அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கோட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் என்பது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓர் மிகப்பெரிய கிளை பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த போக்குவரத்து கழகக் கோட்டமே தமிழ்நாடு மட்டுமின்றி பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என தென்னிந்திய மாநிலங்களைக் காட்டிலும் மிகப்பெரிய அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டம் ஆகும். தமிழ்நாட்டில் இயங்கும் அரசுப்போக்குவரத்துக் கழகங்களிலேயே இக்கோட்டத்தின் தலைமையிடம் மட்டுமே ஒரு மாவட்டதின் தலைமையிடத்தில் அமையாமல் இருக்கிறது.
தலைமையகம்இக்கோட்டத்தின் தலைமையகம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இந்த பேருந்து போக்குவரத்து கழகத்தின் வாயிலாக
என கிட்டத்தட்ட 4,000க்கும் அதிகமான பேருந்துகளை இந்த கழகம் கொண்டுள்ளது. இது தமிழக போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் 49% பேருந்துகளை கொண்டுள்ளது. கும்பகோணம் போக்குவரத்துக் கழக பணிமனைகள் அமைந்துள்ள மாவட்டங்கள்தென்னிந்திய மாநிலங்களிலேயே மிகப்பெரிய அரசுப் போக்குவரத்து கழகமாக கும்பகோணம் போக்குவரத்து கழகம் விளங்குகிறது. இந்த போக்குவரத்து கழகம் கீழ்கண்ட மாவட்டங்களிலும், தீவு பிரதேசத்திலும், யூனியன் பிரதேசத்திலும் தனது சேவையை வழங்குகிறது
ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவையை வழங்குகிறது. இது தவிர , திருப்பூர்,ஈரோடு, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை,கோயம்புத்தூர் , சென்னை ஆகிய முக்கிய மாவட்டங்களுக்கு அதிகமாக பேருந்துகளை இயக்குகிறது. இது தவிர மற்ற மாவட்டங்களுக்கு குறைவான பேருந்துகளை மட்டுமே இயக்குகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கும்பகோணம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு கோட்டங்களும் 20க்கும் அதிகமான மாவட்டங்களில் தனது கிளைகளை கொண்டுள்ளது. வரலாறுஅரசுப் பேருந்துகள் என்ற சிந்தனையோடு தனியார் பேருந்துகளை நாட்டுடைமையாக்கும் திட்டத்தை அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கலைஞர். கருணாநிதி கொண்டு வந்தபோது கும்பகோணத்தில் இயங்கிய தனியார் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு சோழன் போக்குவரத்துக்கழகமாக பரிணமித்தது. இதன் தலைமையகம் கும்பகோணத்தில் அமைந்தது. 1997 ஆம் ஆண்டு போக்குவரத்துக்கழகங்களில் இருந்த தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டபோது சோழன் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) என்ற மாற்றப்பட்டது. தீரன் சின்னமலை. வீரன் அழகுமுத்துக்கோன், மருது பாண்டியர் ஆகிய போக்குவரத்துக் கழகங்களும் கும்பகோணத்துடன் இணைக்கப்பட்டன. மண்டல அலுவலகங்கள்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் - கும்பகோணம் கோட்டம் ஆறு மண்டலங்களுடன் இயங்கி வருகிறது.[1] அவை: பணிமனைகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia