அமரான்தசு ரெட்ரோபிளக்சசு
அமரான்தசு ரெட்ரோபிளக்சசு (தாவரவியல் பெயர்: Amaranthus retroflexus, ஆங்கிலம்: red-root amaranth, redroot pigweed, red-rooted pigweed, common amaranth, pigweed amaranth, common tumbleweed.[4]) என்ற தாவரம் உண்மையான களை வகையாகும்.[4] இதன் தாயகம் வெப்பவலயத்திற்கு முன்னான (Neotropics) நிலப்பகுதிகள் ஆகும்.[5] அல்லது வட அமெரிக்காவின் நடுப்பகுதிகள், கிழக்குப் பகுதிகளாக இருக்கலாம்.[6] இது அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களாக அனைத்துக் கண்டங்களிலும் உள்ளது. வளரியல்புகள்இது நிமிர்ந்து வளரும் இயல்புடையது. வருடம் முழுவதும் வளரும் தன்மையைப் பெற்றிருக்கிறது. இதன் உயரம் 3 m (9.8 அடி) வரை வளரும் திறனுடையது. இதன் இலைகள் ஏறத்தாழ 15 cm (5.9 அங்) நீளமுடையது. இலைகள் பெரிதாக தனித்தனியாக இருக்கிறது. தண்டினை விட உயரமாக இருப்பது வேல் போன்ற வடிவிலும், குட்டையாக இருப்பது முட்டை வடிவத்திலும் இலைகள் உள்ளன. ஆண், பெண் என இரு வகைப்பட்ட (Monoecy|monoecious) இனப்பெருக்க உறுப்புகளும் ஒரே செடியில் உள்ளன. இதன் பூந்துணர் பெரிதாகவும், அடர்ந்த பூக்களைக் கொண்டதாகவும் உள்ளன. பழக்கூடுகள் 2 mm (0.079 அங்) நீளமுடையதாகவே உள்ளன.[7] பயன்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்![]()
|
Portal di Ensiklopedia Dunia