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், மனித மேம்பாட்டு அறிக்கையின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நவம்பர் 4 2010 இல் வெளியிடப்பட்ட அறிக்கை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் "மிக உயர் மேம்பாடுடைய" நாடுகளாகும்:[2]
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்2010 அறிக்கையே இவ்வாறான ஒரு சமமின்மை சரிசெய்யப்பட்ட முதலில் வெளியான அறிக்கையாகும். வருமானம், ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி ஆகிய மூன்று காரணிகளே சரி செய்யப்பட்டன. இந்த வகையில் பெறப்பட்ட மிக உயர் மேம்பாடு கொண்ட நாடுகளாகும்.[2] பச்சை அம்புக்குறி (
தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. அவையாவன:நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன் மற்றும் பார்படோஸ். சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[2] கியூபா தன்னைச் சேர்த்துக் கொள்ளாததற்கு உத்தியோகபூர்வமான எதிர்ப்பை தெரிவித்தது. ஐக்கிய நாட்டு அங்கத்துவமில்லாத நாடு (UNDP யால் கணக்கெடுக்கப்படவில்லை)
மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிக்கை - 2009அக்டோபர் 5, 2009 இல், 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய அறிக்கை வெளியிடப்பட்டது. மேல் தரத்தை எட்டிய நாடுகள் வளர்ந்த நாடுகள் என அடையாளப்படுத்தப் பட்டன.[19] அவையாவன:
கணக்கில் சேர்க்கப்படாத நாடுகள்பல்வேறு காரணங்களுக்காக இவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சில ஐநாவில் இல்லாத நாடுகள், சில சரியான தகவல்களைத் தரத் தயங்கும் நாடுகள், வேறு சில நாடுகளில் சரியான தகவல்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் பெறுதல் கடினம். கீழே உள்ள நாடுகள் சேர்க்கப்படவில்லை. முன்னைய வருடங்களில் முன்னணியில் இருந்த நாடுகள்கீழுள்ள பட்டியலில், ஒவ்வொரு வருடமும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் முன்னணியில் இருந்த நாடுகள் ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளன. நோர்வே 15 தடவைகளும், கனடா எட்டு தடவைகளும், யப்பான் மூன்று தடவைகளும் ஐஸ்லாந்து இரண்டு தடவைகளும் முதலிடத்தைப் பெற்றுள்ளன. கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு அறிக்கை வழங்கப்பட்ட ஆண்டையும், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு சுட்டெண் கணக்கிடப்பட்ட ஆண்டையும் குறிக்கின்றது.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia