கடையம்
கடையம் (Kadayam) என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், கடையம் வட்டத்தில் அமைந்த கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடம் மற்றும் கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இது தென்காசியிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும்; திருநெல்வேலிக்கு வடமேற்கே 50.5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் சுப்பிரமணிய பாரதியின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் ஆகும். மக்கள் தொகை பரம்பல்2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, கடையத்தின் மொத்த மக்கள் தொகை 5,430 ஆகும். அதில் ஆண்கள் 2,728 மற்றும் பெண்கள் 2,702 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.59% ஆகும்.[1] பெயர் காரணம்"கடையர் பட்டி" என்ற பெயர் மறுவி "கடையம்" ஆனது. கடையர் என்பது இப்பகுதியில் முதலில் குடியேறிய இனக்குழுவின் பெயர். தற்போது இதற்கு வேறு சில கதைகள் புனையப்படுகிறது. தமிழ் இலக்கணத்தில் முதன்மையாகக் கருதப்படுவது தொல்காப்பியம். நிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல் “ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (தொல்.பொருள்-968) என்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் கூறுவதிலிருந்து ஒவ்வொரு நிலத்திற்கும், அந்நிலத்தில் வாழ்கின்ற மக்கட்பெயரினைச் சுட்டிக்காட்டும் மரபு உள்ளதனை அறிய முடிகின்றது. வரலாறுகடையம் இந்தியாவில் தென் தமிழகத்தில் இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டத்தின், வழியாகச் செல்லும் திருநெல்வேலி மற்றும் செங்கோட்டையை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேகமாய் வளர்கின்ற ஒரு கிராமம் ஆகும். மேலும் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப் போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய, மகாகவி சுப்பிரமணிய பாரதி 1918 முதல் 1920 ஆம் ஆண்டு வரை இவ்வூரில் வசித்து வந்தார். மேலும் இவ்வூரைச் சேர்ந்த செல்லம்மா என்பவரை 1897 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia