நஸ்ரியா நசீம்
நஸ்ரியா நசீம் (ஆங்கிலம்: Nazriya Nazim) என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.[1] வாழ்க்கைக் குறிப்புநஷ்ரியா நசீம் 1994, திசம்பர் 20 ஆம் நாளில் நசீமுதீன், பேகம்பீனா ஆகியோருக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார்.[2] இவர் இளமைப்பருவத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கிறித்துவப் பள்ளி ஒன்றில் படிப்பைத் துவங்கினார். பின்னர் 2013 ம் ஆண்டு வணிகவியல் இளங்கலைப் பிரிவில் தனது கல்லூரிக் கல்வியைத் தொடங்கியவர் திரைப்படங்களின் படப்பிடிப்புகளால் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார். இவரின் குடும்பம் ஐக்கிய அரபு அமிரகத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.[3][4][5] திருமணம்மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுடன் நஸ்ரியா திருமணம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.[6][7] படங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia