விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்![]() இத்திட்டம் குறித்த உரையாடல் சூலை 7, 2015 அன்று ஆலமரத்தடியில் தொடங்கப்பட்டது. இது வளரும் திட்டமென்பதால், இங்கு முறையான திட்டப்பக்கத்தில் உரையாடலைத் தொடர்கிறோம். இவ்வுரையாடலின் முதல் தொகுப்பு இங்கு உள்ளது. இத்திட்டத்தினைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெற தொகுப்புப் பக்கங்களையும் வாசிக்க வேண்டுகிறோம். செயற்றிட்டங்கள்பல்வேறு செயற்றிட்டங்கள் தொடர்பான முன்னெடுப்புகளைக் கீழே தனித்தனித் தலைப்புகளில் தருகிறோம். இவற்றில் புரிந்துணர்வு கூடக் கூட இவற்றைத் தனிப்பக்கங்களுக்கு நகர்த்தலாம். குறிப்பு: நம்முடைய வழமையான தாங்குதிறன், இணையத்துக்கு வெளியேயான செயற்பாடுகளை ஒப்பிடும் போது இங்கு முன்வைக்கப்படும் செயற்றிட்டங்கள் மலைப்பைத் தருவன என்றே நானும் உணர்கிறேன். அதே வேளை, தமிழ்நாடு முழுவதும் சென்றடைவதற்கான, கொள்கை அளவில் தமிழ்விக்கிப்பீடியாவுக்குத் தேவையான விசயங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அரிதாக கிடைப்பனவே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எந்த அளவுக்கு நம்மால் செயற்பட முடிகிறது என்று பார்ப்போம். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது மலைக்க வைக்கும் விசயங்கள், தனித்தனியாகப் பார்க்கும் போது சற்றே மேம்பட்ட தெளிவையும் நம்பிக்கையையும் தரவல்லன. எனவே, அத்தகைய அணுகுமுறையையே மேற்கொள்ள விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC) செயற்றிட்டங்களுக்கான பரப்புரைப் பெயர்பின்வரும் பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் சேர்த்து பரப்புரை நோக்கில் ஒரு பெயர் வைக்கலாம் என்ற ஆலமரத்தடி உரையாடல் தொடர்பாக என் கருத்தை முன்வைக்கிறேன். இலக்கு ஓர் இலக்கம், இலட்சம் பதிவுகள் இலட்சியம் போன்ற எண்ணிக்கை சார் தலைப்புகளில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், தமிழ் விக்கிப்பீடியா ஒரு போதும் எண்ணிக்கையை முன்வைத்து இலக்குகளை வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 100 பங்களிப்பாளர்கள், விக்கிமாரத்தான் நிகழ்வு என்று சில இலக்குகள் என்று தான் வைப்போமே தவிர நீண்ட நாள் நோக்கில் கட்டுரை எண்ணிக்கையை மட்டும் ஒரு போதும் இலக்காக கொள்வதில்லை. இவ்வாறு இலக்குகள் கொண்ட பல்வேறு விக்கிப்பீடியாக்கள் எண்ணிக்கையைத் துரத்தி தரத்தைக் கோட்டை விட்டு விட்டன. எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும், உளவியல் நோக்கில் எண்ணிக்கை தொடர்பாகவே நம் சாய்வு இருக்கும். நாம் பல்வேறு செயற்றிட்டங்களைத் திறம்பட முன்னெடுப்போம். அவற்றின் விளைவாக இலட்சம் வந்தாலும் சரி. அதற்கு மேலும் வந்தாலும் சரி :) ஆனால், இதற்குக் கால வரையறை தருவது கடினம். நம்மோடு இணைந்து பங்காற்றும் கூட்டாளிகளுக்கு இத்தகைய பல்வேறு எண்ணிக்கை சார் முன்னேற்ற அலகுகள் அவசியம் என்றாலும் அதனை விக்கிப்பீடியர்களின் உள்ளார்ந்த உந்துதலாக முன்னிறுத்துவது சரியில்லை. மாறாக, பொதுவான, பொதுமக்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தலைப்புகளை முன்னிறுத்தலாம். ஒளிர் தமிழ் என்பது என் பரிந்துரை. இது போன்ற பொதுவான பல பெயர்களையும் முன்மொழிந்து முடிவு செய்யலாம். இப்பெயரானது எண்ணிக்கை, விக்கியை முன்னிறுத்தாது பொது மக்களிடம் உள்ளார்ந்து உள்ள தமிழார்வத்தைக் கிளறச் செய்யும் தலைப்பாக இருத்தல் நலம். --இரவி (பேச்சு) 06:45, 13 ஆகத்து 2015 (UTC) பல்வேறு ஆக்கங்களைக் கட்டற்ற உரிமங்களில் பெறுதல்இதுவரை உரையாடலில் பலரும் சுட்டியுள்ள பல்வேறு ஆக்கங்களைக் கட்டற்ற உரிமங்களில் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக விக்கிமீடியா அறக்கட்டளை, கிரியேட்டிவ் காமன்சு, இந்திய பதிப்புரிமைச் சட்டத்தில் தேர்ச்சி உடையோரின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. இவ்வாறு ஆக்கங்களைப் பெற்ற பிறகு அவற்றை எப்படி எண்மியப்படுத்துவது என்பதை அடுத்த கட்டமாக உரையாட வேண்டும். இது தொடர்பான இற்றைகளை இங்கு பதிகிறேன். --இரவி (பேச்சு) 05:51, 13 ஆகத்து 2015 (UTC)
விக்கிமீடியா திட்டங்கள், கட்டற்ற மென்பொருள் தொடர்பான பயிற்சி வளங்கள் உருவாக்கம்நம்முடைய பல்வேறு செயற்பாடுகளுக்கும் பயிற்சியே அடிப்படையாக இருப்பதால், இது தொடர்பாக கையேடுகள், நிகழ்பட உதவிக் குறிப்புகள் என்று பல்வேறு பயிற்சி வளங்களைத் தொழில்நேர்த்தியுடன் உருவாக்க வேண்டியுள்ளது. இவற்றை உருவாக்குவதற்கான பட்டறைக்கான உத்தேச தேதிகளாக ஆகத்து 22, 23 அமையும். இப்பட்டறை சென்னை த. இ. க. வளாகத்தில் அமைவது அவர்களின் படப்பிடிப்புத் தளம் உட்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். இப்பட்டறையில் கலந்து கொண்டு பங்களிக்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன். கருத்துகளையும் பங்களிக்க விரும்புவோர் விவரங்களையும் கீழே பதிய வேண்டுகிறேன். சென்னைக்கு வெளியே இருந்து வந்து செல்வதற்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு வசதிகள் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். --இரவி (பேச்சு) 05:51, 13 ஆகத்து 2015 (UTC)
புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கண்ட செயற்றிட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் வகையிலும் விக்கிமீடியா அறக்கட்டளை, த. இ. க. , விக்கிமீடியா இந்தியா, தமிழ் விக்கிப்பீடியர்கள் சமூகம், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை ஆகிய அனைவருக்கும் இடையில் உள்ள புரிந்துணர்வைப் பதியும் வகையிலும் ஒரு முறையான புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்குவதற்கான தேவை உள்ளது. பல்வேறு திட்டங்களுக்கான நிதி, விக்கிமீடியா அறக்கட்டளையின் வணிக முத்திரைகளை முறையான ஒப்புதல் பெற்றுப் பயன்படுத்துவது ஆகிய தேவைகளுக்கு இது அடிப்படையாக அமையும். ஆகத்து 23க்குள் இதற்கான வரைவை உருவாக்கினால், மாதத்தின் இறுதியில் நடைபெறும் த. இ. க. நிருவாகக் குழு கூட்டத்தில் இதனை முன்வைத்து ஒப்புதல் பெறலாம். இதற்கான வரைவைத் தமிழ் விக்கிப்பீடியர்கள் சமூக ஒப்புதலுக்காக விரைவில் முன்வைக்கிறேன். அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கி வரைவை இறுதியாக்குவோம். --இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)
குடிமைச் சமூக அறிஞர்கள் வழி பங்களிப்புகள்ஆழி. செந்தில்நாதன் முனைவில் பல்வேறு குடிமைச் சமூக அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முதலானோரை ஒருங்கிணைத்து அவர்களுக்கு முறையான பயிற்சிகள் அளித்து தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதக் கோர உள்ளோம். இதற்கான முதல் பயிற்சிப் பட்டறை உத்தேசமாக ஆகத்து 29, 30 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தது 30 முதல் 50 பேர் வரையில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். தற்போதைய நிலையில் இது வழமையான விக்கிப்பீடியா பயிற்சியையே ஒரு குறிப்பிட்ட பரப்பினரைக் குவியம் கொண்டு நடத்துகிறோம் என்ற அளவில் புரிந்து கொள்ளலாம். இத்தகைய ஓரிரு பயற்சிகள் நடத்திப் பார்த்தாலே இவற்றின் விளைவுகள் என்ன, எப்படி அடுத்த கட்டச் செயற்றிட்டம் நோக்கி நகர்வது என்று புலப்படும். கருத்துகளையும் இதில் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க விருப்பமுள்ள விக்கிப்பீடியர்கள் கீழே பெயர் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். பயிற்சி அளிக்கும் விக்கிப்பீடியர்கள் சென்னைக்கு வெளியே இருந்து வந்து செல்வதற்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு வசதிகள் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். --இரவி (பேச்சு) 05:51, 13 ஆகத்து 2015 (UTC)
தரவு வழி தானியங்கிக் கட்டுரையாக்கம்அரசிடம் உள்ள பல்வேறு தரவுகளைப் பெற்று அவற்றைக் கொண்டு தானியங்கிகள் மூலமாக கட்டுரைகள் ஆக்கலாமா என்று பார்க்கலாம். முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 12,000 ஊராட்சிகள் தொடர்பான தரவைப் பெற முனைந்து வருகிறோம். இத்தரவை அலசி, விக்கிப்பீடியாவுக்குத் தேவையற்றவற்றை வடிகட்டி, மேலும் கூடுதல் தரவுகளைப் பெற வாய்ப்பிருந்தால் அவற்றையும் பெற்று தானியங்கிக் கட்டுரையாக்கம் தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா கொள்கைக்கு உட்பட்டு சோதனைக்கட்டுரைகளை உருவாக்கிச் சரி பார்த்து அதன் பின் தொடரலாம். இதனைச் சரியாக செய்ய முடிந்தால், அதன் மூலம் அரசிடம் உள்ள பல்வேறு தரவுகளைப் பெற முனையலாம். இத்தகைய பணிகளில் அனுபவம் உள்ள சுந்தர் இப்பணியை ஒருங்கிணைப்பார் என்று எதிர்பார்க்கிறேன் :) --இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)
தமிழ் விரும்பும் விக்கி - ஊடகப் போட்டி2012 இல் நாம் வெற்றிகரமாகச் செயற்படுத்திய ஊடகப் போட்டியின் தொடர்ச்சியாக இதனைக் கருதலாம். இவ்வூடகப் போட்டியின் மூலம் தமிழ் புலமைக் களத்தில் உள்ள பல்வேறு பகுதியினரைச் சென்றடையலாம். குறிப்பாக, இது வரை வலையேறாத அரிதான படங்களைத் திரட்டி வலையேற்ற முனையலாம். இது தொடர்பாக அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை, ஆவணக் காப்பகங்கள், அனைத்திந்திய வானொலி முதலிய பல்வேறு காப்புகளின் சேகரிப்புகளைப் பெற முனையலாம். இது ஒரு தொடக்க நிலைப் பரிந்துரையே. இது தொடர்பான கருத்துகளையும் பங்களிக்க விரும்புவோர் விவரங்களையும் கீழே தரலாம்.--இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC) கணித்தமிழ் பேரவைகளுக்கான விக்கிப்பீடியா பயிற்சிதமிழகத்தில் குறைந்தது 100 முன்னணிக் கல்லூரிகளில் கணித்தமிழ் பேரவைகளைத் தொடங்க அரசு முனைந்து வருகிறது. இவற்றை 5 மண்டலங்களாகப் பிரித்து, ஒரு மண்டலத்துக்கு இரண்டு நாட்கள் ஒதுக்கி அங்கு கூடும் கணித்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர்களுக்கு விக்கிப்பீடியா தொடர்பான பயிற்சிகள் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ் விக்கிப்பீடியர்களும் தத்தம் பகுதிகளில் இவற்றில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். முதல் கணித்தமிழ் பேரவை செப்தம்பர் 5, 6 தேதிகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க இருக்கிறது. குறிப்பு: இவை த. இ. க. தாமாக முன்னெடுக்கும் திட்டங்கள். இவற்றில் கலந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பயிற்சியையும் அறிமுகத்தையும் வழங்குவதற்கான வாய்ப்பே வழங்கப்படுகிறது. மற்ற அனைத்து ஒருங்கிணைப்புகளையும் த. இ. க. மேற்கொள்ளும். --இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)
அக்டோபர் 15, 2015 அன்று சேலம் பெரியார் பல்கலையில் கணித்தமிழ் பேரவையைத் தொடங்கினார்கள். இதில் பல்கலையின் கீழ் வரும் 90+ கலை அறிவியல் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் என்று ஏறத்தாழ 500 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 45 நிமிட நேர அளவில் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தினோம். தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க வேண்டிய தேவையை அனைவரும் வலியுறுத்திப் பேசினார்கள். தமிழ்ப்பரிதி, தகவல் உழவன், நீச்சல்காரன், மணியன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். --இரவி (பேச்சு) 10:54, 19 அக்டோபர் 2015 (UTC) அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் சென்னையில் கணித்தமிழ்ப் பேரவைகள் தொக்க விழாக்கள் நடக்க இருக்கின்றன. இதில் கலந்து கொள்ள அனைத்து விக்கிப்பீடியர்ளையும் அழைக்கிறோம். இடம்: TAG Auditorium, அண்ணா பல்கலைக்கழகம் (தமிழ்விக்கி10 நடந்த அதே இடம்) நேரம்: காலை 10 மணி (இரண்டு நாட்களும்) 30 அன்று அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரிகளும் 31 அன்று சென்னைப் பல்கலை உறுப்புக் கல்லூரிகளும் கலந்து கொள்ளும். இவ்விரு நிகழ்வுகளிலும் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பொதுவான அறிமுகமும் இடம்பெறும். எனவே, வந்திருக்கும் நூற்றுக் கணக்கான கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்களிடையே தமிழ் விக்கி பற்றிய ஐயங்களைப் போக்க நல்ல வாய்ப்பு. பணிகள் மிகத் துரிதமாக நடப்பதால் இறுதி நேரத்திலேயே இவ்வழைப்பை விடுக்க முடிவதற்கு வருந்துகிறேன் கவனிக்க: @Selvasivagurunathan m, Shanmugamp7, Rsmn, Neechalkaran, Semmal50, Sengai Podhuvan, and Sodabottle: @பரிதிமதி, Surya Prakash.S.A., Aswn, Vatsan34, உலோ.செந்தமிழ்க்கோதை, Nandhinikandhasamy, and தமிழ்க்குரிசில்: @Seesiva, Iramuthusamy, and கி. கார்த்திகேயன்: --இரவி (பேச்சு) 16:58, 29 அக்டோபர் 2015 (UTC) மாவட்ட அளவில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு துறையினருக்கு விக்கிப்பீடியா பயிற்சிகள்தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு 100 பேர் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்கள், பல்வேறு அரசு துறையினரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விக்கிப்பீடியா அறிமுகமும் பயிற்சியும் அளிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பு: இவை த. இ. க. தாமாக முன்னெடுக்கும் திட்டங்கள். இவற்றில் கலந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பயிற்சியையும் அறிமுகத்தையும் வழங்குவதற்கான வாய்ப்பே வழங்கப்படுகிறது. மற்ற அனைத்து ஒருங்கிணைப்புகளையும் த. இ. க. மேற்கொள்ளும். இவ்வாறான பெருமெடுப்பிலான பரப்புரைத் திட்டங்களுக்கான அடிப்படையாகவே முதலில் பயிற்சி வளங்களை உருவாக்க வேண்டியுள்ளது.--இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)
கடந்த அக்டோபர் 13, 14 தேதிகளில், சென்னையில், தகவல் மற்றும் தொடர்பாடல் நுட்பம் மூலம் கல்வி கற்பிக்க தமிழ்நாட்டு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பார்வதி, தமிழ்ப்பரிதி, தகவல் உழவன் கலந்து கொண்டு விக்கிப்பீடியா அறிமுகம் அளித்தனர். அடுத்து இவ்வாசிரியர்களின் ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகையை பயிற்சிகளை அளிப்பதற்காக மாநில பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது. --இரவி (பேச்சு) 10:51, 19 அக்டோபர் 2015 (UTC) தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுத்த ஆசிரியர்களுக்கு (தோராயமாக 50 பேர்) முழு நாள் விக்கிப்பீடியா பயிற்சி அளிக்கும் பணி தொடங்கியுள்ளது. நேற்றும் இன்றும் தருமபுரியிலும் திண்டுக்கல்லிலும் பார்வதி இப்பயிற்சியை வழங்கினார். ஒரு அரசுப் பள்ளி ஆசிரியையான பார்வதியே இப்பயிற்சியை வழங்குவது மற்ற ஆசிரியர்களுக்கு உந்துதலாக இருப்பதை அறிய முடிகிறது. பலரும் தாங்கள் தொடங்கிய கட்டுரைகள் உடனே கூகுளில் வருவது கண்டு வியப்புற்று மேலும் பங்களிக்க முனைவதாக அறிய முடிகிறது. இதே காரணத்துக்காவே, மணல்தொட்டியில் பயிற்சி தொடங்கினாலும் சற்று சீரான கட்டுரைகளை முதன்மை வெளிக்கு நகர்த்த வழி காட்டலாம். ஏனெனில், பயிற்சி இடத்தை விட்டு வழமையான பணிகளுக்குத் திரும்பும் போது மணல் தொட்டியில் இருந்து நகர்த்தும் உந்துதல் இருக்காது. ஒரு முறை நேரடியாக செய்து பார்த்தால், அந்த அனுபவம் உதவும். நாளை சேலத்தில் நடைபெறுகிறது. அடுத்தடுத்து நடக்கும் பயிற்சிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டு உதவ வேண்டுகிறோம். இதற்கான அட்டவணை கிடைத்ததும் பகிர்கிறோம். மேலும் விவரங்களை அளிக்க பார்வதியை வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 17:05, 29 அக்டோபர் 2015 (UTC)
வணக்கம். பயிற்சி வேலையாக இருந்ததனால் விக்கியில் இதனைப்பற்றி அறிவிக்க முடியவில்லை. முதற்கட்டமாக சேலம் தருமபுரி, திண்டுக்கல். நாகப்பட்டிணம் மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ளது. விரிவான தகவல்களை இங்கு பதிகிறேன். நவம்பர் மாதம் முழுவதும் இன்னும் ஐந்து கட்டங்களில் நடைபெற உள்ளது.உங்களில் யராவது உங்கள் மாவட்டம் அல்லது அருகருகே அமைந்துள்ள மாவட்டங்களில் பயிற்சியளிக்க விருப்பமுடையவர்கள் செய்யலாம். ஒரு பயிலரங்கிற்கு இருவர் என அதற்கான படிகளும் உணவு மற்றும் தங்குமிட வசதியும் செய்து தரப்படுகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:40, 30 அக்டோபர் 2015 (UTC) நன்றி ஆண்டன். பதிப்புரிமை பற்றி அறிவித்தும் சிலர் கூகுள் தேடலில் கிடைக்கும் படங்களை பயிற்சிக்காகப் பயன்படுத்தினர். தடை குறித்து அவர்களை எச்சரிக்க மறந்துவிட்டேன். நினைவூட்டியமைக்கு நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:14, 30 அக்டோபர் 2015 (UTC)
கட்டற்ற அறிவு முனையம்இத்தகைய பல்வேறு செயற்பாடுகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் அடிப்படையை வலுப்படுத்தவும் த. இ. க. வில் கட்டற்ற அறிவு முனையம் ஒன்று தொடங்கப் பரிந்துரைத்துள்ளோம். இது முறையான அமைப்போ நிறுவனமோ அன்று. த. இ. க. உள்ளிருந்து செயற்படும் ஒரு செயற்றிட்ட ஏற்பாடாக நோக்கலாம். இம்முனையம் கட்டற்ற பண்பாடு, ஆக்கம், மென்பொருள் குறித்தான சட்ட ஆவணங்கள், நூல்கள், பரப்புரை வளங்கள் ஆகியவற்றை உருவாக்க முனையும். த. இ. க. உள்கட்டமைப்பு வளங்களைப் பயன்படுத்திச் சென்னையில் ஒவ்வொரு மாதமும் ஒரு பரப்புரைக் கூட்டம் நடத்தலாம். இதற்குச் சென்னையில் உள்ள கல்லூரிகள், அரசுத் துறைகளை அழைக்கலாம். இத்திட்டத்தில் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் பங்கு பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது.--இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)
கல்வியில் விக்கிப்பீடியாமேற்கண்ட பல்வேறு முயற்களின் ஊடாக சரியான முனைப்பு காட்டும் கல்லூரிகள், பள்ளிகளில் கல்வியில் விக்கிப்பீடியா திட்டத்தை முயன்று பார்க்கலாம். குறிப்பாக, நமக்கு கட்டற்ற உரிமங்களில் கிடைக்கும் ஆக்கங்களை உரை வடிவுக்கு மாற்றும் தட்டச்சுப் பணியில் இவை பெரும் பங்காற்ற முடியும். இவ்வாறான முயற்சிகள் கேரளத்தில் வெற்றிகரமாக பின்பற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுக்கு, கிறித்து பல்கலைக்கழக மாணவர்கள் பங்கு கொள்ளும் கல்வியில் விக்கிப்பீடியா திட்டத்தை இங்கு காணலாம்.--இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC) புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்ஆண்டு முழுதும் தமிழகம் முழுக்க நடைபெறும் பல்வேறு புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் விக்கிப்பீடியா தர வாய்ப்பு உள்ளது. முதல் முயற்சியாக செப்தம்பர் மாதம் மதுரையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அறிமுகப்படுத்த முனைந்து வருகிறோம். இதில் கலந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் தர விரும்புவோர் கீழே பெயர் பதிய வேண்டுகிறேன். 10 நாட்கள் நடக்கும் நிகழ்வில் தங்களால் இயன்ற நாட்கள் கலந்து கொள்ளலாம். குறைந்தது இரண்டு நாட்களாவது பங்களிக்க விரும்புபவர்களுக்கு தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்து வந்து செல்வதற்கான போக்குவரத்துச் செலவு, தங்குமிட வசமி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய முனைவோம். நன்றி. --இரவி (பேச்சு) 11:46, 25 ஆகத்து 2015 (UTC)
மதுரை புத்தகக் காட்சியில் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு என்று ஒரு கடை உறுதியாகியுள்ளது. நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கும் நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியர்களின் தொடர் பங்களிப்பு தேவை. ஒவ்வொரு நாளும் ஒரு விக்கிப்பீடியராவது கடையில் இருந்தால் கூடுதல் உதவிக்கு சிலர் வரலாம். தற்போது பல்வேறு நாள்களில் பொறுப்பெடுத்துப் பார்க்க தினேசு, பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, பயனர்:Srithern, பயனர்:எஸ்ஸார் முன்வந்துள்ளார். நாளை களத்துக்குச் சென்று பார்த்தால் தான் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, வரும் கூட்டத்துக்கு ஏற்றவாறு என்னென்ன விசயங்களை முன்வைக்கலாம் என்று புரியவரும். --இரவி (பேச்சு) 15:53, 28 ஆகத்து 2015 (UTC)
நல்கை வேண்டல்இக்கூட்டு முயற்சியினை தொடர, தனியொரு நல்கை வேண்டலை முன் வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. எளிய ஓராண்டுத் திட்ட நல்கையின் மூலம் உதவ விக்கிமீடியா அறக்கட்டளையினர் இசைவு அளித்துள்ளனர். இதற்கென தமிழ் விக்கிப்பீடியர்கள் தனியொரு பயனர் குழுவாக விண்ணப்பித்து ஏற்பு பெறுவது உதவியாக இருக்கும். இத்தேவையை விரிவாக எடுத்துரைத்து, மேற்கொண்டு நகர, ஒரு கூகுள் சந்திப்பு உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். அக்டோபர் 20, 2015 இந்திய நேரப்படி இரவு 9 மணி ஒத்து வருமா? bit.ly/tawiki-hangout என்ற முகவரியில் கூடலாம். கவனிக்க: @AntanO, சஞ்சீவி சிவகுமார், Balurbala, Commons sibi, Mayooranathan, Sundar, Natkeeran, and RsmnSelvasivagurunathan m:--இரவி (பேச்சு) 11:11, 19 அக்டோபர் 2015 (UTC)
மேற்குறிப்பிட்ட உரையாடலில் மயூரநாதன் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது என்பதால் அலுவல்முறையில் குறிப்புகள் எடுக்கவில்லை. பொதுவாக, கூட்டு முயற்சியின் முன்னேற்றம் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டேன். --இரவி (பேச்சு) 11:17, 30 நவம்பர் 2015 (UTC) தொண்டு
விக்கிப் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவதற்கான ஆதரவுஆவணப்படுத்தலுக்காக, கீழ்க்காணும் குறிப்பினை இடுகிறேன். விக்கிப்பீடியா பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்குத் தேவையின் அடிப்படையில் முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ மாற்றுப் பணி ஒப்புதல் பெற்றுத் தர த. இ. க. உதவி வருகிறது. எடுத்துக்காட்டுக்கு,
இற்றை: தனது உடல்நிலை காரணமாக இம்மாற்றுப் பணிப் பொறுப்பில் இருந்து விலகி மீண்டும் வேலூரில் இருந்து தனது வழமையான அரசு அலுவல் பணியைக் கவனித்து வருவதாக கி. மூர்த்தி தெரிவித்திருக்கிறார். --இரவி (பேச்சு) 12:16, 8 திசம்பர் 2015 (UTC) |
Portal di Ensiklopedia Dunia