அன்னா பென் (Anna Ben) மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றும் ஓர் நடிகையாவார். திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி. நாயரம்பலத்தின் மகளான இவர், 2019 ஆம் ஆண்டில் கும்பளங்கி நைட்ஸ் மூலம் அறிமுகமானார்.[1][2]ஹெலன் (2019) மற்றும் கப்பேலா (2020) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் இரண்டு கேரள மாநிலத் திரைப்பட விருதுகளை வென்றார்.[3] அதற்குப் பிறகு தெலுங்கில் வெளியான கல்கி 2898 கி. பி. (2024) என்ற அறிவியல் புனைகதை திரைப்படத்தில் ஒரு துணை வேடத்தில் நடித்துள்ளார்.
இவரது ஹெலன் திரப்படம் அன்பிற்கினியாள் எனும் பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. மேலும் ஒடிய மொழியிலும் இந்தியிலும் எடுக்கப்பட்டது.[4]
இளமை வாழ்க்கை
அன்னா, திரைக்கதை ஆசிரியர் பென்னி பி. நாயரம்பலம் மற்றும் புல்ஜாவின் மகள் ஆவார்.[5] வடுத்தலா சின்மயா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், கொச்சியின் செயின்ட் தெரசா கல்லூரியில் ஆடை வடிவமைப்பில் பட்டம் பெற்றர்.[6]
தொழில் வாழ்க்கை
வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற கும்பளங்கி நைட்ஸ் மூலம் 2019 ஆம் ஆண்டில் திரைப்படத்தில் அறிமுகமானார். அதில் இவர் பெண் குழந்தை கதாநாயகியாக நடித்தார்.[7][8][9] பின்னர், ஹெலன் மற்றும் கப்பேலா போன்ற படங்களில் நடித்தார், இது பார்வையாளர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.[10][11][12] இயக்குநர் சத்யன் அந்திக்காடு ஹெலன் படத்தில் இவரது கதாபாத்திரத்தைப் பாராட்டினார், மேலும் மலையாள மனோரமாவின் இணைய இதழ், "அன்னா பென் கப்பேலாவை ஒரு மகிழ்ச்சியான பயணமாக ஆக்குகிறார்." என்று எழுதியது.[12][13] அன்னா இசைக் காணொளிகளிலும் தோன்றியுள்ளார்.[14]