அகமதாபாது மாவட்டம், இந்திய மாநிலமாகிய குசராத்தின் மாவட்டங்களில் ஒன்று. இந்தியாவின் 7ஆவது பெரிய நகரமாகிய அகமதாபாது இதன் தலைநகரம் ஆகும். இந்திய அளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களில் எட்டாவது இடத்தில் உள்ளது.[1].
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அகமதாபாது மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 7,045,314.[1] இது தோராயமாக ஹாங்காங் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 8வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 983 inhabitants per square kilometre (2,550/sq mi).[1] மேலும் அகமதாபாத் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 22.31%.[1] அகமதாபாத் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் அகமதாபாத் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 86.65%..[1]