மிசோ தேசிய முன்னணியின் எழுச்சி
![]() மிசோ தேசிய முன்னணி எழுச்சி என்பது வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாகாணத்தில் இருந்த மிசோரம் மாவட்டத்தில் வாழ்ந்த மிசோ மக்களுக்காக ஒரு இறையாண்மை கொண்ட தேசிய அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாகும். இந்த எழுச்சி 28 பிப்ரவரி 1966 இல் தொடங்கியது.[1][2] 1 மார்ச் 1966 அன்று முன்னாள் இராணுவ வீரர் லால்தெங்கா[3]தலைமையிலான மிசோ தேசிய முன்னணிப் படை உருவானது. இந்த முன்னணிப் படையினர், அசாம் மாகாணத்தின் மிசோரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்திய பின்னர் சுதந்திர மிசோரம் அரசை பிரகடனம் செய்தது. 25 மார்ச் 1966 அன்று மிசோ தேசிய முன்னணியினர் கைப்பற்றிய அனைத்து இடங்களையும், இந்திய அரசின் வான்படை, தரைப்படை மற்றும் துணை இராணுவப் படைகள் பதிலடி கொடுத்து மீண்டும் கைப்பற்றியது.[4] கிளர்ச்சியின் தீவிரம் காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்தாலும், அடுத்த இரண்டு தசாப்தங்களில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தன. 1986ல் இந்திய அரசும், மிசோ தேசிய முன்னணி தலைவர்களும் இணைந்து மிசோரம் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. இதன் மூலம் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. மிசோரமுக்கு தனி மாநிலத் தகுதியும், தனி உயர் நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பின்னணி1987ல் மிசோரம் மாநிலம் உருவாவதற்கு முன்பு, அசாம் மாகாணத்தின் மிசோ மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் பழங்குடி கிறித்துவ மிசோ மக்கள் வாழ்ந்தனர். அசாம் மாகாண அரசு தங்களை (மிசோ மக்களை) மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தப்படுவதாக நீண்ட காலமாக புகார் அளித்து, மிசோக்களுக்கு தனி மாநிலம் கோரியது. ஒவ்வொரு 48 ஆண்டுகளுக்கு ஒரு முறை மௌடம் எனப்படும் சுழற்சியான சூழலியல் நிகழ்வு இப்பகுதியில் பரவலான பஞ்சத்திற்கு வழிவகுக்கிறது. 1959ல் இத்தகைய பஞ்சம் தொடங்கியபோது, நிலமையை அசாம் அரசு சரியாக கையாளதால் மிசோ மக்கள் ஏமாற்றமடைந்தனர். 1960ம் ஆண்டு மாநிலத்தின் அலுவல் மொழியாக அசாமிய மொழி அறிமுகப்படுத்தியது. மேலும் மிசோ மொழியைக் கருத்தில் கொள்ளாததால், மிசோ மக்களுக்கு அசாம் அரசின் மீது அதிருப்தி மற்றும் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. அரசாங்கத்தின் மீது பெருகிய அதிருப்தி, இறுதியில் முன்னாள் இராணுவ வீரர் லால்தெங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி பிரிவினைவாத இயக்கம் தோன்றியது. இந்த முன்னணி மிசோ மக்களுக்கு தனியாக மிசோரம் இறையாண்மை கொண்ட சுதந்திர தேசத்தை நிறுவுவதை நோக்கமாக அறிவித்தது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia