முதல் சீனக் குடியரசு (1912-1928)
முதல் சீனக்குடியரசு அல்லது சீனாவின் பெய்யாங் அரசாங்கம் (Beiyang government) (மரபுவழிச் சீனம்: 北洋政府; பின்யின்: Běiyáng Zhèngfǔ; வேட்-கில்சு: Pei-yang Chêng-fu[1] இந்த முதல் சீனக் குடியரசு தற்கால சீனாவின் பெரும்பகுதிகளை 1912 முதல் 1928 வரை 16 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தது. இக்குடியரசின் தலைநகராக பெய்ஜிங் நகரம் விளங்கியது. 1912 வரை சீனாவை ஆண்ட குயிங் பேரரசில் தலைமைப் படைத்தலைவராக இருந்த யுவான் சிக்காய் தலைமையில் பெய்ஜிங் இராணுவம் வலிமையுடன் விளங்கியது. [2]தலைமை இராணுவப் படைத்தலைவர் யுவான் சிக்காய் இறந்த பின், குயிங் பேரரசின் இராணுவம், பல படைத்தலைவர்களின் கீழ் பல குழுக்களாகப் பிரிந்து, பேரரசின் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, உள்ளூர் இராணுவத் தலைவர்கள் போன்று செயல்பட்டனர். இருப்பினும் அரசியலமைப்பின் கீழ் சிவில் அரசாங்கம் பெயரளவில், பெய்ஜிங் நகரத்தின் இராணுவப் படைத்தலைவர்களால் சீனக் குடியரசு ஆளப்பட்டது. முதல் சீனக் குடியரசு வெளிநாட்டு உறவுகளை பேணி வளர்த்ததுடன், சுங்க வரி, நில வரி, மற்றும் பிற வரிகளை வசூலிக்கும் உரிமை கொண்டிருந்ததுடன், வெளிநாட்டுக் கடன்களையும் பெற்றது. இக்குடியரசின் சட்டபூர்வமான தன்மையை 1917-இல் குவோமின்டாங் கட்சியின் தலைவர் சன் யாட் சென் கடுமையாக எதிர்த்தார். மேலும் சன் யாட் சென்னின் ஆதரவாளரான சியாங் கே சேக் 1926 -28களின் போது வடக்கு படையெடுப்புகளின் போது பெய்ஜிங் இராணுவப்படைகளை வென்று, முதல் சீனக் குடியரசை பதவி இறக்கம் செய்து, 1928-இல் சீனாவை ஒன்றிணைத்தார். நாஞ்சிங் நகரத்தில் குவோமின்டாங் கட்சியின் சார்பாக தேசியவாத் அரசாங்கத்தை நிறுவினார்.[3]இதன் மூலம் சீனாவின் அரசியல் களம் ஒரே கட்சியின் அரசு தொடர்ந்து விளங்கி வருகிறது. படக்காட்சிகள்
1911 முதல் 1928 முடிய சீனாவின் வரைபடம்
இதனையும் காண்க
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia