வெள்ளக்கால் பழனியப்ப சுப்பிரமணிய முதலியார் (வெ.ப.சு, ஆகத்து 14,[1] 1857 - அக்டோபர் 12, 1946) கால்நடை மருத்துவர். அம்மருத்துவ நூல்களைத் தமிழில் முதன்முறையாக மொழிபெயர்த்த தமிழ்ப் புலவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.[2]
பிறப்பு
வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 1857 ஆகத்து 14 ஆம் நாள் இன்றைய தென்காசி மாவட்டம்கடையத்தை அடுத்த ஆழ்வார்குறிச்சி எனும் ஊரில் வெள்ளக்கால் பழனியப்ப முதலியாருக்கு மகனாகப் பிறந்தார்.[3]
கல்வி
வெ. ப. சுப்பிரமணிய முதலியார் திருநெல்வேலி தெற்குப் புதுத்தெருவில் இருந்த கணபதி வாத்தியாரின் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் நெல்லை அரசரடி கிறித்துவ மிஷன் பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். நெல்லையில் உள்ள ம. தி. தா. இந்து கல்லூரியில் பயின்று மெட்ரிக்குலேஷன் தேறினார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். பிறகு சைதாப்பேட்டையில் இருந்த அரசு வேளாண்மைக் கல்லூரியில் பயின்று 1884 ஆம் ஆண்டில் ஜி. எம். ஏ. சி. என்னும் வேளாண்மையில் பட்டம் பெற்றார்.[4]
பணி
1895 ஆம் ஆண்டில் முதுநிலை கால்நடை மருத்துவ உதவியாளராகவும் 1911 ஆம் ஆண்டில் துணைக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார்.[4]
சுவர்க்க நீக்கம்[2] முதற்காண்டம் (1895) - ஆங்கிலேயக் கவிஞர் ஜான் மில்டன் எழுதிய பாரடைஸ் லாஸ்ட் (Paradise Lost; 1667) என்னும் ஆங்கிலப் பெருங்காப்பியத்தின் முதல் நூலின் செய்யுள் மொழிபெயர்ப்பு - விரிவுரை ; மில்ட்டனார் சரித்திரத்துடன்[7][5][8]
கோம்பி விருத்தம் (1897)[9] - ஜேம்ஸ் மெர்ரிக் (James Merrick; 1720–1769) எனும் ஆங்கிலேயக் கவிஞர், கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றிய The Chameleon[10] எனும் செய்யுளின் தழுவல் மொழிபெயர்ப்பும் விளக்கமும்[7] (இதன்பின் அந்த ஆங்கிலச் செய்யுளை ம. கோபாலகிருஷ்ண ஐயர் தமிழாக்கம் செய்து அரும்பொருட்டிரட்டு (1915) எனும் தன் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பில் வெளியிட்டார்).[11]
கல்வி விளக்கம் (1899) – எர்பெர்ட் இஸ்பென்சர் (Herbert Spencer) எழுதிய 'கல்வி' (Education: Intellectual, Moral, and Physical; 1866-?)[5] எனும் நூலின் மொழிபெயர்ப்பு
சருவ சன செபம் (1939) - சைன சமய அறிஞர் சம்பத்து ராய சைனர் (Champat Rai Jain) எழுதிய "எதிரிடைகள் இசைவுறுதல்" (Confluence Of Opposites; 1921) என்ற நூலின் இறுதிப்பகுதியைத் தழுவி எழுதப்பட்டது. உலகத்தோருக்குத் தேவையான பொது அறத்தை 137 அடிகளில் கூறுகிறது.)[6]
இந்தியாவில் கால்நடைகளுக்குக் காணுகிற அதிக பிராணாபாயமான வியாதிகள்
ஏனையவை
ஆறுமுக நாவலர் சரித்திரம் (சிவகாசி அருணாசலக் கவிராயர் எழுதிய செய்யுள் நூல் பரிசோதிப்பு, 1898)[3][7]
பொதுப்பணி
வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 1916 ஆம் ஆண்டில் திருநெல்வேலி வட்டாட்சிக் கழகத்தில் உறுப்பினரானார். 1919 ஆம் ஆண்டில் அதன் துணைத்தலைவர் ஆனார். 1920 ஆம் ஆண்டில் அதன் தலைவராக ஆனார். 1922ஆம் ஆண்டில் தென்காசி நீதிமன்ற இருக்கையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பட்டம்
ஆங்கிலேய அரசிடம் ராவ் பகதூர் சாகிப் என்னும் பட்டத்தை 1926ஆம் ஆண்டு பெற்றார்.[5]
↑ 3.03.13.23.33.4மா. பீதாம்பரன் (3-11-1946). "முதுபெரும் புலவர் - வெள்ளக்கால் முதலியார்". ஈழகேசரி.
↑ 4.04.1வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை 2010, சென்னை, பக்.276
↑ 5.05.15.25.35.45.55.6கந்தையா பிள்ள ந. சி., தமிழ்ப் புலவர் அகராதி: புலவர் அகர வரிசை, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் சென்னை, மு.பதிப்பு 1952, பக்.188-189
↑ 6.06.16.2இந்திய இலக்கிய சிற்பிகள் ஆசிரியர் சி.சுப்பிரமணியன் வெளியீடு, புதுதில்லி முதற் பதிப்பு 2005.
↑ 7.07.17.2முதுபெரும் புலவர் உயர்திரு வெ. ப. சுப்பிரமணிய முதலியார் நூற்றாண்டு நிறைவு, இந்து சாதனம், 9 ஆகத்து 1957