விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025

தொடர்-தொகுப்பு நிகழ்வினை 2025 ஆம் ஆண்டில் நடத்துவதற்கான திட்டப் பக்கம்.

திட்டத்திற்கான மேல்-விக்கி பக்கம்: Tamil Wikipedia Content Enrichment Meet 2025

நோக்கம்

பங்களிப்பாளர்கள் நேரில் ஒன்றுகூடி, கவனக்குவியம் பெற்ற தொகுத்தல் பணியைச் செய்தல். இரண்டு தொடர்ச்சியான நாட்களுக்கு இப்பணிகள் நடைபெறும்.

கவனக்குவியம்

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்

திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2025

அணுகுமுறை

  1. 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பயனர்களை கலந்துகொள்ள ஊக்குவித்தல்.
  2. முந்தைய நிகழ்வில் கலந்துகொள்ள தெரிவு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் கலந்துகொள்ள இயலாத பயனர்களை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்கச் செய்தல்.
  3. முந்தைய நிகழ்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்.
  4. முந்தைய நிகழ்வில் நடைமுறைப்படுத்திய செயல்வழியைப் பயன்படுத்தி, செம்மைப்படுத்தும் பணியைச் செய்தல்.
  5. பெறும் அனுபவத்தின் அடிப்படையில், செம்மைப்படுத்தும் பணியினை தொடர்ந்து செய்து இலக்கினை எட்டுதல்.

இலக்கு

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல்:

  • முதற்கட்ட திட்டமிடல் - 174 கட்டுரைகள்
  • கலந்துகொண்ட பயனர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மாற்றம் பெற்ற இலக்கு - 162 கட்டுரைகள்

நிகழ்விற்கான திட்டம்

  • தேதி: மார்ச் 15, மார்ச் 16 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை)
  • ஊர்: சேலம், தமிழ்நாடு
  • நிகழ்விடம்: ZIBE SALEM BY GRT HOTELS, ஓமலூர் முக்கியச் சாலை, சேலம் - 636009
  • நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
  • கலந்துகொள்பவர்கள்: 24 பயனர்கள்

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

  1. நிகழ்வு நடத்துவதற்கான நிதி மேலாண்மைப் பொறுப்பு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:28, 22 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
  2. நிகழ்வு நடக்கும் விடுதி அலுவலகத்துடனான ஒருங்கிணைப்பு. - --Balu1967 (பேச்சு) 07:57, 24 சனவரி 2025 (UTC)[பதிலளி]
  3. கலந்துகொள்பவர்களுடனான தொடர்பாடல். - ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:56, 24 சனவரி 2025 (UTC)[பதிலளி]
  4. நிகழ்வு வடிவமைப்பு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:20, 8 மார்ச்சு 2025 (UTC)
  5. நிகழ்ச்சி நெறியாளுகை. - --மகாலிங்கம் இரெத்தினவேலு 05:00, 25 சனவரி 2025 (UTC)[பதிலளி]
  6. 3 மாதங்களுக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்தல். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:23, 24 சனவரி 2025 (UTC)[பதிலளி]

நிகழ்வில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு

நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விண்ணப்பிக்குமாறு பயனர்களை கேட்டுக்கொள்கிறோம்.

  • முன்பதிவு தொடங்கிய நாள்: 24-சனவரி-2025
  • முன்பதிவு நிறைவடையும் நாள்: 07-பிப்ரவரி-2025 (இந்திய நேரம் இரவு 11.30 மணி)
  • தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும் நாள்: 09-பிப்ரவரி-2025 (இந்திய நேரம் இரவு 10 மணி)

முக்கியக் குறிப்புகள்

  • இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த நிகழ்வானது பணியாற்றும் நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பங்களிப்பதற்கான பயிற்சியாகவோ அல்லது விக்கிமீடியர்களின் சந்திப்பு நிகழ்வாகவோ வடிவமைக்கப்படவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு நேரடியாக பயன் ஏற்படுத்துவது இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
  • நிகழ்வின்போதும், நிகழ்விற்குப் பிறகும் பயனர்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புகள் குறித்து இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விவரங்களுக்கு இங்கு காணுங்கள்: இலக்குகள்
  • ஆர்வமுடன் பங்களித்து, இலக்கை நோக்கி பயணிப்பவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும். எடுத்துக்காட்டுகள்: பணியை செய்து முடிப்பதற்கான சிறந்த செயல்வழி குறித்த வழிகாட்டல், தொழினுட்ப உதவிகள்.

▶ கலந்துகொள்வோரின் பொறுப்புகள், தங்குமிடம், உணவு ஏற்பாடு, மதிப்பூதியம் இவை குறித்து அறிந்துகொண்டு, முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்.

நிகழ்வு

திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya