தங்கம்(I) குளோரைடு
தங்கம்(I) குளோரைடு (Gold(I) chloride) என்பது AuCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்புதங்கம்(III) குளோரைடை வெப்பச் சிதைவு அடையச் செய்யும் வினையின் மூலமாகத் தங்கம்(I) குளோரைடு தயாரிக்கலாம். வினைகள்குளோரினின் ஆவியழுத்தத்தால் உயர்வெப்பநிலைகளில் இதனுடைய சிறுபகுதி நிலைப்புத் தன்மையுடன் காணப்பட்டாலும் இச்சேர்மம் வெளிச்சூழலில் சிற்றுறுதி நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.தண்ணீருடன் சேர்த்து வினைப்படுத்தும் பொழுது தங்கம்(I) குளோரைடு விகிதச்சமமாதலின்றி பிரிகையடைந்து தங்கம் உலோகமாகவும் தங்கம்(III) குளோரைடு ஆகவும் தன்னொடுக்க வினையால் மாற்றமடைகிறது:
பொட்டாசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பொட்டாசியம் தங்க புரோமைடு எனப்படும் பொட்டாசியம் ஆரிக் புரோமைடையும், பொட்டாசியம் குளோரைடையும் ,தங்கம் உலோகத்தையும் கொடுக்கிறது:
பாதுகாப்புகண்கள் மற்றும் தோலில் தங்கம்(I) குளோரைடு எரிச்சலை உண்டாக்கும், சிறுநீரகத்தைப் பாதிக்கும், இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia