அய்சால் மாவட்டம்
அய்சால் மாவட்டம், மிசோரம் மாநிலத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 3576.31 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் தலைமையகம் அய்சால் நகரில் உள்ளது. மிசோ மொழியில் அய் என்றால் மஞ்சள் என்று பொருள். சால் என்றால் நிலம் என்று பொருள். மஞ்சள் விளைந்த நிலம் என்பதால் அய்சால் என்ற பெயரைப் பெற்றது. அரசியல்இந்த மாவட்டம் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2] தட்பவெப்பம்
ஆட்சிப் பிரிவுகள்இந்த மாவட்டத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: ஐபாக், தர்லான், புல்லென். திங்சுல்தியா, தியாங்னுவாம். போக்குவரத்துஅய்சாலுக்கு அருகில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கும் குவகாத்திக்கும் விமான சேவைகள் உண்டு. மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 404,054 மக்கள் வாழ்ந்தனர்.[3] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 113 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [3] ஆயிரம் ஆண்களுக்கு 1009 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [3] இங்கு வாழ்வோரில் 98.5% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [3] சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia