யூகலிப்டஸ் ரெக்னான்ஸ்
![]() மலைச் சாம்பல் மரம் (mountain ash) அல்லது (யூக்லிப்டசு இரெகினன்சு) அல்லது சதுப்புப் பிசின், அல்லது ஒட்டுபிசின்,[3] என்பது ஆப்பிரிக்கத் தாயக, குறிப்பாக, தாச்மானியா, விக்தோரியா மாநிலங்களைச் சேர்ந்த, நீடைநிலை உயரம் முதல் மிக நெடிதுயர்ந்து வளரும் மரவகையாகும். இது நேர்குத்தான அடிமரமும் மென்சாம்பல் பட்டையும் உள்ள மரமாகும். ஆனால், மர அடிப்பகுதி கரட்டுப் பழுப்புப் பட்டையை உடையது. இதன் இலைகள் மிளிர் பசுமை நிறமும் lance-shaped to curved adult leaves; பூமொட்டு வெண் நிறத்தில் ஒன்பது முதல் பதினைந்து வரையிலான எண்ணிக்கையில் கொத்தாக அமையும். பழங்கள் கிண்ண வடிவில் அல்லது கூம்பு வடிவில் இருக்கும். இது தாசுமானியாவில் 102 மீட்டர்(334 அடி) உயரம் வரை வளரும். இதற்கு நூற்றாண்டு மரம், தாசுமானிய ஓக் எனும் பெயர்களும் உண்டு. மரத்தொழிலில் பெயர் பெற்றது. வகைப்பாடுதாவரவியல் பெயர் : யூக்கலிப்டஸ் ரெக்னன்ஸ் (Eucalyptus regrans ) குடும்பம் : மிர்டேசியீ (Myrtaceae) இதரப் பெயர்கள்
மரத்தின் அமைவு![]() உலகின் மிக கடினமான மரங்களில் மிக உயரமாக வளரக்கூடியது இம்மரமே. இது 325 அடி உயரம் வரை வளரக்கூடியது. ஆத்திரேலியாவில் மிகவும் உயரமாக வளரக்கூடிய மரமும் இதுவே. இவை இலையுதிரா மரவகையைச் சார்ந்தன. இலைகள் மிகுந்த வாசம் உடையவை. இம்மரத்தின் பட்டை மிருதுவாகவும், சாம்பல் நிறமாகவும் இருக்கும். இதனால் இதை ஆத்திரேலியாவின் சாம்பல் மலை மரங்கள் என்றும் அழைக்கிறார்கள். சிறப்புகள்யூக்கலிப்டசு வகையில் 300 இனங்கள் உள்ளன. இவற்றில் அதிக எண்ணெய் ரெக்னன்ஸ் மரங்களிலிருந்து கிடைக்கிறது. இதன் பட்டை காகிதக் கூழ் செய்ய உதவுகிறது. உலர்ந்த இலைகளை கொண்டு டிங்கர் செய்கிறார்கள். இது மருந்தாக பயன்படுகிறது. இதனுடைய பூக்கள் மிகச் சிறியவை. இதனுடைய காய்கள் மணி வடிவில் உள்ளன. இதனுள் எண்ணற்ற சிறிய விதைகள் உள்ளன. பரவல்ஆத்திரேலியாவுக்கு வெளியே, இம்மரம் நியூசிலாந்திலும் தென்னாப்பிரிக்காவிலும் கென்யாவிலும் தாஞ்சானியாவிலும் வளர்க்கப்படுகிறது.[4] மேற்கோள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia