தங்கம்(I) சல்பைடு
தங்கம்(I) சல்பைடு (Gold(I) sulfide) என்பது Au2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்கத்தின் முதன்மையான சல்பைடு உப்பான இது தங்கம் மற்றும் அடிப்படை கந்தகமாகச் சிதைவடைகிறது. தங்கத்தின் உயர் உலோகப் பண்பு இவ்வினையில் வெளிப்படுகிறது. கட்டமைப்புகுப்ரசு ஆக்சைடு எனப்படும் தாமிரம்(I) ஆக்சைடு படிகமாவது போன்ற சிறப்புக்கூறுடன் தங்கம்(I) சல்பைடும் படிகமாகிறது. இக்கட்டமைப்பு தங்கம் 2-ஒருங்கிணைவுகளும் கந்தகம் 4-ஒருங்கிணைவுகளும் கொண்டு நேரியல் S-Au-S பிணைப்பால் ஆக்கப்பட்டுள்ளது[1]. நேரியல் ஒருங்கிணைவு வடிவியல் தங்கம்(I) சேர்மங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. குளோரோ(டைமெத்தில் சல்பைடு) தங்கம்(I) இதற்கு உதாரணமாகும். மேலும் இக்கட்டமைப்பு வெள்ளி சல்பைடின் ஆல்பா வடிவத்தைப் போல உயர் வெப்பநிலைகளில் மட்டுமே தோன்றுகிறது[2]. தயாரிப்புதங்க குளோரைடுடன் ஐதரசன் சல்பைடை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தங்கம்(I) சல்பைடைத் தயாரிக்க முடியும்[3]. பொட்டாசியம் டைசயனோ ஆரேட்டை சல்பைடாக்குவதன் மூலமாகவும் இது தோன்றுகிறது. தொடக்கத்தில் அடர் செம்பழுப்பு நிறத்தில் திண்மமாகத் தோன்றும் விளைபொருள் எஃகு சாம்பல் நிறத்திற்கு மாறுகிறது[4][2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia