அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு

அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு
Ammonium tetrachloroaurate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு(III)
இனங்காட்டிகள்
31113-23-2
13874-04-9
ChemSpider 10773247
EC number 250-476-0
InChI
  • InChI=1S/Au.4ClH.H3N/h;4*1H;1H3/q+3;;;;;/p-3
    Key: WPEJSSRSFRWYJB-UHFFFAOYSA-K
  • InChI=1S/Au.4ClH.H3N.H2O/h;4*1H;1H3;1H2/q+3;;;;;;/p-3
    Key: DTYXSEJVOCMIPK-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 56845482
16211474
  • [NH4+].Cl[Au-](Cl)(Cl)Cl
  • [NH4+].O.Cl[Au-](Cl)(Cl)Cl
பண்புகள்
AuCl4H4N
வாய்ப்பாட்டு எடை 356.81 g·mol−1
தோற்றம் ஆரஞ்சு-சிவப்பு படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
சிறிதளவு கரையும்
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு (Ammonium tetrachloroaurate) என்பது NH4AuCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1]

தயாரிப்பு

தங்கம்(III) குளோரைடு சேர்மத்தின் நிறைவுற்ற கரைசலுடன் ஐதரோகுளோரிக் அமிலத்திலுள்ள அம்மோனியம் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு தயாரிக்கப்படுகிறது.[2]

இயற்பியல் பண்புகள்

அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு நீரிலும்[3] எத்தனாலிலும்[4] சிறிதளவு கரையும். நீரேற்றுகளாக உருவாகும்.[5]

அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் படிகங்களாக உருவாகிறது.[6] இதன் நீரேற்று C 2/ c என்ற இடக்குழுவில் (இடக்குழு எண்.15) ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் படிகமாகிறது.[7]

அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு சேர்மம் காற்றில் 230 முதல் 350 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது. இச்சிதைவு வினை ஒரு வெப்ப உமிழ்வு வினையாகும்.[8]

பயன்கள்

அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டின் நீரேற்று Pd-Au கலப்புலோக படச்சுருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.[9]

அம்மோனியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு கூழ்ம தங்கம் தயாரிக்கப் பயன்படுகிறது.[10]

மேற்கோள்கள்

  1. Tomar, Ravi (9 August 2024). Hydrotalcite-based Materials: Synthesis, Characterization and Application (in ஆங்கிலம்). Bentham Science Publishers. p. 337. ISBN 978-981-5256-12-3. Retrieved 17 March 2025.
  2. Physikalische Eigenschaften. Elektrochemisches Verhalten. Chemisches Verhalten. Nachweis und Bestimmung. Verbindungen, Legierungen (Achte Völlig Neu Bearbeitete Auflage ed.). Berlin, Heidelberg s.l: Springer Berlin Heidelberg. 1979. ISBN 978-3-662-12700-1. Retrieved 16 March 2025.
  3. "Ammonium tetrachloroaurate(III) hydrate". Sigma Aldrich. Retrieved 16 March 2025.
  4. Bonamico, M.; Dessy, G.; Furlani, C.; Capece, F. M. (15 August 1973). "The crystal and molecular structure of ammonium tetrachloroaurate(III) 2/3-hydrate" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 29 (8): 1737–1739. doi:10.1107/S0567740873005418. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. Bibcode: 1973AcCrB..29.1737B. https://journals.iucr.org/paper?a10169. பார்த்த நாள்: 16 March 2025. 
  5. Shallcross, David (20 April 2020). Petroleum Engineering Explained (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. p. 207. ISBN 978-1-78801-668-1. Retrieved 16 March 2025.
  6. "Ammonium-tetrachloroaurate". Johnson Matthey. Retrieved 16 March 2025.
  7. Bonamico, M.; Dessy, G.; Furlani, C.; Capece, F. M. (15 August 1973). "The crystal and molecular structure of ammonium tetrachloroaurate(III) 2/3-hydrate" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 29 (8): 1737–1739. doi:10.1107/S0567740873005418. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. Bibcode: 1973AcCrB..29.1737B. https://journals.iucr.org/paper?S0567740873005418. பார்த்த நாள்: 17 March 2025. 
  8. Price, Peter Everett (1991). Bifurcation Behavior in Laser Direct-write Metallization from Thin Films (in ஆங்கிலம்). University of Minnesota. p. 22. Retrieved 16 March 2025.
  9. "AG6012 Ammonium Tetrachloroaurate(III) Hydrate" (in ஆங்கிலம்). samaterials.com. Retrieved 16 March 2025.
  10. Evans, Meghan; Di Maggio, Francesco; Blackman, Chris; Sankar, Gopinathan (2015). "AACVD synthesis of catalytic gold nanoparticle-modified cerium(IV) oxide thin films" (in en). Physica Status Solidi C 12 (7): 996–1000. doi:10.1002/pssc.201510055. பன்னாட்டுத் தர தொடர் எண்:1610-1642. Bibcode: 2015PSSCR..12..996E. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/pssc.201510055. பார்த்த நாள்: 16 March 2025. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya